SANMARGA SANGAM ALWARTHIRUNAGAR-mupa
தூக்கம் குறையுமா
தூக்கத்தைக் குறைப்பது எப்படி?
உலகியல் வாழ்க்கையில் பல மணி நேரம் தூங்குகிறோம். இரவில் மட்டுமல்ல பகலிலும் எப்போதெல்லாம் நேரம் கிடைக்கின்றதோ அப்போதெல்லாம் நாம் தூங்குவதற்குத் தயங்குவதே இல்லை. பேருந்தில் பயணம் செய்யும் போதெல்லாம் கூட தூங்குகிறோம். நாம் சரியாகத் தூங்கவில்லை என்றால் மறுநாள் உடம்பெல்லாம் வலிக்கிறது. எந்த வேலையும் செய்யமுடிவதில்லை .நாம் சரியாகத் தூங்கவில்லையே என்ற எண்ணமே மோலோங்கி நிற்கின்றது. நன்றாகத் தூங்கினால் மறுநாள் நாம் சுறு சுறுப்பாக வேலை செய்கிறோம் .மகிழ்ச்சியாகவும் இருக்கிறோம். தூங்க வில்லை என்றால் மறுநாள் எந்த வேலையும் செய்ய முடிவதில்லை. இது எல்லோருடைய அனுபவம் ஆகும்.
உறங்குவது போலும் சாக்காடு மீண்டும் எழுவது போலும் பிறப்பு என்று திரு வள்ளுவர் எழுதியுள்ளார். இதற்கு என்ன பொருள். தூக்கம் என்பது மரணத்தைப் போன்றது பின்பு விழிப்பது பிறவி எடுத்தது போன்றதாம். நாம் தூங்கவேண்டும் என்றுதான் படுக்கிறோம் .யாராலாவது தூக்கம் வந்த நேரத்தைச் சொல்லமுடியுமா. விழித்த பிறகுதான் தூங்கினோம் என்பது தெரியுமே தவிர தூக்கம் எப்போது வந்தது என்று யாருக்கும் தெரியாது.அதேபோல் மரணம் என்பதும் வரும்போது தெரியாது.தூங்கும்போது நமக்கும் உலகத்திற்கும் எந்த விதத் தொடர்பும் இல்லை.இறந்து போனாலும் அதே கதிதான். ஆனாலும் தூங்குவதற்குப் பயப்படுவதே இல்லை.
மருத்துவர்கள் கூட ஒவ்வொரு மனிதனும் குறைந்தது ஆறு மணி நேரமாவது தூங்க வேண்டும் என்கிறார்கள். ஆனால் வள்ளலாரோ மூன்றரை அல்லது நான்கு மணி நேரமே போதும் என்கிறார்.
ஒருவன் ஒரு மணி நேரம் தூங்கப் பழக்கம் செய்வனானாகில் அவன் ஆயிரம் ஆண்டுகள் ஜீவித்திருப்பான் என்றார். அவரைப் பொறுத்த வரையில் அவர் தூக்கத்தை அடியோடு ஒழித்து விட்டதாக அறிவிக்கின்றார்.
அவர் எப்படி தூக்கத்தை ஒழித்தார். நாம் எப்படித் தூக்கத்தை ஒழிப்பது?
ஆகாரம் அரை தூக்கம் அரைக்கால் மைதுனம் வீசம் பயம் பூஜ்யம் என்பது வள்ளலார் வாக்கு.
ஆகாரம் அரை என்பது என்ன. அரை என்பதை எப்படி எழுதுவோம். 1/2 இப்படித்தானே எழுதுவோம். அதாவது ஒரு நாளைக்கு இரண்டு வேளைதான் சாப்பிட வேண்டும் என்பதுதான் பொருள்.. நாம் மூன்று வேளை நான்கு வேளை கூட சாப்பிடுகிறோம். இது தவறு ஒரு நாளைக்கு இரண்டு வேளை மட்டுமே சாப்பிடவேண்டும். ஆகாரம் குறைந்தால் தூக்கமும் குறையும். பகலில் சாப்பிடும் அளவு எவ்வளவோ அதில் பாதி மட்டும்தான் இரவில் சாப்பிடவேண்டும் என்றார் வள்ளலார். இந்த உணவுப் பழக்கத்தால் தூக்கத்தைக் கட்டுப்படுத்தலாம்.
