DAEIOU - தயவு
2.10.2016 மதுரை அழகர் கோவில் செல்லும் சாலையில் வள்ளலார் வருடாந்திர விழா.
மதுரைப் பகுதியில், கடந்த 60 ஆண்டுகளூக்கும் முன்பாக, வள்ளற் பெருமானாரின் சுத்த சன்மார்க்க நெறி பரவுவதற்கு அடித்தளமிட்டவர்களில், திரு ஜோதி சுப்ரமணியம் ஐயா அவர்களும் ஒருவர். அவர்களது காலத்துக்குப் பின், அழகர் கோவில் செல்லும் சாலையில், வள்ளலார் ஆலயம் ஒன்று அவர்களது வாரிசுகளால் ஏற்படுத்தப்பட்டு, விழா எடுக்கப்பட்டு வருகின்றது. வருடாந்திர விழா, வரும் 2.10.2016 அன்று, அங்கு நடைபெற உள்ளது. அன்பர்கள் அனைவரும் அதில் கலந்து கொண்டு அருள் நலம் பெறுமாறு, விழா ஏற்பாட்டாளர்கள் கேட்டுக் கொள்கின்றனர்.

20140809_222301.jpg

20140809_222301.jpg

DAEIOU - தயவு
28.8.2016 (ஞாயிறு) ம்துரை வடக்காடி வீதியில் ”வள்ளலார் மூட்டிய புரட்சி” புத்தகம் திறனாய்வு..திரு பழ.நெடுமாறன் அவர்களின் ஏற்புரை.
28.8.2016 (ஞாயிறு) ம்துரை வடக்காடி வீதியில் வள்ளலார் மூட்டிய புரட்சி புத்தகம் திறனாய்வு..திரு பழ.நெடுமாறன் அவர்களின் ஏற்புரை. தாம் எவ்வாறு வள்ளற் பெருமானின் புரட்சி குறித்து எழுதினோம் என்பதை விளக்கிய அவரது உரை இதுவாகும்.IMG_20160828_192233.jpg

IMG_20160828_192233.jpg

IMG_20160828_192026.jpg

IMG_20160828_192026.jpg

IMG_20160828_170053.jpg

IMG_20160828_170053.jpg

DAEIOU - தயவு
1.10.2016 Madurai Arumbanur..Elders Home...
மதுரையிலிருந்து அழகர் கோவில் செல்லும் வழியில் 8 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது அரும்பனூர் கிராமம். இங்கு சத்திய ஞான சபை அமைத்து, தர்மச்சாலையினைப் பராமரித்து வரும் திரு தருமலிங்கம் அவர்கள், வரும் 1.10.2016 அன்று, முதியோர் இல்லம் கால் கோள் விழா நடத்த உள்ளார். 1.10.2016 முதல் 5.10.2016 வரையில் திரு அருட்பா முற்றோதல் நிகழ்த்துவதற்கும் அவர் ஏற்பாடு செய்து வருகின்றார்.

அன்பர்கள் திரு அருட்பா முற்றோதல் மற்றும் முதியோர் இல்லக் கால்கோள் விழாவில் கலந்து கொண்டு அருள் நலம் பெறுவதற்கு, அவர் அழைக்கின்றார்.

20150119_184334.jpg

20150119_184334.jpg

DAEIOU - தயவு
28.8.2016 (ஞாயிறு) ம்துரை வடக்காடி வீதியில் ”வள்ளலார் மூட்டிய புரட்சி” புத்தகம் வெளியீடு
மேற்காணும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மூத்த தமிழறிஞர் திரு இளங்குமரனார், அப்புத்தகம் குறித்த தமது திறனாய்வினை வெளியிட்டார்.IMG_20160828_182056.jpg

IMG_20160828_182056.jpg

IMG_20160828_195819.jpg

IMG_20160828_195819.jpg

Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தயவுக் குறள் எண்.322. அதிகாரம் எண்.33. திணை..சுவாமி சரவணானந்தா.
தயவுக் குறள் எண்.322.

அதிகாரம் எண்.33.திணை.

சுவாமி சரவணானந்தா.

