Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தயவுக் குறள் எண்.322. அதிகாரம் எண்.33. திணை..சுவாமி சரவணானந்தா.
தயவுக் குறள் எண்.322.
அதிகாரம் எண்.33.திணை.
சுவாமி சரவணானந்தா.

=0=0=0=0=0=0=0=0=0=0=0=00=0=0=0=0=0=0=0=0=0=0=

சாதி யிரண்டொழிய சாற்றுங்கால் வேறில்லை
ஆதியிய ர`றிணை யாம்.             (தயவுக் குறள் எண்.322)

=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0

குறள் விளக்கம்.

     இச்சன்மார்க்கத்தில் உயிர்கள் இரு சாதியாகப் பிரித்துக் கூறப்படும். அவை உயர்திணை, அ`றிணை என்பனவேயாம். மற்றபடி உயர்ந்தவர், தாழ்ந்தவர், சைவர் அசைவர், கற்றவர், கல்லாதவர், ஆண், பெண், என்பன போன்ற இனப் பிரிவுகள் கொள்ளப்படமாட்டா.

     சிறந்த திணை உடைய மாந்தர்களே உயர்திணை உயிர் எனவும், அ`து இல்லாத மற்றெல்லா உயிர்களும் திணை அற்றன (அல்+திணை) அ`றிணை எனவும் கூறப்படும்.

     உயர்திணை உயிராகிய மனிதன்தன் அருள் ஒழுக்கத்தால் எல்லாவற்றிற்கும் ஆதி ஆகிய கடவுட் சார்பு கொண்டு வாழ வல்லவன் ஆகின்றதால், இவ்வுயர் திணைக்கு ஆதி அன்னும் அடைமொழி பொருத்தம் உடைத்தாம்.
20140806_085833.jpg

20140806_085833.jpg