TRUTH OF GOD

 

 
 

       On  1st February 2009, Karunai Sabai Salai is opened successfully. Portriate of His Holiness VALLALAR and Thiruvalluvar are declared opened .

The " DISCIPLINE" is only to be practiced in  Samarasa Sutha Sanmargam. Therefore ,the aforesaid principle of His Holiness Vallalar is taught here. The last conclusion of His Holiness  is only revealed to the  Society.  As pointedout by His HOliness , all religions, margams available in the world are declared as Main obstacles of this Sabai.

 
The Karunai Sabai Salai having a “GRACE HALL” (Sabai) for conducting meetings to realize the truth of GOD as per the doctrines / principles of HIS HOLINESS VALLALAR and  another a Room (SALAI) for Anna Dhanam for only poor people.
 
We, (members of Karunai Sabai – Salai) have decided and promised ourself that we will realize the truth of GOD on the base of HIS HOLINESS philosophy available in only Agaval, Peru-Ubadesam, Vinnappangals and Sutha Sanmarga Songs (called as Sixth Thirumurai). The above all are the primary and integral parts of the “Samarasa Sutha Sanmarga Sathiya Sangam”.
 
We are inviting and requesting you to see our website regularly and to share with us about truth of God.
 
We  invite you to see our site
Compassion is only way to get the Grace of God
 
         Arutperumjothi                Arutperumjothi
         Thaniperumkarunai           Arutperumjothi
Karunai Sabai-Salai Trust.
என்ன காரணம் ? தெரியவில்லையே - APJ அருள்
திருவருட்பிரகாச வள்ளலார் தனக்கு வெளிப்பட்ட தனி மற்றும் உண்மை பொது நெறியாகிய " சுத்த சன்மார்க்கத்தை " சித்திரை முதல் தேதி 1871 அன்று உலகத்தார்களுக்கு வெளிப்படுத்தினார் .

இம்மார்க்கம் குறித்துஅவர் சொல்கையில் ;

#

சுத்த சன்மார்க்கத்திற்கு மற்ற சமய மத மார்க்கங்களும் அல்லாதனவன்றி இல்லாதனவல்ல.

#

பூர்வத்தில் நின்ற மார்க்கங்களுக்கு சுத்த சன்மார்க்கம் அநந்நநியமாக உள்ளது. அதாவது அந்நியமல்ல.

Read more...
Karunai Sabai-Salai Trust.
வள்ளலார் படம் : ”பெருங்கருணை கடவுள் -
வள்ளலார் படம் : பெருங்கருணை கடவுள் -VALLALAR APJ ARUL KARUNAI SABAI

uthuser=0

5 Comments
narayani julu
Thanks a lot. All sangams to show this picture to their members. A great work. My humble thanks to Madurai Karunai Saba and founder APJ ARUL. This video will be published in all language. Please do it. If any help,I will always ready. Thanks all.
Friday, January 20, 2017 at 12:49 pm by narayani julu
alagapillai govinda
sir video not play.
Friday, January 27, 2017 at 10:37 am by alagapillai govinda
Sathyamangalam.  Ramanatham Sathyanarayanan  Sathyanarayanan.  S.R
It is divine call to bring closeness time to share impressive unity among Vallalar followers Global religions too drags to endless way see Kashmir insurgency killings for seventy long years now we Hindus will live in pak if they bring peace in occupied Azad Kashmir why Islamic starte borderless gulf nations deaths refugees exodus is there any religion crush each other we are not sent Sathyam Vallalar vazhi vazvom valarvom vuyarvom vyagathilum vanulaghathlim044-24346793=42850216&996257086 Saidai Sathyam Kasthuriba st 600015
Wednesday, March 14, 2018 at 17:02 pm by Sathyamangalam. Ramanatham Sathyanarayanan Sathyanarayanan. S.R
Sathyamangalam.  Ramanatham Sathyanarayanan  Sathyanarayanan.  S.R
Pl write a card to me I am
72 now willing to speak on inner desire of Vadaloor Anbu
Karunai dhayai Jeevakarunyam is there any missing pl call me to refine my inner tuning to reach global shaping of youths in .1973+1987 I visited Iran gulf Europe extensively to probagater vadaluraar message
Wednesday, March 14, 2018 at 17:14 pm by Sathyamangalam. Ramanatham Sathyanarayanan Sathyanarayanan. S.R
Sathyamangalam.  Ramanatham Sathyanarayanan  Sathyanarayanan.  S.R
Some groups say
Vadalurar kidnapped by imgevworshippers now intercaste s marriagesaccepted constitutionally so politicians need not dividevoters too
Wednesday, March 14, 2018 at 17:22 pm by Sathyamangalam. Ramanatham Sathyanarayanan Sathyanarayanan. S.R
Karunai Sabai-Salai Trust.
யார் சொல்றதுதான் இங்கு உண்மை?? (யானை கதை)– ஏபிஜெ. அருள்.
ஓர் வேண்டுகோள்:

எனது பணி, கருணை சபையின் பணி, என் குடும்பம், என்னை சுற்றியுள்ள அன்பர்களின் குடும்பங்கள் அனைத்துமே, அனைவரிடத்திலுமே ஒரே குறிக்கோள் தான். அது யாதெனில்; வள்ளலாரின் நெறியானது எந்த ஒரு சமய,மத,மார்க்கத்தின் கீழும் இருப்பது அல்ல அவர்தம் நெறி ஒரு தனி நெறி, அவர் தம் மார்க்கத்தின் சாதனம் புதியது, அவர்தம் மார்க்க பயன் புதியது அது மட்டுமில்லைமிகப்பெரியது என்பதை தான் இந்த உலகிற்கு வெளிப்படுத்த வேண்டும் என்பதே எங்களின் குறிக்கோளே அன்றி வேறு ஒன்றுமில்லை. வள்ளலார் கண்டது உண்மை கடவுள், பொது வழி, பெர Read more...
elephant-1.jpg

elephant-1.jpg

elephant leg.jpg

elephant leg.jpg

elephant ear.jpg

elephant ear.jpg

elephant trunk.jpg

elephant trunk.jpg

elephantn tail.jpg

elephantn tail.jpg

10 Comments
ram govi
Arul, your family had done so much contribution for SSSS renaissance then anyone I know off that too beyond our financial abilities, kudos from all of us, Vallalar is with you and he is nurturing your intelligence , VS visitors are witnessing it, the moment I heard about your family, I always think that your kids are of my own all the time, just want to mention our proximity with your family here.

