DAEIOU - தயவு
மதுரை யானைக்கல் பகுதியில் சன்மார்க்க தருமச்சாலை/சங்கம்.
திரு அன்பானந்தம் என்ற மூத்த சன்மார்க்க அன்பர், மதுரை நகரின் மையப்பகுதியான யானைக்கல் அருகே சன்மார்க்க சங்கத்தை இயக்கி வந்தார். சுற்றிலும் உள்ள, வியாபாரப் பெருமக்கள் ஆகியோரிடம் உதவி பெற்று, ஜீவகாருண்யப் பணியாக ஏழைகளுக்கு வழங்குவதற்கென்றே, மதிய உணவு தயாரித்து வந்தார். தினந்தோறும் அருட்பா பாடுதல், வாரந்தோறும் ஒரு கிழமையில், சுத்த சன்மார்க்க நெறியில் மூத்த அன்பர்கள் மூலம், சொற்பொழிவு ஏற்பாடு செய்து, அங்கு சன்மார்க்கம் பரவுவதற்கு அரும் பணி ஆற்றி வந்தார்.

      குறிப்பாகச் சொல்ல வேண்டுமெனில், அந்தப் பகுதி எங்கும் கடை கண்ணிகள் என்றிருப்பதால், தினந்தோறும், லாரிகளில் வரும் சரக்கு வாகனங்களிலிருந்து, சரக்குகளை ஏற்ற இறக்க, அதிகமான கூலித் தொழிலாளர்கள், இந்தப் பகுதியில் காலை மற்றும் மதிய வேளைகளில் வேலை பார்த்துக் களைத்து இருப்பார்கள். மதிய உணவுக்கு எங்கே செல்வது என்ற அவர்களது எதிர்பார்ப்பைப் போக்கும் வண்ணம், சங்கத்துக்கு அருகே தொலைபேசி எக்ஸ்சேஞ் கட்டிடத்தின் அருகே பிளாட்பாரத்திலேயே, அருட்பெருஞ்ஜோதியினை ஏற்றி, மதியம் 12 மணி அளவில், தினந்தோறும், அந்தத் தொழிலாளர்கள், மற்றும், கிராமங்களிலிருந்து வருகை தரும் ஏழை எளியோர் ஆகியோருக்கு அவர், உணவளித்து வந்தார்.

     நல்லதற்குக் காலமில்லை என்பார்கள். இவர் இப்படி, டெலிபோன் எக்ஸ்சேஞ் வாசலிலேயே உள்ள பிளாட்பாரத்தில் தினந்தோறும் அன்னதானம் செய்து வருகின்றார். அது இடையூறாக உள்ளது எனறு, யாரோ ஒருவர் டெலிபோன் துறையின் மேலதிகாரிக்கு புகார் அளித்துவிட்டார். 

     அதன் பேரில் அந்த இடத்தைப் பார்வையிட வந்த அதிகாரி, திடுக்கிட்டுப்போனார். அங்கு விசாரித்த வகையில், தினந்தோறும் பசியோடு வரும் ஏழை எளியோருக்கு, திரு அன்பானந்தம் அவர்கள் பசி போக்கும் பணியினை ஆற்றுவதைப் பார்த்ததும், அவரது உளம் நெகிழ்ந்தது. அருட் பெருஞ்ஜோதியினை தரிசித்து விட்டு, அன்னதானப் பணியினையும் பார்த்து விட்டு, அந்த இடத்தில், அவர் ஜீவகாருண்யப் பணியினைத் தொடர்ந்து செய்யும் வகையில், தம்மாலான ஒரு தொகையினையும் அளித்து விட்டுச் சென்றார். இதனை அன்பர் திரு திரு அன்பானந்தம் அவர்கள் தெரிவித்தார். அவரது காலத்துக்குப் பின்னும், தற்போதும், அங்கு, ஜீவகாருண்யப் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. தினந்தோறும். குறைந்தது, 100 பேர் அங்கு உணவு உண்கின்றனர்.

காலையிலே என்றனக்கே கிடைத்த பெரும் பொருளே
     களிப்பேஎன் கருத்தகத்தே கனிந்தநறுங் கனியே
மேலையிலே இம்மையிலே ஒருமையிலே தவத்தால்
     மேவுகின்ற பெரும்பயனாம் விளைவைஎலாம் தருமச்
சாலையிலே ஒருபகலில் தந்ததனிப் பதியே
     சமரசசன் மார்க்கசங்கத் தலைஅமர்ந்த நிதியே
மாலையிலே சிறந்தமொழி மாலைஅணிந் தாடும்
     மாநடத்தென் அரசேஎன் மாலையும்ஏற் றருளே.............(திரு அருட்பா)
vlcsnap-2014-08-21-20h10m30s201.png

vlcsnap-2014-08-21-20h10m30s201.png

20140821_104010.jpg

20140821_104010.jpg

20140114_081130-1.jpg

20140114_081130-1.jpg