<<
Upcoming Events
Space Directory
Web Albums
Documents Download
Audio
Radio
Search in ThiruArutpa

 

அருட்பெருஞ்ஜோதி                                                                              அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை                                                                             அருட்பெருஞ்ஜோதி!
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!
வள்ளலார் வருகை
சூரிய சந்திர ஜோதியுட் ஜோதி என்
றரியர் புகழ்தரும் அருட்பெருஞ்ஜோதி
கொள்ளைவினைக் கூட்டுறவால் கூடிய பல்சமயக்
கூட்டமும் அக்கூட்டத்தே கூவுகின்ற கலையும்
கள்ளமுறும் அக்கலைகள் காட்டிய பல்கதியும்
காட்சிகளும் காட்சி தரு கடவுளரும் எல்லாம்
பிள்ளை விளையொட்டென நன் கறிவித்திங் கெனையே
பிள்ளை எனக் கொண்டு பிள்ளைப் பெயரிட்ட பதியே
தள்ளறிய மெய் அடியார் போற்ற மணி மன்றில்
தனி நடஞ்செய் அரசே என் சாற்றும் அணிந்தருளே.
-       திருவருட்பா/அருள் விளக்க மாலை
 
 
பேரன்புமிக்க ஆன்மநேயச் சகோதர, சகோதரிகளே. அடியேனின் வந்தனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
 
உலகலாவிய அளவில் நமது அருட்தந்தை திரு அருட்பிரகாச வள்ளலார் அருளிய சன்மார்க்கக் கொள்கை பரவ வேண்டும் என்ற உயர்ந்த எழுச்சிமிகுந்த மேலான எண்ணத்தால் நமது அருமைச் சகோதரர் அருட்திரு செந்தில் மருதையப்பன் அவர்கள் பெருமுயற்சி செய்து இந்த கணினி மூலம் உலகிற்கு சன்மார்க்கச் செய்தியை தர முனைந்து திறம்பட செயலாற்றி வருகிறார். அவர் எடுத்த முயற்சி வெற்றிபெற அடியேனும், இந்த கணினி ஒளிபரப்பின் மூலம் உங்களிடம் சன்மார்க்கக் கருத்துகளை பகிர்ந்து கொள்ள முயற்சிக்கிறேன்.
 
செயல் எல்லாம் இறைவனின் திருவருளால் நிறைவாக நடைபெற எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் திருவடிகளிலும், “சத்குரு வள்ளற்பெருமானின்” திருவடிகளையும் வணங்கி துவங்குவோம்.
 
முதலில் அடியேன் கி. சத்தியமூர்த்தி இந்த இதழின் ஆசிரியர் என்ற முறையில், இதழ் பற்றிய சுருக்கமான சில செய்திகளை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
 
2001 ஆம் ஆண்டு சென்னை மாநகரத்தில், ஐ. சி. எப். என்ற பகுதியில் தமிழகம் தழுவிய அளவில் மிகப்பெரிய சன்மார்க்க மாநாடு ஒன்று, தலைமைச் சங்கம் – வடலூர் என்ற அமைப்பின் மூலமாக நடத்தப்பட்டது. அப்பொழுது சன்மார்க்க சங்கங்களின் செயல்பாட்டை எந்தவித கட்டணமும் இல்லாது வெளியிட வேண்டும் என்ற அவா அடியேன் சிந்தையில் தோன்ற, இது குறித்து ஏற்கனவே நடந்து கொண்டிருக்கும் சன்மார்க்க இதழ்களின் ஆசிரியரை அணுகிக் கேட்டதில், அவர்கள் யாரும் சங்கச் செய்திகளை வெளியிட முன்வரவில்லை.
 
இந்தச் சூழலில்தான் அடியேனின் சிந்தனையில் வள்ளற்பெருமானின் தூண்டுதலால் இந்த “வள்ளலார் வருகை” என்ற மாத இதழை துவங்கும் வாய்ப்பு உருவானது. முதல் அறிமுக இதழ் சற்று அவசரமாக அச்சடிக்கப்பட்டு 2001, 20, 21 ஜனவரியில் நடந்த ‘சன்மார்க்க மாநாட்டில்’ இலவசமாக வெளியிடப்பட்டது. அதன் பிறகு மூன்று மாதங்களில் முறையாக, மாத இதழாக ஆண்டு சந்தா ரூ 25/- பிறகு ரூ 30/- ரூ 40/- என்ற நிலையில் 2007 ஆம் ஆண்டு வரை இறைவனின் திருவருளால் நடைபெற்றது.
 
