Ramnad Sanmarga Sangam
ஆன்மா

ஆன்மா


8, இயற்கை உண்மை ஏகதேசங்களாக விளங்குபவை எவை?

ஆன்மாக்களே

9. இயற்கை விளக்கமாகிய அருள் அறிவுக்கு அறிவாய் விளங்குவதற்கு ஒற்றுமை உரிமை இடங்களாய் இருப்பவை எவை?

ஆன்மாக்கள்

10. ஆன்மாக்கள் ஜீவர்களாகி அதிகரிப்பதற்கு உரிமையாக இருப்பவை எவை?

பூதகாரிய தேகங்கள்


11, ஆன்மாக்களைன் இயற்கை விளக்கம் எது?

ஜீவகாருண்யமே


12. ஜீவர்கள் விஷயமாக உண்டாகின்ற ஆன்ம உருக்கத்தைக் கொண்டு கடவுள் வழிபாடு செய்வது எப்படி?

ஜீவர்களுக்கு ஜீவர்கள் விஷயமாக ஆன்ம உருக்கமாகிய காருண்யம் உண்டாக உண்டாக அந்த ஆன்மாவின் உள்ளிருக்கின்ற கடவுள் விளக்கமாகிய அருள் வெளிப்பட்டுப் பூரணமாக விளங்கும் அத்திருவருள் விளங்கவே, கடவுள் இன்பம் அனுபவமாகிப் பூரணமாகும் அவ்வனுபவம் பூரணமாதலே கடவுள் வழிபாடு என்று அறிய வேண்டும்.

13. ஜீவர்களுக்கு ஜீவர்கள் விஷயமாக ஆன்ம உருக்கம் எப்போது வெளிப்படும்?

பசி, கொடுமை , பிணி, ஆபத்து, தாகம், பயம் இன்மை இச்சை முதலியவற்றால் ஜீவர்கள் துக்கத்தை அனுபவிக்க கண்டபோதும் கேட்ட போதும் அறிந்த போதும் ஆன்ம உருக்கம் உண்டாகும் என்று அறிய வேண்டும்.