=0=0=0=0=0=0=0=0=0=0=0=00=0=0=0=0=0=0=0=0=0=0=

சாதி யிரண்டொழிய சாற்றுங்கால் வேறில்லை

ஆதியிய ர`றிணை யாம். (தயவுக் குறள் எண்.322)

Read more...
20140806_085833.jpg

20140806_085833.jpg

DAEIOU - தயவு
28.8.2016 (ஞாயிறு) ம்துரை வடக்காடி வீதியில் ”வள்ளலார் மூட்டிய புரட்சி” புத்தகம் வெளியீடு
மேற்காணும் திறனாய்வுக் கூட்டத்தில் மதுரை அமெரிக்கன் கல்லூரி தமிழ்ப்பேராசிரியர் திரு பாலசுப்பிரமணியன், தமது நோக்கில்..இந்தப் புத்தகத்தில் உள்ள விவரங்களை விவரித்தார். அவரது பேச்சு அனைவரையும் கவர்ந்தது.IMG_20160828_180239.jpg

IMG_20160828_180239.jpg

IMG_20160828_170738.jpg

IMG_20160828_170738.jpg

Sathiyadeepam, Vadalur.
கொல்லாமையை வலியுறுத்தும் உயிரின் உரிமை என்னும் நூல் இப்பொழுது வீடியோ வடிவில்....


அருட்பெருஞ்ஜோதி

அருட்பெருஞ்ஜோதி

தனிப்பெருங்கருணை

அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.

Read more...
8 Comments
Anandha Barathi
வணக்கம்:

சன்மார்க்க அன்பர் திரு. சிவகுரு ‍‍(சத்திய தீபம் பதிப்பகம்) அவர்களின் நூல் "உயிரின் உரிமை" சைவ உணவு/ ஜீவகாருண்ய பிரசார நூல் இப்போது காணொலிக் குறுந்தகடாக வெளியிடும் பணி நடைபெற்று வருகின்றது, அக்குறுந்தகட்டின் முன்னோட்டத்தினை அன்பர்கள் இங்கு காணலாம், மேலும் விவரம் அறிய விரும்பும் / இப்பணியில் பங்கு கொள்ள விரும்பும் அன்பர்கள் திரு. சிவகுரு ‍‍(சத்திய தீபம் பதிப்பகம்) அவர்களை தொடர்பு கொள்ளலாம்.

தொடர்பு எண்:
09751113330
Wednesday, August 17, 2016 at 05:28 am by Anandha Barathi
Ashok Raj
Best wishes
Wednesday, August 17, 2016 at 10:37 am by Ashok Raj
Sathiyadeepam sanmarkka pathipagam Vadalur
நன்றி ஐயா. இணையத்திலும் whatsapp லும் பார்த்து அன்பர்கள் ஆதரவும், இயன்ற பொருளுதவியும், வாழ்த்துகளும் கொடுத்து வருகிறார்கள். அந்த ஆன்மநேய அன்பர்கள் அனைவருக்கும் இங்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம். விரைவில் உதவிசெய்து வருபவர்களின் பட்டியலை வெளியிடுகிறோம்.

நமக்கெல்லாம் தெரிந்த பழகுவதற்கு எளிமையான நண்பர், திருஅருட்பா உரைநடைப்பகுதிகளை தனது இனியகுரலினால் ஒலிவடிவமாக மாற்றி நமது செவிக்கு சுவை அளிக்கும், அன்பர் திரு. ஆனந்தபாரதி அவர்கள்தான் தனது இனிய குரலினால் இந்த நூலிற்கு ஒலிவடிவம் கொடுத்தார் என்பதை இங்குச் சொல்லி வணங்குகிறோம். எங்களுக்காக தனது நேரத்தை ஒதுக்கி உயிரின் உரிமை நூலிற்கு ஒலிவடிவம் கொடுத்த அவருக்கு எங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்து கொள்கிறோம்.

நன்றி வணக்கம்.

