இராமலிங்க அபயம் துணை
வள்ளலாரைப் பற்றிய எனக்குத் தெரிந்த எல்லா உண்மைகளையும் இங்கே எழுத எண்ணுகிறேன். வள்ளலாரின் பக்தி,தயவு,ஒழுக்கம்,தவம் ஆகிவற்றின் பயனாக இறைவனே வள்ளலாரிடம் அவர் இருந்த இடம் தேடி வந்து கலந்துகொண்டார்.இதனால் வள்ளலார் வேறு இறைவன் வேறு என்ற நிலை மாறி வள்ளலாரே இறைவனாக இருப்பது உண்மை. தனது தூல தேகத்தை மண்ணுக்கோ நெருப்புக்கோ விடாமல் ஞான தேகம் பெற்று இன்றும் தன் உடலோடு இருக்கும் ஒரே ஒரு மகான் இந்த உலகத்திலேயே வள்ளலார் ஒருவர்தான்.அவரை ஒரு சாதாரண குருவாக மட்டும் எண்ணாமல் இறைவனாகவே புரிந்துகொள்ளுங்கள்.
உலகத்தில் உயிர்களுக்கு உறும் இடையூறுகளை எல்லாம் நீ அடைந்து விலக்குக என்று ஆண்டவன் வள்ளலாருக்கு ஆணை இட்டதோடல்லாமல் அவரை நமக்குத் துணையாகவும் வைத்திருக்கின்றான்.நமக்குத் துணையாக இருக்கும் வள்ளலார் நமக்கு வரக்கூடிய இடையூறுகளையும் நீக்க வல்லவர். எனவே வள்ளலாரை வணங்கி நாம் இன்பமான வாழ்வு பெற்று வாழ்வோம்.வள்ளலார் இருந்த இடம் தேடி வந்து ஆண்டவன் அவருடன் கலந்து இருவரும் ஒன்றாக உள்ளதால் இறைவன் வேறு அல்ல வள்ளலார் வேறு அல்ல. தன்னை வணங்க வேண்டாம் என்று vallalaar சொன்னதை மட்டும் எடுத்துக்கொண்டு ஏமாந்து போகவேண்டாம்.அவர் தன்னடக்கம் மிக்கவர்.அதனால் அவ்வாறு சொன்னார்.இந்த ஜகத்தில் உள்ளவர்கள் மிகத் துதிக்கத் தக்கோனாக என்னைவைத்து என் அகத்தும் புறத்தும் இறைவன் விளங்குகின்றான் என்பது போன்ற அனேக பாடல்கள் அருட்பாவில் உள்ளன. அவற்றையும் நாம் ஏற்றுக்கொள்வோம்.வள்ளலாரை வணங்குவோம் இடர்கள் அனைத்தும் நீங்கப் பெற்று அவரது துணையுடம் இன்பமாக வாழ்வோம். நான் சன்மார்கத்திற்கு 1958 வது ஆண்டு வந்தேன். இப்பொழுது எனக்கு வயது 75 ஆகிறது. வள்ளலாரையே தெய்வமாக ஏற்றுக்கொண்டபிறகு நான் அடைந்துவரும் அனுபவங்கள் ஏராளம் ஏராளம். சொன்னால்;தற்பெருமை என்றோ அல்லது பொய் என்றோ மற்றவர்கள் நினைக்கலாம்,சொலலலாம். உண்மையை நானும் என்னைச் சார்ந்தோரும் நன்கு அறிவர். நாயன்மார்களும் அடியார்களும் அடைந்தார்கள் என்று படிக்கிறோம். நான் இன்று அடைவது உண்மை. வள்ளலாரை ஒரு குருதான் என்று ஏமாந்து போகாதீர்கள். அவரைத் தெய்வமாக ஏற்று வணங்குங்கள். நான் அடைந்துகொண்டிருக்கும் ஆனந்தத்தை நீங்களும் அடையலாம்.நான் அவரைப் பற்றி இருபது புத்தகங்கள் எழுதியுள்ளேன். வாய்ப்பு உள்ளவர்கள் படித்துப் பார்க்கலாம். வள்ளலார்ட நம்மோடே இருக்கிறார்.நன்றி இந்தச் சங்கத்திலே வார வழிபாடு,மாதாந்திர வழிபாடு, சத்விசாரம் ஆண்டுதோறும் நம் பெருமானாரின் பிறந்த தின வழிபாடும் நடைபெறுகின்றது.வந்தனம் நன்றி முபா
Welcome to SANMARKA SANGAM AT ALWARTHIRUNAGAR - MUPA

இராமலிங்க அபயம் துணை
Do not delete this word/this line, you can add content before this line