DAEIOU - தயவு
16.7.2015 Vadalur.Sathiya Gnana Sabai.Suddha Sanmarga Flag..hoisted.
வடலூர், தமிழகம் மட்டுமின்றி சுத்த சன்மார்க்க நெறியினைத் தெரிந்து கொண்ட உலக நாடுகள் அனைத்திலிருந்தும் சன்மார்க்க அன்பர்கள் எப்பொழுதும் வருகை தரும் ஒரு புண்ணிய பூமி ஆகும்.



    சத்திய ஞான சபைக்குக் கிழக்கே எழுவார் மேடையை அடுத்து, சுத்த சன்மார்க்கக் கொடி பறக்கின்றது. ஆனால், அக்கொடி, பல இடங்களில் கிழிந்துள்ளது. 16.7.2015 அன்று, மாதப் பூச நாளன்று, அக்கொடியினைப் பார்த்தபோது, இந் நிலை இருந்தது. இவ்விதம் கிழிந்த நிலையில் பறந்து கொண்டிருக்கும் அந்தக் கொடியினைப் பார்க்குந்தோறும், சன்மார்க்க அன்பர்களுக்கு மிகவும் வேதனையை அளிக்கின்றது. கிழிந்து போன இந்த கொடியை மாற்றி புதிதாக ஒரு கொடியினை இடம்பெறச் செய்ய வேண்டும் என்பது, எல்லா சன்மார்க்க அன்பர்களின் வேண்டுகோள். செவி சாய்ப்பார்களா அருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலைய அலுவலர்கள் ? 
4 Comments
Daeiou  Daeiou.
ஒருவேளை, (16.7.2015) மாதப் பூச நாளுக்குப் பின்னர், இந்தக் கொடி மாற்றப்பட்டுள்ளதா என்பதை, அங்கு சென்று வரும் சன்மார்க்க அன்பர்கள், தெரிவிக்கும்படிக் கேட்டுக் கொள்ளப்படுகின்றது.
Friday, July 31, 2015 at 15:08 pm by Daeiou Daeiou.
Durai Sathanan
As we earnestly pray for it, by His Grace, your kind request will be surely fulfilled very soon Ayyah. ArutPerumJothi...
Friday, July 31, 2015 at 15:15 pm by Durai Sathanan
Thangavel Gangadharan
ஐயா , தங்களின் தகவல் வெளிப்பட்டால் ,உடனடி களத்தில் இறங்கி தெய்வ நிலைய செயல் அலுவலர் கவனத்திற்கு கொண்டு சென்றவுடன் , செயல் அலுவலர் உடனடி நடவடிக்கை எடுத்தமைக்கு, நாம் நன்றி தெரிவிக்கிறோம்
த .கங்காதரன்
Tuesday, August 4, 2015 at 11:48 am by Thangavel Gangadharan
Daeiou  Daeiou.
அன்பரே....தாங்கள் தெரிவித்ததைப் பார்த்தால், கிழிந்து கந்தல் கந்தலாகக் காட்சியளித்த சுத்த சன்மார்க்கக் கொடி, மாற்றப்பட்டு, புதிய சன்மார்க்கக் கொடி,.. சத்திய ஞான சபையில் கட்டப்பட்டுவிட்டதா ? தாங்கள் தெரிவித்துள்ள தகவலில், செயல் அலுவருக்கு நன்றி தெரிவிப்பதைப் பார்த்தால், ஏதோ...காரியம் நடைபெற்றது போல் தெரிகின்றதே....

உண்மையில், புதிய சுத்த சன்மார்க்கக் கொடி அங்கு ஏற்றப்பட்டிருந்தால், அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருக்கும், இந்தக் கோரிக்கையினை ஏற்றுச் செயல்பட்ட, திரு அருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலைய செயல் அலுவலருக்கும் நன்றி....
Tuesday, August 4, 2015 at 13:21 pm by Daeiou Daeiou.