Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
ஞான சபைத் தோற்ற ஞாயம் - சுவாமி சரவணானந்தா.
ஞான சபைத் தோற்ற ஞாயம்.    

     இயற்கை யுண்மையராகி, இயற்கை விளக்கத்தோடு, இயற்கை  இன்பத்தை எல்லா உயிர்களுக்கும் வழங்கிக் கொண்டு தனிப்பெருங் கருணையுடன் திகழுகின்ற இயற்கைச் சக்தியே, நம் அருட்பெருஞ் ஜோதிக் கடவுள். இவ்வருட் பெருஞ்ஜோதி சக்தி அணுமுதல் அண்டம் ஈறாக உள்ள எல்லாப் பொருள்களையும் சிருஷ்டி செய்து, நிலைப்பித்து, குற்றமொழித்து, பக்குவம் வருவித்து, விளங்கச் செய்து கொண்டுள்ளது. இங்ஙனம் எங்கும் நிறைந்த கடவுட் சக்தி பூரண விளக்கத்தோடு நம் அறிவுப் பீடத்தில் வெளிப்பட்டுத் திருவருள் பாலித்தலால் உண்மைக் கடவுள் ஆலயம் நம் ஞான சபையேயாம். இதனால் தான் நம்முடைய மெய்யறிவால் நம் அருட் பெருங் கடவுளை அறிந்து, அருள் வழிபாடியற்றி, அருட்பெருஞ்ஜோதி நிலையும் அடையப்படுகின்றது. ஆகவே, இம்மதி நிறைந்த மனித தேகத்தில் கருவி கரண வளர்ச்சியும், ஆறாதார சக்தியும், ஆறறிவும், தொண்ணூற்றாறு தத்துவங்களும் பூர்த்தியாய்க் கடவுள் அருள் ஆஞ்ஞையால் ஆதிகாலந் தொட்டு அமைக்கப்பட்டனவென்றும், இந்த ஞாயங்கொண்டு, ஞான சபை தோன்றி விளங்கற்கு நம் மனித தேகமே அமைந்ததெனவும் அறிய வேண்டும்.

சத்திய ஞான சபைஎன்னுள் கண்டனன்
சன்மார்க்க சித்தியை நான் பெற்றுக் கொண்டனன்
நித்திய ஞான நிறையமு துண்டனன்
நிந்தை உலகியற் சிந்தையை விண்டனன் ...... (அற்புதம் அற்புதமே...)

சுவாமி சரவணானந்தா.




055.JPG

055.JPG

20140820_143228.jpg

20140820_143228.jpg