Vallalar Varugai - வள்ளலார் வருகை பத்திரிக்கை
உண்மையான ஜீவகாருண்ய செயல்பாடுகளைச் செய்ய எது சரியான வழி?

பொதுவாக சன்மார்க்க அன்பர்கள் ஆண்டு விழாவில் மட்டும் அன்னதானம் என்ற பெயரில் உணவளித்துவிட்டு இருந்துவிடுகின்றனர். மேலும், விளம்பர நோக்கத்தில் அதிக சுவையான உணவுகளைச் செய்து உணவளிக்கும் அன்பர்களையும், நன்கொடை கொடுத்து வருவதையும் தவிர்த்தல் நலம். (பயிர்களுக்கு இடையே புல் வளர்கிறது. அதை அகற்றினால் பயிர் பூண்டு செழித்து வளரும்)

சரி, உண்மையாக ஜீவகாருண்யம் செய்யும் அன்பர்களை எப்படி அடையாளம் காண்பது? இந்த எண்ணம் அடியேன் மனதிலும் ஒரு கால கட்டத்தில் எழுந்ததுண்டு, அதன்பிறகு அந்த தேடுதலைத் துவங்கினேன். அதன் பலனாய் அடியேன் கண்ட சில உண்மையான சன்மார்க்க தொண்டு நிறுவனங்களை கண்டறிந்தேன். அவைகள்:

  1. வள்ளலார் தெய்வ நிலையம் வடலூர் / மற்றும் கருங்குழி
  2. வள்ளலார் குருகுலம் – கீரனூர், பழனிக்கு அருகில்.
  3. வள்ளலார் மாணவர் இல்லம் மற்றும் பள்ளி கீழக்கொட்டையூர், கும்பகோணம். (சுவாமி மலை செல்லும் வழி)
  4. வள்ளலார் மாணவர் இல்லம், மாத்தூர், புதுக்கோட்டை அருகில்.
  5. வள்ளலார் மன்றம், 18, கூட்டுறவு காலனி தஞ்சை – 613 007.
  6. திருவருட்பிரகாச வள்ளலார் சத்சங்கம் சன்னதி தெரு, திருவொற்றியூர், சென்னை-19.
  7. தயவு இல்லம், இராமநாதபுரம்.
  8. வள்ளலார் தொண்டு நிறுவனம், அன்னை சத்தியா நகர், கே.கே.நகர், நெசப்பாக்கம், சென்னை-78.
  9. அருள்ஜோதி அன்ன ஆலயம் மற்றும் குருகுலம், கென்னடி சதுக்கம், பெரம்பூர், சென்னை-11.
  10. சத்தியஞான சபை, கிழக்கு தாம்பரம் (விமானப் படை விமானதளம் செல்லும் வழி)
  11. அகர நிலையம், கிருஷ்ணாம்பேட்டை, ராயப்பேட்டை, சென்னை-14.
  12. சென்னை அன்னதான நிலையம் – மேட்டுக்குப்பம் சித்திவளாகம் அருகில்.
  13. இராமலிங்க அடிகள் சர்வதேச அன்னதான அறக்கட்டளை மேட்டுக்குப்பம்.
  14. வள்ளலார் அருள் நிலையம், பெண்ணாடம், விருத்தாச்சலம் அருகில்.
  15. வள்ளலார் தீஞ்சுவை நீரோடை தருமச்சாலை, மேட்டுக்குப்பம்.
  16. சன்மார்க்க சங்கம், காட்டுமன்னார் கோயில்.
  17. அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் தருமச்சாலை, அம்மாபாளையம் திருப்பூர் (வாரணாசி திரையரங்கம் எதிர்புரம்).
  18. வள்ளலார் தருமச்சாலை – வீரபாண், திருப்பூர் (கீரனூர் வள்ளலார் குருகுலம் கிளை)
  19. நடமாடும் சத்திய தருமச்சாலை, திருப்பூர்.
  20. சமரச சுத்த சன்மார்க்க சங்கம் 32, பொன்னியம்மன் கோயில் தெரு, சிம்மக்கல், மதுரை.
  21. வள்ளலார் சத்திய தருமச்சாலை, 21, (மேல்மாடி) கீழவடம்போக்கித் தெரு, கீழமாசி வீதி, மதுரை-1.
  22. சத்திய தருமச்சாலை, திருவாணைக்காவல், திருச்சி.
  23. வள்ளலார் இயலாதோர் காப்பகம், நெ. 204/L.N. புரம் வாராப்பூர்ரோடு, அறந்தாங்கி-614 616.
  24. தயவு இல்லம், இராமநாதபுரம்.
  25. சன்மார்க்க சங்கம், இராஜபாளையம், குருவராஜபுரம்.
  26. தயவு இல்லம் தூத்துக்குடி.
  27. வள்ளலார் சத்திய தருமச்சாலை, திருவண்ணாமலை (குளம் அருகில்)
  28. இதுபோன்ற எண்ணற்ற சன்மார்க்க அமைப்புகள் தமிழகத்தில் உள்ளன. அவைகளின் உண்மையான செயல்பாடுகளை கவனித்து அவர்களுக்கு நன்கொடை அளித்து உதவலாம். இல்லையேல் அவரவர்களால் இயன்ற அளவு ஆங்காங்கு சாலைகளில் நடமாடும் ஆதரவற்ற ஏழை எளியவர்க்கு உணவளிக்கலாம்.
  29. மேலும், புலால் உணவு தவிர்த்து ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியோரை வைத்து நடத்தும் கருணை இல்லங்களை அணுகியும் இந்த ஜீவகாருண்யத்தைச் செய்யலாம்.