Everyone in Life have different scale of SWOT (strength weakness opportunity threat), its nature's design for all of us to have limitation , its due to fulfill our responsibilities, not to pinpoint anyone here, I have so many limitations in abilities, social interactions, leaderships etc.,

We cannot look at our own back, but all your postings and books have two themes Truth and Non Religiousness, they are core of SSSS, that is very good for new comers but SSSS is more than that, it is deep and inscrutable, just some one talking about religion, caste system, applying holy ashes, giving holy ashes, idol worship etc., doesn't make that individual unworthy, he might be a Utthaman and with the particular maya part attribute just like us without awareness eating two times a day food (No gratitude to God and not surrender triggers hunger) , eating full stomach, sleep and asleep (not wakeful) are continuous sin we do every day.

We all know that we can live without food like Vel, Porur Samy etc., but still we eat and fail to solidify our vital fluid, precipitate and quantimize it to radiate Light.

Also individual might act like Vallalar by visiting temples (for kids and family), apply holy ashes (for business purpose), talking about caste/religion (for scientific enquiry) etc.,

Humans existence are complex to say, just by talking about SSSS we are not superior than who follow religious system, drinking, apply ashes etc., there might be Great Atman seated in the physical body , we can never go near their Noble characters, please don't be deceived, everyone is aware of acahras please let us go beyond, caste and religion talk I am married to an individual from different caste so might be the story from everyone here, we have to discuss here , how to refrain from four evils (food, sleep, senses and fear) scientifically and apply systematic observation, measurement, and experiment, and the formulation, testing, and modification to the process by modern day protocols along with surrender to APJ to not to kick off ego/sympathetic system.

Please do not undermine people who do not follow SSSS principles, observe sharply , we will understand why God had given human sheaths for those individuals, they have Great characters and are little God by themselves.

We have to utilize this birth fully to observe our thoughts and acts to become as that of Vallalar, He had left traces of Truth in his every step in in his Life at Chennai,Vadalur, Mettukuppa and Siddhi Valagam etc., Let us observe, be humble, adhere and become Him.

I listen to Quran (so much of respect for Allah) & Bible as often as possible and these holy scriptures also talks about true SSSS, every literature has Tattwas influenced in it since Peruman had given Supreme key of empathy we can eliminate illusions part on any scriptures, in life , if some message is coming to us , it is driven by APJ, look closely in it, it has a message for us from God.

I like to be in silent most of the time that is call of our Ultimate Guru but this posting is to touch You Sir, also of little trace of Maya of I, please take the Truth of it, we respect and love you, please move forward, Read as much as possible on Science,Technology,Reality, Quantum etc., and share it in your SSSS classes. Good Bye.
Wednesday, March 16, 2016 at 22:14 pm by ram govi
Sivaram Narayan
அன்புடையீர், வள்ளலாரின் நெறி - சமயமத யுத்த நெறி அல்ல! அது சமயமத யுத்தம் கடந்து, சமரசம் காணும் அருட்கருணை நெறி என்பது இங்கு சிறு குழந்தைக்கும் நன்கு தெரியும். இங்குள்ளவர்கள் எல்லோரும் உருவ வழிபாடு மற்றும் ஆச்சாரங்கள் கடந்த பக்குவிகள்தான். யாரும் அபக்குவிகள் அல்லர். ஆகையால், யாரையும் குறைத்துக் குறிக்க வேண்டாம்.அதே சமயத்தில், தாங்கள்தான் யானையின் கால் யானையாகாது என்பதை அறியாது, காலைத் தூண் என்றும், அந்தத் தூணைத் தனித்த நிலையென்றும் பலத்த வம்பு செய்கின்றீர்கள். புதுநெறி என்று சுத்த சன்மார்க்கத்தையும், புதுக் கடவுள் என்று அருட்பெருஞ்சோதி ஆண்டவரையும் கொச்சப் படுத்துவது தாங்கள் தான். தங்களின் போக்கில் பொருள் கொண்டால், தினம்தினம் புதுமார்க்கங்களும், கடவுள் அனுபவங்களும் புற்றீசல்கள் போல் பிறந்த வண்ணம் இருக்கின்ற இன்றைய காலகட்டத்தில், சுத்த சன்மார்க்கமும், அருட்பெருஞ்சோதி ஆண்டவரும் வருகின்ற புதிய தலைமுறையினரால் பழைய தத்துவமாகக் கருதப்படும். கவணக் குறைவு வேண்டாம். அனுபவம் தாங்கள் பெறவில்லை என்றும் ஒருவாறு உண்மையை ஒத்துக்கொள்கின்றீர். உத்தமம். கலக்கம் வேண்டாம். கடவுள் கருணை செய்வாராகுக. ஆகவே, அனுபவம் பெற்ற அருளாளர்கள் உரைப்பதைக் காது கொடுத்துக் கேளுங்கள். சுத்த சன்மார்க்கம் ஒரு புதுமார்க்கம் அல்ல. இவ்வுலகம் மட்டுமல்ல. எத்தனையோ அண்டங்களும் எண்ணற்ற உலகங்களும் உள்ளது. அத்தனைக்கும் பொதுவான மார்க்கமே சுத்த சன்மார்க்கம். அனைவருக்கும் பொதுவான கடவுள் ஒருவரே. அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர். மற்ற மதங்களைத் தோற்றுவித்தவர்களும், சித்த புருஷர்களும், மகான்களும், மற்றும் பலரும் இவ்வையகத்தும், வானகத்தும், மற்றகத்தும் எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஒருவரையே போற்றி வணங்குகின்றார்கள் என்பது இங்கு அறியத்தக்கது. அதில் வள்ளலாருக்குக் கிடைத்தது வேறு யாருக்கும் கிடைக்கப் பெறவில்லை. அறிக உண்மையை! அருட்பா ஆறாம் திருமுறை ஆதாரங்கள்;