தயவு சூழ்ந்திடுக.
Thursday, August 18, 2016 at 07:42 am by Sathiyadeepam sanmarkka pathipagam Vadalur
Daeiou Team Daeiou.
நல்ல முயற்சிக்கு வாழ்த்துக்கள் பல....
Thursday, August 18, 2016 at 16:46 pm by Daeiou Team Daeiou.
Sathiyadeepam sanmarkka pathipagam Vadalur
நன்றி ஐயா. தயவு சூழ்ந்திடுக.
Friday, August 19, 2016 at 04:49 am by Sathiyadeepam sanmarkka pathipagam Vadalur
Anandha Barathi
Nandri Thiru. Sivaguru ayya
Friday, August 19, 2016 at 05:35 am by Anandha Barathi
Sathiyadeepam sanmarkka pathipagam Vadalur
ஆன்மநேய அன்பர்களுக்கு வணக்கம்.
உயிரின் உரிமை காணொளி குறுந்தகடு (வீடியோ DVD) வெளியிட இல்லறத்தார்களும், சன்மார்க்கச் சாதகர்களும், சாதுக்களும் பொருளுதவி கொடுத்தும் மற்ற அன்பர்களுக்கு எடுத்துச் சொல்லியும் உதவி வருகிறார்கள். சன்மார்க்க சாதகர்கள் தங்களுக்கு உதவியாக வரும் சிறு தொகையில் கூட பெரும் அளவில் இந்தக் காணொளி குறுந்தகடு தயாரிப்புக்கு உதவுகிறார்கள் என்று நினைக்கும்போது மனநெகிழ்வு உண்டாகிறது. அந்த ஆன்மநேய அன்பர்களுக்கு எனது ஆத்மார்த்தமான நன்றியும் வணக்கங்களும் தெரிவித்து பணிகிறேன். எவ்வித வற்புறுத்தலும் இன்றி செய்தி தெரிந்தவுடன் உதவ தேடிவந்த அந்த அன்பர்களின் பெயர்களை வரும் பூசத்தன்று வெளியிட்டு மனநெகிழ்வு கொள்ள விரும்புகிறோம். மேலும் அறிவிப்பு தொடங்கி வரும் பூசத்தினம் வரை உள்ள நாட்களில் உதவிய, உதவும் அன்பர்களின் பெயர்களை பூசத்திற்கு மறுநாள் வெளியிட விரும்புகிறோம். இவ்வாறே ஒவ்வொரு பூசத்திற்கும் மறுநாள் அந்த மாதம் உதவிய அன்பர்களின் பெயர்களை வெளியிட விரும்புகிறோம். அவர்களின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறோம்.
தைப்பூசத் திருநாள் கொடியேற்றத் தினத்தன்று இந்தக் காணொளி குறுந்தகடு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
இது ஆன்மலாபத்தை பகிர்ந்துகொள்ளும் செயலே என்பதனால் அழைப்பின்றி, பொருளுதவி கேட்டு அன்பர்களின் இல்லத்திற்கு செல்வது பொருந்தாது. இப்படி ஒரு பணி நடைபெறுகிறது; இயன்ற உதவி செய்யுங்கள் என்று அறிவிப்பு மட்டுமே செய்கிறோம். அதனால் நீங்கள் மனநெகிழ்வோடு தரும் சிறு தொகையும் ஏற்கிறோம். உங்களின் ஆதரவும், உயிர்கள் நன்மை நிமிர்த்தமான வழிபாடும் போதுமானது.
இந்த வீடியோ தயாரிப்பின் மாதிரிகளை வாட்ஸ்அப்பில் பெற 9751113330 கைப்பேசியில் தொடர்புகொள்ளவும்.
நன்றி! தயவு சூழ்ந்திடுக!
Thursday, August 25, 2016 at 09:26 am by Sathiyadeepam sanmarkka pathipagam Vadalur
Sathiyadeepam sanmarkka pathipagam Vadalur
கொல்லாமை, புலால் உண்ணாமையை வலியுறுத்தும் உயிரின் உரிமை காணொளி குறுந்தகடு வெளியிட இதுவரை வந்துள்ள நன்கொடைகள் விவரம்

