Vallalar Varugai - வள்ளலார் வருகை பத்திரிக்கை
சன்மார்க்க சொற்பொழிவாளர்கள் மற்றும் சன்மார்க்கச் சான்றோர்களும் சன்மார்க்கம் தழைக்க எப்படி நடந்துகொள்ள வேண்டும்?

சன்மார்க்க சொற்பொழிவாளர்கள் சமயங்களின் கொள்கையை நேரடியாக தாக்கிப் பேசுவதை தவிர்த்து, சன்மார்க்கத்தின் உண்மையான நிலையை மட்டும் எடுத்துக் கூறவேண்டும். அவர்களாக கேட்கும்பொழுது மட்டும் சமயங்களைப் பற்றி கூறவேண்டும். ஏனெனில் சமயங்களிலிருந்து தான் மக்கள் சன்மார்க்கத்திற்கு வர இயலும். வள்ளற்பெருமானும் தமது உரைநடைப் பகுதியில், சமயங்கள் சன்மார்க்கத்திற்கு அந்நியமல்ல, அநந்யம் என்று கூறி உள்ளதை நினைவில் கொள்வது அவசியம்.


ஒரு சில சன்மார்க்க அன்பர்கள் தாங்கள் ஏதோ மிகப்பெரிய அருள்சக்தியை பெற்றதாகக் கருதி, மக்களை தமது கால்களில் கும்பிடச்செய்து, ஆசீர்வாதம் அளிப்பது, திருநீறு தருவது போன்ற சுத்த சன்மார்க்கத்திற்கு ஒவ்வாத செயல்களை செய்துவருவதையும் தவிர்க்க வேண்டும். இது போன்ற விளம்பரப் பிரியர்களிடம் சன்மார்க்க அன்பர்களும், பொதுமக்களும் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும். தைப்பூசத் திருநாளான இந்த நல்லதொரு நாளில் உறுதி ஏற்போம். நாம், உண்மையான சன்மார்க்க நெறியை கடைப்பிடித்து நாமும் உயர்வோம்! உலகினரையும் உணரவைப்போம்!