"எல்லா உலகமும் என்வசம் ஆயின …"
"நான்செய்த புண்ணியம் என்னுரைப் பேன்பொது நண்ணியதோர்
வான்செய்த மெய்ப்பொருள் என்கையிற் பெற்றுமெய் வாழ்வடைந்தேன்
கோன்செய்த பற்பல கோடிஅண் டங்களும் கூறவற்றில்
தான்செய்த பிண்டப் பகுதியும் நான்செயத் தந்தனனே."
"துங்கமுற் றழியா நிலைதரும் இயற்கைத் தொன்மையாம் சுத்தசன் மார்க்கச் சங்கநின் றேத்தும் சத்திய ஞான சபையவா அபயவாழ் வருளே"
"உயிரெலாம் ஒருநீ திருநடம் புரியும் ஒருதிருப் பொதுஎன அறிந்தேன்…"
"எல்லார்க்கும் பொதுவில்நடம் இடுகின்றாய் இவ்வண்ணம், எல்லார்க்கும் செய்யாமை யாதுகுறித் திசைஎனக்கே."
"பொதுவாகிப் பொதுவில்நடம் புரிகின்ற பேரின்பப் பொருள்தான் யாதோ
அதுநானாய் நான்அதுவாய் அத்துவிதம் ஆகின்றேன் அந்தோ அந்தோ…"
"பொதுவென் றறிந்தும் இரங்காத சிலர்க்கும் கருணை புரிவதன்றிக் கழுதுவென் றழுங்க நினையாநின் கருணை உளந்தான் அறிவென்ப திதுவென் றறியா எனைவருத்த எந்த வகையால் துணிந்ததுவோ எதுவென் றறிவேன் என்புரிவேன் ஐயோ புழுவில் இழிந்தேனே"
"பொதுநடஞ்செய் மலரடிஎன் தலைமேலே அமைத்தீர் புத்தமுதம் அளித்தீர்என் புன்மைஎலாம் பொறுத்தீர்…"
"பொதுநடஞ்செய் துரைமுகத்தே தளதளஎன் றொளிரும் புன்னகைஎன் பொருள்என்றேன் அதனாலோ அன்றி..."
"பொதுநடஞ்செய் துரைமுகத்தே தளதளஎன் றொளிரும் புன்னகையே ஒருகோடிப் பொன்பெறும்என் றுரைப்பார்…"
"தேர்ந்தேன் தெளிந்தேன் சிவமே பொருள்எனஉள் ஓர்ந்தேன் அருளமுதம் உண்கின்றேன்…"
"தெரிந்தேன் அருளால் சிவம்ஒன்றே என்று புரிந்தேன் சிவம்பலிக்கும் பூசை - விரிந்தமனச் சேட்டைஎலாம் தீர்த்துவிட்டேன் சித்தெல்லாம் வல்லஅருள் நாட்டை எலாம் கைக்கொண்டேன் நான்."
"சின்மய வெளியிடைத் தன்மய மாகித் திகழும் பொதுநடம் நான்காணல் வேண்டும்…"
"ஆறாறுக் கப்புற மாகும் பொதுவில் அதுவது வாநடம் நான்காணல் வேண்டும்…"
"நாதாந்த நிலையொடு போதாந்த நிலைக்கு நடுவாம் பொதுநடம் நான்காணல் வேண்டும்…"
"அறிவில் அறிவை அறியும் பொதுவில் ஆனந்தத் திருநடம் நான்காணல் வேண்டும்…"
"என்னைத் தன்னோடே இருத்தும் பொதுவில் இன்பத் திருநடம் நான்காணல் வேண்டும்…"
"…நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுநின்ற நடுவே
நரர்களுக்கும் சுரர்களுக்கும் நலங்கொடுக்கும் நலமே
எல்லார்க்கும் பொதுவில்நடம் இடுகின்ற சிவமே
என்அரசே யான்புகலும் இசையும்அணிந் தருளே."
"எம்மத மெம்மிறை யென்ப வுயிர்த்திரள் அம்மத மென்றரு ளருட்பெருஞ் ஜோதி.."
"பொதுவது சிறப்பது புதியது பழயதென் றதுவது வாய்த்திக ழருட்பெருஞ் ஜோதி…"
"எப்பொருள் மெய்ப்பொரு ளென்பர்மெய் கண்டோர் அப்பொரு ளாகிய அருட்பெருஞ் ஜோதி…"
"பொதுவுணர் வுணரும் போதலாற் பிரித்தே அதுவெனிற் றோன்றா வருட்பெருஞ் ஜோதி…" (இது மிகத்தெளிவூட்டும் ஆதாரம். அறிக.)...

