Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தயவுக் குறள் எண்.576 அதிகாரம் எண்.58..விசார சங்கற்பம்..சுவாமி சரவணானந்தா.
தயவுக் குறள் எண்.576.
அதிகாரம் எண்.58..
விசார சங்கற்பம்.
சுவாமி சரவணானந்தா.

=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0==

பகரான்ம பீடத்தே பற்றுவைத்துக் கற்ற
சகரநிலை சங்கற்பச் சார்பு.                       (தயவுக் குறள் எண்.576).

=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0

குறள் விளக்கம்.

சங்கற்பம் என்ற சொல், சம்+கல்+பம் என்னும் முந்நிலை கொண்டதாம். இவற்றின் விளக்கம் : 1. சம் = சத்தாகிய கடவுட் சோதி; 2, கல் = சித்து என்னும் ஞானமாகிய மெய்யறிவு விளக்கம் வெளிப்படுதல்; 3, பம் = பகர வடிவ பீடத்தில் ஆன்மானுபவம் ஆனந்தமாகத் திகழ்வது. ஆகவே, ஆன்ம நிலையத்து கற்பதினால் அடையப் பெறுகின்ற கடவுட் சோதி அனுபவமே சங்கற்ப வடிவு கொண்டு இலங்குகின்றதாம்.

பகர ஆன்ம பீடம் என்பதற்கு, பகரப்படுகின்ற அல்லது புகழ்ந்துரைக்கப்படுகின்ற ஆன்ம இருக்கையுமாம்.


IMG_20160317_143353.jpg

IMG_20160317_143353.jpg