இருட்டில் தூங்கக்கூடாது. நல்ல வெளிச்சம் இருந்தால் தூக்கம் குறையும்.மெல்லெனத் தூங்க வேண்டும் என்றார் வள்ளலார். அது எப்படி .இரவில் வெளிச்சத்தில் தூங்கிப் பாருங்கள். மெல்லெனத் தூங்குவது எப்படி என்று தெரியும்.
தூங்கி எழுந்தால் சுறு சுறுப்பு உண்டாகிறதே அது எப்படி என்று அறிந்துகொள்ளவேண்டும். நாம் தூங்கும்போது நம்முடைய மூளையில் இருந்து சில கதிர்கள் உற்பத்தி ஆகின்றன. அவைதான் நமக்கு சுறு சுறுப்பைத் தருகின்றது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றார்கள்.அதனால் நமக்குத் தூக்கம் தேவைப்படுகிறது.
ஒருவன் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் தூங்கப் பழக்கம் செய்வானாகில் அவர் ஆயிரம் ஆண்டுகள் ஜீவித்திருப்பான் என்றார் வள்ளலார் அது எப்படி சாத்யமாகும்.
ஒருவன் ஒருமணி நேரம் தியானம் தவம் செய்தால் பத்து மணிநேரம் தூங்கினால் எவ்வாவு கதிர்கள் உற்பத்தி ஆகுமோ அவ்வளவு கதிர்கள் தியானம் தவம் செய்த ஒரு மணி நேரத்தில் கிடைத்து விடுகிறதாம்.எனவே ஒரு மணி நேரம் தவம் செய்தால் அவன் பத்து மணி நேரம் தூங்கியதற்குச் சமமாகும். தவம் செய்தால் தூக்கம் குறையும்.
நாம் இரவு சரியாகத் தூங்க வில்லையே என்ற எண்ணத்தையும் சோம்பேறித் தனத்தையும் ஒழித்துவிடவேண்டும். வள்ளலார் தூக்கமெனும் சோம்பேறிப் பயலே என்று பாடியுள்ளார். சோம்பேறித் தனத்தை ஒழித்தால் தூக்கம் குறையும்.
ஒருமணிநேரம் தூக்கம் என்றது நாம் தூங்குகிற தூக்கம் அல்ல. தவமே ஆகும். தூங்காத தூக்கத்தில் தூக்கிய பாதம் என்ற ள்ளலார் பாடல் தூக்கம் என்பது தவமே என்று விளக்குகிறது.
இரவில் தயிர் கீரை சாப்பிடுவதைத் தவிர்க்கவேண்டும்.தூக்கத்தைக் குறைக்க இதுவும் ஒரு வழியாகும்.

 

4 Comments
manohar kuppusamy
Dear Iyya, can u explain the conculsion of the THAVAM- ON YOUR ABOVE MESSAGE.
Thursday, April 13, 2017 at 09:02 am by manohar kuppusamy
Muthukumaaraswamy Balasubramanian
தவம் என்பது மனதைச் செயல் பட வொட்டாது நிருத்துதல்தான்/வேறு ஒன்றும் இல்லை. நன்றி .
Monday, November 20, 2017 at 07:45 am by Muthukumaaraswamy Balasubramanian
bhavani   Shankar
Useful guidance
Thursday, November 23, 2017 at 02:46 am by bhavani Shankar
Sathyamangalam.  Ramanatham Sathyanarayanan  Sathyanarayanan.  S.R
Manamirunthaal margham undu
Tuesday, February 13, 2018 at 18:41 pm by Sathyamangalam. Ramanatham Sathyanarayanan Sathyanarayanan. S.R