விரிக்கப் பெருகும். தொடரட்டும் அருட்பணி. நல்லது.
நன்றி! நல்வாழ்த்துக்கள்!
Wednesday, March 16, 2016 at 22:30 pm by Sivaram Narayan
ஸ்வாமி  இராஜேந்திரன்
அன்புள்ள சிவராம் அய்யா, சன்மார்கதிற்க்கு சமய ஆச்சாரங்கள் முக்கிய தடை என்று பெருமானார் ஏன் கூறினார்கள்? தற்போது இருக்கும் ஆலயங்கள், மசூதிகள் மற்றும் தேவாலயங்கள் ஆகியவற்றை என்ன செய்வது? ஓரு சைவர், ஒரு முஸ்லிம் அல்லது ஒரு க்ரிஸ்தவர் அவரவர்கள் மார்கங்களில் இருந்து கொண்டே எவ்வாறு சன்மார்கி ஆவது? இக்கேள்விக்கு விடை கிடைத்தால் கருத்து வேற்றுமை குறையும் என்று தோன்றுகின்றது! நன்றி
Thursday, March 17, 2016 at 10:48 am by ஸ்வாமி இராஜேந்திரன்
narayani julu
மிகவும் நன்றி மேடம். ஆதாரமில்லாமல் எதையும் நீங்கள் கட்டுரை தர மாட்டீர்கள்.இதற்குரிய ஆதாரமான வள்ளலார் குறிப்பு அல்லது பாடல் உண்டா மேடம்? உங்கள் சகோதரி.
Thursday, March 17, 2016 at 16:48 pm by narayani julu
Sivaram Narayan
மிகமிக எளிது அய்யா. எவ்வுயிரையும் தன்னுயிராய்ப் பாவிக்கின்ற எல்லோரும் தயவுடையவர்களே. அப்படித் தயவுடையவர்கள் எல்லோரும் சுத்த சன்மார்க்கிகளே. எல்லா மதங்களிலும் தயவுடைய சைவர்களும், கடின சித்தமுடைய அசைவர்களும் இருக்கின்றார்கள். நாம் தயவுடைய ஒத்தகருத்துடைய சைவர்களுடன்/வீகன்களுடன் என்நாட்டவராயினும் நல்ல உறவு வைத்துக்கொண்டு, நாம் வசிக்கும் இடங்களிலுள்ள எந்த ஆலயத்திற்கும் சென்று அருட்பெருஞ்சோதி ஆண்டவரை அவர்களின் சமயமத ஆச்சாரங்களை அனுஷ்டிக்காமல் பிராத்திக்கலாம். நான் மசூதிக்குச் செல்லும்போது அவர்கள் போலவே நமாஸ் செய்கின்றேன். எல்லாம் வல்ல அல்லா என்று ஏத்தப்படும் அருட்பெருஞ்சோதி ஆண்டவரே என்று என்னுள்ளே கரைந்து நான் உருகும்போது எனது பிராத்தனையை இறைவன் ஏற்றுக்கொள்வதை உணர்கின்றேன். அதுபோலவே சிலையில்லாத கிருஸ்தவ-இந்து ஆலயங்களுக்கும் சென்று எல்லாம் வல்ல கர்த்தாவாகிய அருட்பெருஞ்சோதி ஆண்டவரைப் பிராத்தனை செய்கின்றேன. இங்கு, 'தென்னாடுடைய சிவனே, என்நாட்டவர்க்கும் இறைவா!' - என்னும், நம் தமிழ்ப் பழம்பெரும் பக்தியை நினைவுகூர்ந்து புரிந்துகொள்வோமாக. அசைவ உணவுடையோர் புறத்தவரே. ஆனால் எனது அன்புமிகும் பிராத்தனையை எவரும் எந்த ஆச்சாரத்தாலும் தடைபோட முடியாது. நன்றி! நல்வாழ்த்துக்கள்!
Thursday, March 17, 2016 at 18:05 pm by Sivaram Narayan
Logith sharma
தங்களின் கட்டுரை மிகவும் அருமை அம்மா , தங்களின் இக்கட்டுரை ‘உண்மை கடவுளின் நிலையை முழுவதுமாக அறிந்துகொள்ளவேண்டும்” என்ற உண்மையை உரைப்பதாக உள்ளது.அதாவது வள்ளலார் வாக்கியத்தின் படி “நாம் நம்முடைய நிலை எப்படிப்பட்டது? நமக்கு மேல் நம்மை அதிஷ்டிக்கின்ற தெய்வத்தினுடைய நிலை எப்படிப்பட்டது? என்று விசாரிக்க வேண்டியது” - விசாரித்து ‘உண்மை கடவுளின் நிலையை தெரிந்தது கொள்ள வேண்டியது.
நான் வேறு எதையும் சொல்ல விரும்பவில்லை
APJ அருள் அம்மாவும், அய்யாவும் என்னை மன்னிக்க வேண்டுகிறேன், நான் தங்களுக்கு போன் செய்த போது என்னை திட்டி விட்டீர்கள் “மற்றவர்களுடைய comments –க்கு, சிறியேன் ஆகிய என்னுடைய வார்த்தைகள் சரிப்பட்டுவராது என்று கூறி”
-எனைதான் வைதாலும் வைதுடுமின் வாழ்த்து என கொண்டிடுவேன்
இப்படிக்கு சிறியேன் ஆகிய Logith
Friday, March 18, 2016 at 00:17 am by Logith sharma
APJ Arul
ஆறாம் திருமுறை -

அனுபவ மாலை -

எவ்வுலகில் எவ்வௌர்க்கும் அரும்பெருஞ்சோ தியரே
இறைவர்என்ப தறியாதே இம்மதவா திகள்தாம்
கவ்வைபெறு குருடர்கரி கண்டகதை போலே
கதைக்கின்றார் சாகாத கல்விநிலை அறியார்
நவ்விவிழி யாய்இவரோ சிலபுகன்றார் என்றாய்
ஞானநடம் கண்டேன்மெய்த் தேன்அமுதம் உண்டேன்
செவ்வைபெறு சமரசசன் மார்க்கசங்கந் தனிலே
சேர்ந்தேன்அத் தீமொழியும் தேமொழிஆ யினவே.
Friday, March 18, 2016 at 13:10 pm by APJ Arul
Sivaram Narayan
அன்புடையீர், மேலே உள்ள ஆறாம் திருமுறை - அனுபவ மாலைப் பாடலை இங்கு வெளியிட்டமைக்க மிக்க நன்றி. அதன் உண்மைப் பொருள்ளை நன்கு புரிந்தால், புரியாத மதவாதிகள் போலத் தாங்கள் புலம்ப மாட்டீர்கள். எல்லா மதத்தவரும், மார்க்கத்தவரும் அவரவர் வணங்கும் கடவுளே தனிப்பெரும் பதியென்றும், மற்றவர் கடவுளர் மட்டமே என்றும், 'அது வெறும் தத்துவமே' - என்றும், சண்டை செய்கின்றனர். அவர்கள் போலவே தாங்களும் குருடர் கரியைக் (யானையைக்) கண்ட கதைபோலே கதைக்கின்றீர்கள்!

அருளனுபவம் அடையும்போது தங்களின் தவறுக்கு வருந்தி அழுவீர்கள். அப்போதுதான் அடக்கம் வரும். இல்லையேல் வெற்று அலம்பலே, கண்ட இடங்களில் மிகும். இந்த இயற்கை உண்மையை எல்லாச் சித்த புருஷர்களும், மகான்களும் நன்கு அறிவர். ஆகவே வன்மைமிகும் சமயமத அறியாமைகளை அவர்கள் சாடுகின்றார்கள். அதில் வள்ளலார் தலைசிறந்து விளங்குகின்றார். அதாவது, சாடுவதோடு நிற்காமல், ஒன்றாம் தெய்வத்தை, நம் சண்டையை விடுத்து, ஜீவகாருண்யத்தால் மனித குலத்தை இணைத்து, அதன்பால் அன்பைப் பெருக்கி, அந்த ஆண்டவரைத் தொழுகை செய்வித்து, எல்லா இன்பையும் எல்லோரும் அடைய எக்காலத்தும் நமக்கு உற்ற துணையாகவும் இருந்து அருள்பாலித்து வருகின்றார். இதை முதலில் அறிந்தால் அருள்நலம் அடையலாம். நன்றி! நல்வாழ்த்துக்கள்!

