DAEIOU - தயவு
12.10.2015 North America Tamil Sanga Members.St.Vallalar's Incarnation Day..Speech by A.Ramanujam from Madurai.
The North America Tamil Sanga Members living in various States of America united together and listened to the discourse on St. Vallalar's Suddha Sanmarga principles.

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை அங்கத்தினர்கள், ஒவ்வொருவராக, ஒட்டு மொத்த இணைப்பில் வந்து, சொற்பொழிவினைக் கேட்கின்றனர்.  எனவே, 5 நிமிட இடைவெளிக்குப்பின் பேச்சு கேட்கும். ஊடே ஊடே திரு அருட்பாவினை அன்பர்கள் பாடுவதையும் கேட்கலாம்.

அன்பர் திரு பொற்செழியன். அமெரிக்கா.
அன்பர் திரு இராமசாமி, அமெரிக்கா.

    It is shared here....
IMG-20151005-WA0000.jpg

IMG-20151005-WA0000.jpg

Audio:

Daeiou  Daeiou.
சென்னையில் வசிக்கும் திருபுவனம் திரு ஜி.ஆத்மநாதன் அவர்களிடம் அமெரிக்காவில் வாழும் குழந்தைகள், திரு அருட்பாவினை, இசை வடிவில் கற்கின்றன. அவர்கள், இந்நிகழ்ச்சியில், தாம் கற்ற அளவில் உள்ள இசையினைக் கொண்டு, அருட்பாவினை அமெரிக்காவிலிருந்து பாடுவதை அன்பர்கள், இந் நிகழ்ச்சியில் கேட்கலாம்.

திருபுவனம் திரு ஆத்மநாதன் செல் எண்: (91) 93801 25989.

இந் நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்தவர்கள், வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் அலுவல் சார் குழுவினர் திரு பொற்செழியன், திரு ராமசாமி ஆகியோர். திரு ராமசாமி, நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும், திரு பொற்செழியன் அவர்கள், தமிழகத்தில் வாழ்ந்த ஆன்மீகப் பெரியோர்களின் வாழ்க்கை முறை மற்றும் வரலாற்றினைச் சுருக்கமாகவும் பேசியுள்ளார். மாதந்தோறும், இந்த அமைப்பில், இலக்கியக் கூட்டம் அங்கு நடைபெறுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
வள்ளல் பெருமானின் ஜீவகாருண்ய ஒழுக்கத்தை, சொற்பொழிவில் கேட்ட ஒரு சில அன்பர்கள், அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் இயங்கி வரும் தமது சங்கங்களின் மூலமாக, வறியோர்க்கு உணவளிக்கும் முயற்சியில், தீவிரமாக ஈடுபட வேண்டும் எனவும் தங்களுக்குள்ளேயே தீர்மானமாக ஒரு முடிவெடுத்தனர்.

மேலும், வள்ளலார் வருவிக்கவுற்ற நாளினைக் கொண்டாடும் விதத்தில், ஜீவகாருண்யப் பணியாக, இந்த சங்கம் சார்பில், அமெரிக்காவில் வசிக்கும் சுமார் 100 வறியோர்களுக்கு உணவளிக்கப்பட்டது என்ற செய்தியினையும், குறிப்பிடுகின்றனர்.

அவர்களது இப் பணி தொடருவதற்கு, அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் துணை நிற்க வேண்டுவோம்.
Wednesday, October 14, 2015 at 00:35 am by Daeiou Daeiou.