Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
ஞான சபை தென்முகங் கொண்டு விளங்குவதின் தத்துவம்.
     வடதிசையில் துருவ நட்சத்திரமிருந்து எல்லாப் பொருள்களையும் ஈர்த்துக் கொண்டுள்ளது. நம்முடைய தேகத்தில், ஜீவாத்மா பூர்ண சக்தியோடு புருவ மத்தியில் விளங்குவதாம். ஜீவாத்ம சக்தி மன அறிவாய் நின்று தொழில் புரியுமிடம் இருதயத் தானமாகும். மனோகரண சுத்தி வந்து, ஒருமையுடன், சலனமற்று, நிவாத தீபம் போல் ஜீவாத்மாவாய், நமுண்மை வடிவாய் நிற்பது மேற்படி புருவ மத்திய லலாட பீடமாம். நாம் தூய மனத்தோடு தெற்கு நோக்கியிருக்கும்போது, நம் உண்மை வடிவாகிய ஜீவாத்மாவை துருவ சக்தி இழுக்க அவ்வட திசையை நாடுகின்றது. இதற்கு நேர் உட்பாகத்தில் நம் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் சக்தியிருப்பதால், அதிற்போய் நம் ஜீவாத்மா சார்கின்றது. இவ்வைக்கியத்தான் அருட்பெருஞ்ஜோதி நித்திய வாழ்வு சித்திப்பதாம். சாகா நிலை வழங்குவதாம். இது குறித்து, சாகாக்கலா அனுபவம் வழங்கும் நம் சத்திய ஞான சபை தென்முகங் கொண்டு விளங்குவதாம்.  இத் தத்துவத்தைத் தெரிவிக்காமல் உருவாக்கிக் காட்டப்பட்டது நம் நடராஜ வடிவங்களும், தெட்சிணாமூர்த்தி வடிவங்களுமாம்.

சுவாமி சரவணானந்தா.
20140809_222254.jpg

20140809_222254.jpg