"உரை அற்றது ஒன்றை உரை செய்யும் ஊமர்காள்
கரை அற்றது ஒன்றைக் கரை காணல் ஆகுமோ
திரை அற்ற நீர்போல் சிந்தை தெளிவார்க்குப்
புரை அற்று இருந்தான் புரிசடையோனே." ---- திருமந்திரம்
"எக்கரை யும்மின்றி ஓங்கும் அருட்கடல் என்றுரைக்கோ
செக்கரை வென்றபொன் என்கோ படிகத் திரளதென்கோ
திக்கரை அம்பரன் என்கோஎன் உள்ளத்தில் தித்திக்கின்ற
சக்கரைக் கட்டிஎன் கோநினைத் தான்மன்றில் தாண்டவனே." - தனித் திருஅலங்கல் (ஆறாம் திருமுறை)

நஞ்சுண் டுயிர்களைக் காத்தவ னேநட நாயகனே
பஞ்சுண்ட சிற்றடிப் பாவைபங் காநம் பராபரனே
மஞ்சுண்ட செஞ்சடை மன்னாபொன் அம்பல வாவலவா
பிஞ்சுண்ட வாய்க்குப் பழம்அளித் தாண்ட பெரியவனே. - தனித் திருஅலங்கல் (ஆறாம் திருமுறை)

"உரைகடந்த திருவருட்பே ரொளிவடிவைக் கலந்தே
உவட்டாத பெரும்போகம் ஓங்கியுறும் பொருட்டே
இரைகடந்தென் உள்ளகத்தே எழுந்துபொங்கித் ததும்பி
என்காதல் பெருவெள்ளம் என்னைமுற்றும் விழுங்கிக்
கரைகடந்து போனதினித் தாங்கமுடி யாது
கண்டுகொள்வாய் நீயேஎன் கருத்தின்வண்ணம் அரசே
திரைகடந்த குருமணியே சிவஞான மணியே
சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே." - திருக்கதவந் திறத்தல் (ஆறாம் திருமுறை)

"உருவ ராகியும் அருவின ராகியும் உருஅரு வினராயும்
ஒருவ ரேஉளார் கடவுள்கண் டறிமினோ உலகுளீர் உணர்வின்றி
இருவ ராம்என்றும் மூவரே யாம்என்றும் இயலும்ஐ வர்கள்என்றும்
எருவ ராய்உரைத் துழல்வதென் உடற்குயிர் இரண்டுமூன் றெனலாமே." - தனித் திருஅலங்கல் (ஆறாம் திருமுறை)

"நான்உரைக்கும் வார்த்தைஎலாம் நாயகன்சொல் வார்த்தைஅன்றி
நான்உரைக்கும் வார்த்தைஅன்று நாட்டீர்நான் - ஏன்உரைப்பேன்
நான்ஆர் எனக்கெனஓர் ஞானஉணர் வேதுசிவம்
ஊன்நாடி நில்லா உழி." - ஆறாம் திருமுறை

"எம்மத நிலையும் நின்னருள் நிலையில் இலங்குதல் அறிந்தனன் எல்லாம் சம்மதம் ஆக்கிக் கொள்கின்றேன் அல்லால் தனித்துவே றெண்ணிய துண்டோ..."ஆறாம் திருமுறை
Friday, March 18, 2016 at 17:57 pm by Sivaram Narayan
narayani julu
என்ன உயர்திரு சிவராம் நாராயண் அய்யா. எதற்கெடுத்தாலும் மறுப்பா? என்ன தான் சொல்ல வருகீறீர்கள்? என்ன தான் செய்யச் சொல்கிறீர்கள்.? அய்யா உங்கள் கேள்விக்கு நேற்று வந்த நானே பதில் சொல்வேன். நீங்கள் தந்துள்ள வரிகளை அதாவது: “இந்த இயற்கை உண்மையை எல்லாச் சித்த புருஷர்களும், மகான்களும் நன்கு அறிவர். ஆகவே வன்மைமிகும் சமயமத அறியாமைகளை அவர்கள் சாடுகின்றார்கள். அதில் வள்ளலார் தலைசிறந்து விளங்குகின்றார். அதாவது, சாடுவதோடு நிற்காமல், ஒன்றாம் தெய்வத்தை, நம் சண்டையை விடுத்து, ஜீவகாருண்யத்தால் மனித குலத்தை இணைத்து, அதன்பால் அன்பைப் பெருக்கி, அந்த ஆண்டவரைத் தொழுகை செய்வித்து, எல்லா இன்பையும் எல்லோரும் அடைய எக்காலத்தும் நமக்கு உற்ற துணையாகவும் இருந்து அருள்பாலித்து வருகின்றார். இதை முதலில் அறிந்தால் அருள்நலம் அடையலாம். நன்றி! நல்வாழ்த்துக்கள்!” ----- இதை யார் மறுத்தார்கள். ஏபிஜெ அருளும் அதை தானே சொல்கிறார்கள். அடுத்து பாடல்கள்: எல்லோருமே ஏற்றுக் கொண்டப்பாடல்களே. அதன் அடிப்படையிலேயே தான் ஏபிஜெ அருள் அவர்களின் ”யானை கதை”. அதுவும் வள்ளலாரின் பாடல் ஆதாரமாக. எனக்கு தெரிந்து மிக அருமையான கட்டுரை.யானையின் கால் அதன் முழு உருவமாகாது. ஆனால் அது யானையின் ஒரு உறுப்பு. அது போல் தான் எதுவாக இருந்தாலும், அனைத்துமே கடவுளின் அம்சமே. ஒரு அம்சம் கடவுளின் முழு பரிபூரணமாகாது. ஒன்றொனும் ஒன்றே என்றப் பிறகு வேறுப்பட்டவை என எதையும் கூற முடியாது. உண்மைக் கடவுளை காண்பதே இம்மார்க்கத்தின் கொள்கை என்கிறார் வள்ளற்பெருமான் என்பதே ஏபிஜெ அருள் அம்மாவின் கட்டுரை.அக்கடவுளின் உண்மையறிய வள்ளலார் ஒரு உண்மை, பொது வழியை கண்டு உலகிற்கு வெளிப்படுத்துகிறார் என்பதே கட்டுரைகள். சுத்த சன்மார்க்கம் என்பதற்கு என்னப் பொருள் சொல்கிறார் நம் வள்ளலற்பெருமான் தெரியுமா? சன்மார்க்கத்தையும் மறுப்பது சுத்த சன்மார்க்கம் என்கிறார்கள். (பக்கம்: 402) பூர்வத்தில் நின்ற சமயமத சன்மார்க்கங்களை மறுப்பது சுத்த சன்மார்க்கம். பார்க்க வள்ளலார்.ஆர்க்.ஆதாரத்துடன் வரும் கட்டுரைகளை மறுப்பது வள்ளற்பெருமானையே மறுப்பது. வள்ளற்பெருமானை மறுப்பது உங்கள் விருப்பம். ஆனால் இங்கு இல்லை. நன்றி.
Tuesday, March 29, 2016 at 14:14 pm by narayani julu
s raja k.s
நம் பெருமனாரின் பாடல்:”இறைவர்என்ப தறியாதே இம்மதவா திகள்தாம்
கவ்வைபெறு குருடர்கரி கண்டகதை போலேகதைக்கின்றார்’’ (கரி;யானை கதை) வரிகள் மூலம் விளக்கம் தந்துள்ளது பயனாக அமைந்துள்ளது.
Thursday, May 26, 2016 at 15:30 pm by s raja k.s
Karunai Sabai-Salai Trust.
’இயற்கை’ என்றால் என்ன?– வள்ளலார்.(உள்ளது உள்ளபடி) – ஏபிஜெ அருள்.
வள்ளலார் மார்க்கத்தில் இயற்கை என்பதற்கு பொருள் என்ன எனப்பார்க்கும் போது, இயற்கை ஒரு முக்கிய முதன்மை உண்மைப் பொருளாக உள்ளது.