2005 ம் ஆண்டு வரை அடியேனின் முயற்சியில் வரும் சந்தா தொகையைக் கொண்டும், அடியேனின் பங்காக மீதித் தொகை செலவு செய்தும் நடத்தி வந்தோம். நிறைந்த அன்பர்கள் சந்தா தருவதில்லை. நானும் எவரிடமும் சென்று சந்தா பற்றி வற்புறுத்தி கேட்பதில்லை. இந்தத் சூழலில் கையிழப்பு அதிகமாகவே இதழ் மாத இதழாக தொடர்வதை நிறுத்தி, வருடம் இருமுறை இலவச இதழாக வெளியிட முடிவு செய்தேன். இந்தச் சூழலில் நமது அன்புச் சகோதரர் அருட்திரு செந்தில் மருதையப்பன் அவர்கள் அடியேனுடன் தொடர்பு கொண்டு, இதழை கணினி ஒளிபரப்பின் மூலம் தொடரலாம் என்று கூறியதன் பேரில் இதழ் தற்போது தொடர்கிறது, என்பதை பணிவுடனும், மகிழ்ச்சியுடனும் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
அடியேன் பற்றிய விபரங்கள்: சென்னை வில்லிவாக்கம் பகுதியில் வாழ்ந்த காலத்தில் 1990 ஆம் ஆண்டு அருள்மிகு சர்வசித்தி விநாயகர் ஆலயத்தில் பொருளாளராக பணியாற்றிய பொழுது, வள்ளற் பெருமான் இயற்றிய திருஅருட்பா ஓதுதல். அந்த ஆலயத்தில் அமரர் தவத்திரு புருசோத்தம பாகவதர் என்ற சான்றோர் பெருமகனும், மற்ற அன்பர்களும் சேர்ந்து ஓதுவார்கள். அடியேன் ஆலய நிர்வாகத்தில் இருந்ததால் அந்த நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் அரிய வாய்ப்பு கிடைத்தது.
 
என்னை அறியாமல், திருவருட்பா படிக்க ஆர்வம் வந்தது. அதன் பிறகு தான் “சன்மார்க்கம் சார்ந்தால்” அசைவ உணவு உண்ணக்கூடாது என தெரிந்து கொண்டு ஓரிரு மாதங்களில் முழுவதுமாக சைவ உணவிற்கு மாறினேன். தவத்திரு புருசோத்தம பாகவதர் உயிரடக்கம் ஆனதும், அவரது மூத்த மகன் அருட்திரு எம்.பி. வரதன், கவிஞர் அருள்நம்பி, அருட்திரு. பா. தர்மலிங்கம் போன்றவர்கள் இணைந்து “வள்ளலார் திருவளர் சபை” என்ற அமைப்பை உருவாக்கினர். அதில் அடியேனை இணைச் செயலாளராக பணியாற்ற பணித்தனர்.
 
1990 ஆம் ஆண்டு முதல் ஏற்பட்ட சன்மார்க்க வாழ்வியல் மென்மேலும் வலுவடைந்து, வடலூரில் தலைமைச் சங்கம் துவங்கப்பட்ட போது தலைமைச் சங்கத்தின் - சென்னை மாவட்டக் கிளையின் செயலாளராக பணிசெய்யும் பொறுப்பேற்றேன். தொடர்ந்து கந்தகோட்டம் ஆலயத்தின் நூலகத்தில் பிரதி மாதம் நான்காம் ஞாயிறன்று மாலை 3.30 மணி முதல் 6.30 மணி வரை மாதக் கூட்டத்தை நடத்தி வந்தோம். அந்தத் தருணத்தில் தான் முன்னர் குறிப்பிட்ட மாநாடும் நடைபெற்றது. 2002 ல் அடியேன் குடியிருப்பை மாற்றி திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருமுல்லைவாயிலுக்கு வந்ததால், சென்னை மாவட்ட அன்பர்களே அந்த சங்க நிகழ்வுகளை நடத்த ஏதுவாக அடியேன் எனது செயலாளர் பொறுப்பை விடுத்தேன். தற்போதும் கவிஞர் அருள்நம்பி தலைவராகவும், அருட்திரு அரிமா க. துரைராஜ் செயலாளராகவும், அருட்திரு எ. வை. சுந்தரம் பொருளாளராகவும் இருந்து மேற்படி சங்க நிகழ்வுகளை சிறப்பாக செய்து வருகின்றனர்.
 