மேட்டுக்குப்பம் சாது வெங்கடேஷ் ஐயா அவர்கள் - 5001 ரூபாய்
சடசாமி (எ) திரு.நாகராஜ் சாமி அவர்கள், மேட்டுக்குப்பம் - 2500 ரூபாய்
சன்மார்க்க அன்பர் ஒருவர், மேட்டுக்குப்பம் - 1001 ரூபாய்
திருமதி A.Rமஹாலெக்ஷ்மி அவர்கள், திரு. T.Rகண்ணன் ஐயா அவர்கள், மதுரை - 1001
குழந்தை சிவ. ஜீவகாருண்யா, வடலூர் -1001
திருமதி. S.பிரேமா, திரு. G.செல்வக்குமார் ஐயா அவர்கள், நெய்வேலி -1001
செல்வன் S.ஷரண்குமார், நெய்வேலி - 1001
செல்வன் S.தில்ஷன்குமார், நெய்வேலி - 1001
திரு. G.விஜி அவர்கள், திருமதி. V.ஹேமா அவர்கள், குழந்தை. V.ஹரிபிரியன், கடலூர் - 1001
குழந்தை S.ரித்திக், ஜானகியம்மாள் நகர், வடலூர் - 501
திரு. A.R.கோபிநாத் ஐயா அவர்கள், மதுரை - 501
திரு. A.R.ரங்கநாதன் ஐயா அவர்கள், மதுரை - 501
சாது ராகவன் அவர்கள், மேட்டுக்குப்பம் - 201
சாது பாஸ்கர் அவர்கள், மேட்டுக்குப்பம் - 201
தயவுமிகு ராணிஅம்மா அவர்கள், மேட்டுக்குப்பம் - 201
சாது சிவா அவர்கள், மேட்டுக்குப்பம். - 101
திரு. A.R.தினகரன் ஐயா அவர்கள், மதுரை. - 101
திரு. A.R.ஸ்ரீதரன் ஐயா அவர்கள், மதுரை. - 101
திரு. A.R.வைஜெயந்தி மாலா அவர்கள், மதுரை. - 101
செல்வன் K.ரிஷி, மதுரை. -101.
செல்வன் K.விக்ரம் , மதுரை. - 101.
திரு. S.K.ராஜாராமன் ஐயா அவர்கள், மதுரை - 101
திரு. D.பிரசாத் ஐயா அவர்கள், மதுரை. -101
திருமதி. S.R.செல்வி அவர்கள், மதுரை. 101
திருமதி. T.R.ராஜேஸ்வரி அவர்கள், மதுரை. - 101
திரு. T.R.சசிக்குமார் ஐயா அவர்கள், மதுரை. - 101


இவர்களின் ஜீவகாருண்ய பணி மேலும் மேலும் சிறந்து ஆன்மஇன்ப லாபத்தை அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம். மற்ற அன்பர்களும் பொருளுதவி செய்து ஆன்மஇன்ப லாபத்தை பகிர்ந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். அன்பர்கள் டிவிடி (Empty DVD) வாங்கி கூரியரில் அனுப்பியும் உதவலாம்.

5000 டிவிடி மற்றும் 5000 புத்தகம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. ஒரு டிவிடி மற்றும் ஒரு புத்தகம் சேர்த்து 50 ரூபாய் அடக்கவிலை. அன்பர்களின் தயவால் 30 ரூபாய்க்கு கொடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
நன்றி! தயவு சூழ்ந்திடுக.

அனுப்ப வேண்டிய முகவரி:
சத்தியதீபம் சன்மார்க்கப் பதிப்பகம்
66பி, லெக்ஷ்மி காம்ப்ளக்ஸ்,
நெய்வேலி மெயின் ரோடு, வடலூர்.
பேசி: 9751113330.
www.sathiyadeepam.blogspot.com
2 days ago at 13:01 pm by Sathiyadeepam sanmarkka pathipagam Vadalur
DAEIOU - தயவு
28.8.2016 (ஞாயிறு) ம்துரை வடக்காடி வீதியில் ”வள்ளலார் மூட்டிய புரட்சி” புத்தகம் வெளியீடு
மேற்காணும் விழாவில், ஐயா திரு பழ.நெடுமாறன் அவர்கள் எழுதி வெளியிட்ட புத்தகத்தைப் பற்றி அன்பர்கள் சிலாகித்துப் பேசினர்.IMG_20160828_173706.jpg

IMG_20160828_173706.jpg

DAEIOU - தயவு
27.8.2016 மதுரையில் உலகத் திருக்குறள் பேரவை சார்பில் சொற்பொழிவு நடைபெற்றது.
மேற்காணும் கூட்டத்தில், சிறப்பு சொற்பொழிவாளரான. திரு மோஹன் அவர்கள் (ஓய்வு பெற்ற பேராசிரியர்) பேசினார். அதனை அன்பர்கள், கேட்கலாம். தலைப்பு திருக்குறளில் பொதுமையும், புதுமையும்....vlcsnap-2014-08-21-21h40m17s55.png

vlcsnap-2014-08-21-21h40m17s55.png

DAEIOU - தயவு
28.8.2016 (ஞாயிறு) ம்துரை வடக்காடி வீதியில் ”வள்ளலார் மூட்டிய புரட்சி” புத்தகம் வெளியீடு
மதுரை வடக்காடி வீதியில் திரு பழ.நெடுமாறன் ஐயா அவர்கள் எழுதிய வள்ளலார் மூட்டிய புரட்சி நூல் அன்பர்களால் பெற்றுக் கொள்ளப்பட்டது.DEXATI20160319185403.png

DEXATI20160319185403.png