ஆம் அன்பர்களே,

இயற்கையே இறைவன்.

இயற்கையே சுத்த சன்மார்க்கம்.

இயற்கையே மரணமில்லா பெருவாழ்வு.

ஆக,

Read more...
natuure.jpg

natuure.jpg

2 Comments
narayani julu
உங்களுக்கு தான் நன்றிகள் பல. அருமை காரணம் உண்மை.
Tuesday, May 10, 2016 at 16:18 pm by narayani julu
s raja k.s
மிகவும் நன்று. இயற்கையே கடவுள் என வியம்பினால் உண்மை பொது கடவுள் என்பதில் என்ன கருத்து வேறுபாடு ஏற்படும். இது போல் நல்ல பல கட்டுரை வருதல் வரவேற்க்கத்தக்கது.
Wednesday, May 25, 2016 at 09:31 am by s raja k.s
Karunai Sabai-Salai Trust.
வள்ளலார் நெறி, எந்த ஒரு சமய மதச் சார்பும் கொண்டதல்ல. சுத்த சிவமே நம் சிவம் –- திண்டுக்கல் சுவாமி.
(உள்ளது உள்ளபடி ஏபிஜெ அருள்)

.....(சுத்த தேகத்தோடு) இந்த மாதிரியான இறவா நிலையே சாகாக் கல்வியின் உண்மையாயிருத்தலின் அதன் இலக்கணம், இலக்கியம், எல்லாம் நமது அருட்ஜோதியாகவே கண்டு கொள்ளப்படுகின்றாதாம். நமது ஆண்டவர் அருட்பெருஞ்ஜோதி மயமானவர். அவரை அடைவதுவே நம்முடைய குறிக்கோள் அல்லது இலட்சியம். அந்தக் கடவுளரைச் சார்வதற்கு மெய்யருள் தானே மார்க்கமாயிருத்தலின் அப்பதியின் இலக்கணமாகவும் கருவியாகவும் அமைந்துள்ளது. அவ்வருளேயாகும். இது இதுவாய்த் தோற்றுகின்ற யாவும் அந்த அருட்ஜோதியின் பாலிருந்து வெளியுற்றிருப்பதாக Read more...
dindigul swamy 2.jpg

dindigul swamy 2.jpg

Karunai Sabai-Salai Trust.
உண்மை செயல்பட்ட, ஒரு முதல் ஆன்மாதான் நம் அடிகளார். ---திண்டுக்கல் தயவு சுவாமிகள். -அன்றைய நிலையும் இன்றைய நிலையும் – (உள்ளது உள்ளபடியே – ஏபிஜெ அருள்)
எவ்வளவோ காலத்திற்கு முன்பே, ஆன்மாவின் நிலையைப் பற்றியும், இயல்பைப் பற்றியும் உண்மையை மனிதன் அறிந்து கொண்டு விட்டிருந்தான். ஆம், ஆன்மாவின் உள்ளிருக்கும் கடவுள் தன்னுண்மையை வெளிப்படுத்தி, அறிந்து கொள்ளச் செய்திருந்தார். உண்மையைத் தெரிவிக்க வேண்டும் என்ற ஒரே சிந்தனையோடும், நம்பிக்கையோடும் வேண்டி நின்ற மனிதனின் உள்ளத்திலே கடவுளும் அவனுக்குத் திருவுளம் இரங்கி உண்மையைப், பரிபாகத்திற்கு ஏற்ற அளவு வெளிப்படுத்தி விடுகின்றார். மனிதனுக்கு அந்த உண்மையின் பொருள், அவனது பக்குவ நிலைக்குத்தக விளங்குகின்றதாம். அன் Read more...
saravanananda swamy.jpg

saravanananda swamy.jpg

Karunai Sabai-Salai Trust.
எது உண்மையான ” அன்னதானம்’’? – ஏபிஜெ அருள்.
யாருடைய பசியை நீக்குதல் வேண்டும் என வள்ளலார் குறிப்பிடுகிறார்?

யாருடையபசியைக் குறித்து யோசிப்பது அவசியமல்ல?