பின்னர் திருவள்ளூர் மாவட்டத்தில் 2002 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட திருவள்ளூர் மாவட்ட சன்மார்க்க சங்கத்தில் அருட்திரு. வி.ஜி. ஜோதிமணி அவர்கள் தலைவராகவும், அடியேன் செயலாளராகவும், அருட்திரு. கண்ணன் பொருளாளராகவும், அருட்திரு. சு. ராஜேந்திரன் இணைச் செயலாளராகவும் இருந்து பணியாற்றிய தருணத்தில் தலைவர் திரு. வி.ஜி. ஜோதிமணி அவர்களின் நன்முயற்சியால் 2004 ஆம் ஆண்டு ஆவடியை கோவர்த்தனகிரி என்ற பகுதியில் அமைந்துள்ள விவேகானந்தா பள்ளியில் மிகப்பெரிய தமிழகம் தழுவிய மாநாடு நடைபெற்றது. அம் மாநாட்டிலும் அடியேன் பணியாற்றிடும் வாய்ப்பைப் பெற்றேன்.
 
பின்னர், மாநாடு முடிந்தவுடன், நாங்கள் கூட்டமைப்பாக வடலூர்-மேட்டுக்குப்பத்தில் சன்மார்க்கச் சோலை என்ற பகுதியில் “சன்மார்க்க சாதுக்கள் மையம்” என்ற அமைப்பை உருவாக்க முடிவு செய்து, மேற்படி திருவள்ளூர் மாவட்ட செயலாளர் பொறுப்பை விடுத்தேன். பின்பு 25.2.2008 தைப்பூசத்தையொட்டி நடைபெற்ற திருவறை தரிசன நாளன்று மேற்படி ‘‘சன்மார்க்க சாதுக்கள் மையம்’’ கட்டிடப்பணிகள் நிறைவடைந்து, தவத்திரு சென்னை உயிர் உறவு கூ. சங்கரைய்யா அவர்கள் தலைமையில், திருக்கண்டீஸ்வரம் இல்லற ஞானி சாதுசிவராமன் ஐயா அவர்களால் திறப்புவிழா செய்யப்பட்டது. சிறப்பு மலரை தவத்திரு கோவை சிவப்பிரகாச சுவாமிகள் வெளியிட தஞ்சை பொ. சம்பந்தம் அவர்கள் முதல் பிரதியை பெற்றுக் கொண்டார்.
 
எண்ணற்ற சன்மார்க்கச் சான்றோர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
 
தற்போது தலைவர் திரு. நா. தர்மலிங்கம், செயலாளர் கி. சத்தியமூர்த்தி (அடியேன்), திரு. எ.வை. சுந்தரம் இணைசெயலாளர், கி. குப்புசாமி பொருளாளர், காப்பாளர்கள் அருட்திரு. A. மகேஸ்வரன், அருட்திரு. K.N. ராஜ்குமார், அருட்திரு. K.N. பார்த்தசாரதி, திரு. சுபம் பார்த்தசாரதி என்ற அமைப்பின் மூலம், பிரதி மாதம் பூசதினத்தன்று காலை 4 மணி அளவில் திருஅகவல் பாராயணமும், தொடர்ந்து பகல் உணவு அன்னதானமும் சிறப்பாகவும், வள்ளற்பெருமான் கூறிய எளிமையான முறையிலும் உணவு தயார் செய்து வழங்கி வருகிறோம்.
 
அடியேனின் இந்த அறிமுக உரையை தாங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக வெளியிட்டுள்ளோம்.
 
ஆசிரியர்
கி. சத்தியமூர்த்தி

 


 

 

அன்புடையீரே,
 
இவ்விதழ் வெளிவர நன்கொடை அளித்து உதவிய அனைத்து நண்பர்களுக்கும் அடியேனின் உளமார்ந்த நன்றியையும், வாழ்த்துக்களையும் உரித்தாக்குகிறேன்.
 
இதுபோன்ற இதழ் தொடர்ந்து வெளியிட தயவுள்ளம் கொண்ட அன்பர்கள் நன்கொடை கொடுக்கலாம்.
 
அன்புடன்,
வள்ளலார் வருகை
கி. சத்தியமூர்த்தி
 

 சன்மார்க்கம் தழைத்தோங்க ஓர் அரிய வாய்ப்பு


வள்ளலார் சமுதாய நலம் மற்றும் கல்வி நிறுவனம் – சென்னை
Vallalar social welfare & Educational Organisation
செயல்பாட்டு விபரங்களுக்கு தொடர்புகொள்க செல் : 9382872726.
நிறுவனர் – தலைவர் : வள்ளலார் வருகை கி. சத்தியமூர்த்தி
துணைத்தலைவர் : எஸ். வீரன், சென்னை. சன்மார்க்க சங்கம் மந்தைவெளி.
செயலாளர் : கே. மனோகரன் சென்னை.
இணைச்செயலாளர் : திரு. செல்வராஜ், திருப்பூர். அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் தருமச்சாலை.
பொருளாளர் : ந. சம்பத்
ஆலோசகர்கள் : திரு. செந்தில் மருதையப்பன் (USA)
                      திரு. சிவக்குமார் சிங்கப்பூர்.