இதோ வள்ளலார் கீழ் வருமாறு குறிப்பிடுகிறார்கள்:.

...ஆகலில் நாமனைவரும் எந்த வகையிலும் ஆதாரமில்லாத ஏழைகளுக்குப் பசி நேரிட்டபோது மிகவும் கருணை உள்ளவர்களாகி நம்மால் கூடியமட்டில் அந்தப் பசி என்கின்ற ஆபத்தைப் பொதுவாக நிவர்த்திப்பதற்கு முயற்சி செய்வதே ஆன்ம லாபம் என்று அவசியம் அறிய வேண்டும்.

இதை நாம் எல்லாரும் கண்டிப்பாக செய்தல் வேண்டும். நம்மால் கூடியமட்டில் இந்த ஜீவகாருண்ய ஒழுக்கத்தை கடைப்பிடித்து Read more...
annathanam.jpg

annathanam.jpg

narayani julu
அருமை. நமக்கு இருக்க வேண்டிய காருண்யத்தையும் நமது கடமையையும் இங்கு நன்கு விளக்கப்பட்டுள்ளது.
Thursday, May 19, 2016 at 12:18 pm by narayani julu
Karunai Sabai-Salai Trust.
முன்னோர் சாகாக்கல்வியும் வள்ளலார் சாகாக்கல்வியும். பற்றி விவரிக்கிறார் திண்டுக்கல் சுவாமி. (உள்ளது உள்ளபடி – ஏபிஜெ அருள்)
முன்பு உயர் நிலையுறுவோர் உடலைத் துறந்து ஒழிந்து விட்டார்கள். தில்லை வெளியினிற் கலந்து திரும்பி வராது போய் விட்டார்கள். இப்பொழுதோ அந்நிலை சேர்ந்து இந்நிலவுலகில் நிலவற்கான வரம் பெற்று விட்டுள்ளான் மனிதன். இவ்வானுபவம் பெற்ற முதல்வர் நம் வள்ளலார் எனக் கான்கின்றோம்.

இவர் இங்கு தம்பமிசை எனை ஏற்றி, அழியாத்தலத்தில் வைத்த அரசே எனப்பாடுகின்றார். இவ்வுயர் நிலை அருள் அமுத வண்ணமாக எக்காலும் அழிவு இன்றித் திகழ்ந்து கொண்டிருத்தலின், அவன் உற்று வாழ்வு பெற்றுத் திகழுகின்ற நம் வள்ளலும் அருட் பிரகாச இன்ப வடிவு கொண்ட Read more...
dindigul swamy 2.jpg

dindigul swamy 2.jpg

4 Comments
sivadurai sivamayam
நீண்டக்கால எனது சந்தேகத்திற்கு இன்று பதில் கிடைத்துள்ளது. மிகத்தெளிவாக சுவாமி விளக்கம் கொடுத்துள்ளார்கள். நமது சமயச்சான்றோர்களின் வெளிப்பாட்டுக்களை தொடர்ந்து அதையும் கடந்து பூரண முழுமையை இராமலிங்க சுவாமிகள் கண்டது இன்று நமக்கு கிடைத்துள்ளது. திண்டுக்கல் சுவாமிகளால் தெளிவுற்றேன். இதுவே ஆண்டவரின் கருணை.
Thursday, May 12, 2016 at 16:07 pm by sivadurai sivamayam
Damodaran Raman
அன்பர்களே,வள்ளலார் உரைப்பகுதியில்(தெய்வ திலைய வெளியீடு பக்கம் 385)சுத்த சன்மார்க்கத்தின் உண்மை தெரிய வேண்டுமாகில் திருமூலர் திருமந்திரத்தை ஊன்றிக் கவனிக்கில் விளங்கும் என்பதை முற்றிலும் புறக்கணித்து விட்டுக் கூறுவன உண்மை யாகா.திருமந்திரம்,சித்தர் நூல்களைக் கொஞ்சமாவது படித்திருந்தால் புற உடல் என்று இவர்களால் குறிப்பிடப் படும் தூல உடலை விட்டு விடுவதுதான் தகர வித்தை என்று கூற மாட்டார்கள். தூல உடலிலிருந்து உயிரைப் பிரிப்பவன் எமன் எனப்படும் காலன்.திருமந்திரம் கூறுவது வருமாறு.

மூல நாடிமுக் கட்டல குச்சியுள்
நாலு வாசல் நடுவுள் இருப்பிர்காள்
மேலை வாசல் வெளியுறக் கண்டபின்
காலன் வார்த்தை கனாவிலும் இல்லையே.-622

மேலை அணாவில் விரைந்திரு காலிடில்
காலனும் இல்லை கதவும் திறந்திடும்
ஞாலம் அறிய நரைதிரை மாறிடும்
பாலனும் ஆவான் பராநந்தி ஆணையே.-805

இந்த இரண்டு பாடல்களும் சுழுமுனை நாடியின் மேல் வாசலான புருவ நடுவைத் திறக்கும் வழி வகையைக் கூறுகின்றன.வள்ளலார் உரைப்பகுதியில் இந்தப் புருவநடுவைத்தான் நெற்றிக்கண் என்றார்.காலன் வார்த்தை கனாவில் கூட இல்லையாகும்போது தூல உடலை விட்டு உயிர் எப்படிப் பிரியும்? பிரியாது. அவர்களின் தூல உடம்பே சூக்கும உடம்பாகும். இதனையும் திருமந்திரம் தெளிவு படுத்துகிறது.

அழிகின்ற சாயா புருடனைப் போலக்
கழிகின்ற நீரில்குமுழியைக் காணில்
எழுகின்ற தீயில்கர்ப் பூரத்தை ஒக்கப்
பொழிகின்ற இவ்வுடல் போம்அப் பரத்தே.-2587

எனவே உடலை விட்டு விடுவது சாகாக்கலையாகாது என்பது தெளிவு.சாகாக்கலவியைத் தெரிவிக்கும் சாகாத்தலை,வேகாக்கால்,போகாப்புனல் என்னும் இம்மூன்றையும் வள்ளலாருக்கு முன்பே குறிப்பிட்டவர்கள் சித்தர் பெருமக்களே ஆவார்கள்.சாகாக்கல்வியை வள்ளலாருக்கு முன்பே போதித்தவர்களும் சித்தர்களே.

சைவ சித்தாந்தத்தைக் கற்காததால் சைவம் விளக்கும் முத்தியைக் கொஞ்சமும் அறியாமல் இவர்களுக்குத் தோன்றியதை எழுதி யிருப்பது முற்றிலும் தவறானது.சைவம் கூறும் முத்தி என்பது வள்ளலார் விவரித்த நிலை முன்னுறு சாதனமாகும்.

பதி,பசு,பாசம் என்பன ஒருபோதும் ஞான, பிரணவ, சுத்த தேக மாகா. பதிநிலை பசுநிலை பாசநிலையெலாம் மதியுறத் தெரித்துள் வயங்கு சற்குருவே(1045-1046)என்பதை உணராமல் கூறிய கூற்றாகும்.வள்ளலார் உரைப்பகுதியில் உள்ளபடிச் சுத்த சன்மார்க்கத்தின் உண்மை தெரிய வேண்டுமாகில் திருமூலர் திருமந்திரத்தை ஊன்றிக் கவனிக்கில் விளங்கும் என்பது சத்தியம்.சத்தியம். சத்தியம். திருமந்திரம்,சித்தர் நூல்களின் உதவி இல்லாமல் சுத்த சன்மார்க்கம் வெளிப்படுத்தும் சாகாக்கல்வியை யாராலும் வெளிப்படுத்த முடியாதென்பது திண்ணம்.
திருமந்திரத்தை முற்றிலும் புறக்கணிக்கும் எபிஜெ அருள் மற்றும் அவரின் அபிமானிகள் ஒன்று சேர்ந்து முடிந்தால் சுத்த சன்மார்க்கம் வெளிப்படுத்தும் சாகாக்கல்வியை வெளிப்படுத்த முயற்சி செய்யலாம். ஆவன செய்யட்டும்.யாரும் தடுக்க மாட்டார்கள்.
Thursday, May 12, 2016 at 17:32 pm by Damodaran Raman
narayani julu
உண்மை,
வள்ளற்பெருமானால் பரிபூரணமாக கண்டு வெளிப்படுத்தப்பட்டுள்ளது. 12-4-1871 ல் பெருமான் அறிவித்தது: எல்லா மூர்த்திகளும், எல்லாக்கடவுளரும், எல்லாத் தலைவர்களும், எல்லா யோகிகளும், எல்லா ஞானிகளும் தங்கள் அனுபவங்களைக் குறித்து எதிர்பார்க்கின்றபடி எழுந்தருளுகின்ற தனித்தலைமைப் பெரும்பதி.” ஆக, என்ன அருமையாக தயவு சுவாமிகள் விளக்கம் கொடுத்துள்ளார்கள். பெருமான் மற்றும் தயவு சுவாமி விளக்கம் அளித்தும் எதற்காக இப்படி....?ஒன்றும் புரியவில்லை?. வள்ளலற் பெருமான் நெறி ஒரு ”புது, தனி, உண்மைப் பொது நெறியாகும்” என்பதை விளக்கப்பட்டு விட்டது. எல்லோரும் குரோதம் தவிர்த்து முயன்று பெருமான் வழியில் சுத்த சன்மார்க்கப் பயன் பெறுவோம். அருமையான விசாரம். ஏபிஜெ அருள் அம்மா அவர்களுக்கு நன்றிகள் பல. (தயவு சுவாமிகள் புத்தகங்களை தபாலில் எங்ஙனம் பெறுவது.? உரியவர்களின் செல் நம்பர் வேண்டும்.)
Friday, May 13, 2016 at 08:30 am by narayani julu
Logith sharma
People whoever following Suddha Sanmarga has to know the Vallalar and his path as said by Vallalar. We all know Vallalar has enquired about the "True God" and he attained immortality - So everyone following Vallalar path has to do the inquiry[enquiry] and find the "True God"

Please refer below link for the "true god" as said by Vallalar

http://www.thiruarutpa.org/thirumurai/v/T298/tm/upatheesa_unmai

http://vallalarspace.com/Vallalargroups/Articles/2863

http://www.vallalarspace.org/KarunaiSabai/c/V000020479B
Friday, May 13, 2016 at 13:22 pm by Logith sharma
Karunai Sabai-Salai Trust.
NEW BOOK ( Tamil) released by M/s Karunai Sabai Salai Trust Madurai
If you like to read , please send your e mail ID

Download:

Gnana Sivam D
ignanasivamd@gmail.com
Tuesday, May 10, 2016 at 15:49 pm by Gnana Sivam D
Karunai Sabai-Salai Trust.
”விசாரம்” என்கின்றதற்கு பொருள் – வள்ளலார். ( ஏபிஜெ அருள்.)
(22-10-1873 ல் மேட்டுக்குப்பத்தில் வள்ளலார் ஆற்றிய உபதேசத்தின் அடிப்படையில்)

விசாரம் என்கின்றதற்கு வள்ளலார் என்ன பொருள் சொல்லியுள்ளார்கள் என்பதை தெரிந்துக் கொள்வதற்கு முன்பு விசாரம் எதற்கு வேண்டும் எனக் காண்போம்.

நமது ஆன்ம அறிவை விளக்கமின்றி மூடிக் கொண்டிருக்கின்ற திரைகள் அனந்தம் (பல). மேற்படி திரைகளில், அழுத்தமாயிருக்கின்ற முதல் திரை பச்சைத்திரை ஆகும். நாம் முதலில் இந்த பச்சை திரையை நீங்கிக் கொள்ள வேண்டும்.அது நீங்கினால், மற்றத் திரைகள் அதிக விரைவில் நீங்கிப்போய்விடும் என்கிறார் வள்ளலார்.. மேற்பட Read more...
to think.jpg

to think.jpg

narayani julu
விசாரம் முக்கியத்துவத்தையும், வள்ளற்பெருமான் எல்லோருக்கும் சாத்தியப்படுகின்ற பொது வழியை கண்டுபிடித்து வெளிப்படுத்தியுள்ளார்கள் என்ற செய்தி முக்கியத்துவத்தை பெறுகிறது. Many thanks.
Friday, May 6, 2016 at 03:45 am by narayani julu