வள்ளலார் சமுதாய நலம் மற்றும் கல்வி நிறுவனம்:
எதிர்கால செயல்பாட்டுத் திட்டங்கள்

1) ஆதரவற்ற சன்மார்க்க ஏழை எளியவரை அவரவர் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள சன்மார்க்க சங்கங்களில் வைத்து பராமரிப்பது.
2) சன்மார்க்கத்தில் உள்ள ஏழை எளிய குடும்பங்களில் உள்ள குழந்தைகளுக்கு ஆரம்பப்பாட கல்வி முதல் மேல் நிலை கல்வி வரை உதவி செய்தல். மற்றும் வேலை வாய்ப்பு பெற்றுத் தருதல்.
3) பொருளாதார வசதி இல்லாத சங்கங்களை புதுப்பித்து செயல்படுத்த முயற்சி மேற்கொள்ளுதல் போன்றவை.
இவற்றை செய்ய நாம் முழுமூச்சுடன் செயல்பட்டால் சன்மார்க்கம் நிச்சயம் தழைக்கும்.
இதுவரை செய்து வரும் செயல் திட்டங்கள்:
வருடம் ஒரு முறை 70 ஆதரவற்ற சன்மார்க்க அமைப்பில் வளர்ந்து வரும் குழந்தைகளுக்கு நோட்டு, பென்சில் பாக்ஸ், பேனா, ஸ்கேல் போன்றவை கொடுத்து உதவுவது.
சுமார் 80 குழந்தைகளுக்கு திருவருட்பா போட்டிகளை நடத்தி, பரிசாக இலவச திருவருட்பா தொகுப்பு மற்றும் சான்றிதழ், நோட்டு, பென்சில் பாக்ஸ், பேனா, ரப்பர், ஸ்கேல் போன்றவற்றை கொடுத்து ஊக்கப்படுத்துதல். மேலும், சுமார் 200 குழந்தைகளுக்கு (போட்டியில் கலந்து கொண்டவர்கள்) மகாமந்திரம் பொறித்த பேனா, சான்றிதழ், இலவச திருஅருட்பா தொகுப்பு முதலியன கொடுத்து வருகிறோம்.

சமீப காலத்தில் செய்த சன்மார்க்க சமுதாயப் பணி:
மேட்டுக்குப்பம் தண்ணீர்ப்பந்தல், தெய்வீக மாமரத்தடி என்ற இடத்தில் சுமார் 60 வருட காலமாக கழிப்பறை, குளியலறை இல்லாது இருந்தது. அவ்விடத்தில் நமது முயற்சியால் சுமார் ரூ. 21, 600 /- பொருட்செலவில் குளியலறை மற்றும் கழிப்பறை கட்டப்பட்டுள்ளது.
குறிப்பு : இந்த இடம் வள்ளற்பெருமான் மேட்டுக்குப்பத்தில் இருந்த பொழுது தாகம் தணிந்து, இளைப்பாறிச் சென்ற இடம் என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்கண்ட பணிகள் மென்மேலும் சிறக்க நல்ல எண்ணம், தயவுள்ளம் கொண்ட அன்பர்கள் பொருளுதவி அனுப்ப விரும்பினால் – vallalar social welfare & educational organisation  என்ற பெயரில்  cheque, அல்லது DD ஆக அனுப்பவும்.


முகவரி : 
வள்ளலார் வருகை கி. சத்தியமூர்த்தி
12, வள்ளலார் தெரு, தென்றல் நகர்,
கிழக்கு திருமுல்லைவாயில், சென்னை – 600 062. 

 


 

K. Sathiya Moorthy
☎: 9382872726
வள்ளலார் வருகை கி. சத்தியமூர்த்தி
12, வள்ளலார் தெரு, லோகேஷ் நகர்,
தென்றல் நகர் கிழக்கு – திருமுல்லைவாயில்
சென்னை / Chennai, Tamil Nadu, India-600062
Home
Documents
Audios
Photo Albums
 
[Collapse]Articles by Category
  2009-ஜுலை
  2009-ஆகஸ்ட்
  2008-ஆகஸ்ட்
  2008-செப்டம்பர்
  2008-அக்டோபர்
  2008-டிசம்பர்
  2009-ஜனவரி
  அகவல் தெளிவுரை – தொடர்
  தெய்வ பாவனை - தொடர்
  2009-ஜூன்
  2010-ஏப்ரல்
  2011-ஏப்ரல்

All the contents including articles, documents, audio and video on this Vallalar Varugai - வள்ளலார் வருகை பத்திரிக்கை website is copyrighted and owner of this content. Everything on this website is for everyone free to use, distribute, email it, educational use, view, print, present, download as many times as you want but hosting in another website or making changes to the authors content, audio or documents and video without permission is prohibited.

Powered by VallalarSpace