SANMARGA SANGAM ALWARTHIRUNAGAR-mupa
வள்ளலார் உடம்போடுதான் இருக்கின்றார்
வள்ளலார் பெற்ற மரணமிலாப் பெரு வாழ்வு :

எதனாலும் அழியாத தேகம் நான் பெற்றேன்;

காற்றேலே புவியாலே ககனமதனாலே கனலாலே புனலாலே கதிராதியாலே
கூற்றாலே பிணியாலே கொலைக்கருவியாலே கோளாலே பிறவியற்றும் கொடும் செயல்களாலே
வேற்றாலே எஞ்ஞான்றும் அழியாதே விளங்கும் மெய் அளிக்க வேண்டும் என்றேன் விரைந்தளித்தான்
எனக்கே
ஏற்றாலே இழிவெனநீர் நினையாதீர் உலகீர் எந்தை அருட்பெருஞ்சோதி இறைவனைச் சார்வீரே ..1733

நானே தவம் புரிந்தேன் அழியா வடிவம் அவை மூன்றும் பெற்றேன்

நானே தவம் புரிந்தேன் நம்பெருமான் நல்லருளால்
நானே அருட்சத்தி நாடடைந்தேன் –நானே
அழியா வடிவம் அவை மூன்றும் பெற்றேன்
இழியாமல் ஆடுகின்றேன் இங்கு............1509

எஞ்ஞான்றும் சாகாவரம் நான் பெற்றேன்
நோவாது நோன்பு எனைப்போல் நோற்றவரும் எஞ்ஞான்றும்
சாவா வரம் எனைப்போலப் பெற்றவரும் எவ்வுலகில
யார் உளோர் நீ சற்றே உரை .....1025

இவைகள் எல்லாம் வள்ளலார் வாக்கே. இவைகள் பொய்யா.இவற்றோடு தொடர்ந்து படிக்கலாம்.

முத்தேக சித்தி ;
சுத்த தேகம்; சாயை அதாவது நிழல் இருக்காது;.
சென்னையிலிருந்து திரு மாசிலாமணி முதலியார் என்பவர் ஒன்பது முறை முயற்சி செய்தும் வ;ள்ளலாரை போட்டோ எடுக்க முடியவில்லை. வள்ளலார் சுத்த தேகம் பெற்றார் என்பதற்கு சான்று.
பிணவ தேகம்; தோன்றும் பிடிபடாது.
ஞான தேகம் ; தோன்றியும் தோன்றாமலும் இருக்கும்.
8.6..1870 அன்று திரு தோழுவோஊர் வேலாயுத முதலியார் வடலூர் ஆனந்தநாத சண்முக சரணாலய சுவாமிகளுக்கு எழுதியது;
“ நம்பெருமான் இப்போது எவ்விடத்து எழுந்தருளி இருக்கிறது.சாலை என்ன ஸ்திதியில் இருக்கிறது.அவ்விடத்தில் காரியங்களை யார் பராமரிக்கின்றார்கள்..இது விபரங்களை உடனே கட்டளை இரும்படிக் கோருகிறேன்.அந்தப் பக்கங்களில் இருந்து இசங்கு வருகின்றவர்கள் தங்கள் தங்களுக்குத் தோன்றியபடியே சில பல சொல்லுந்தோறும் மனம் துடிக்கின்றது.ஆதலால் உண்மை விடயங்களை .உணர அருள் செய்தல் வேண்டும்.
(இது திருக்காப்பிட்டுக் கொள்வதற்கு நான்கு ஆண்டுகட்கு முன்பே வள்ளலார் காணாமல் போய் இருக்கிரார் என்பதற்குச் சான்று.
மறைந்திருந்த வள்ளலார் மீண்டும் வெளிப்பட்டார்; .26-10-1870 அன்று வள்ளலார் வெளியிட்ட அறிக்கை.
“அன்புள்ள நம்மவர்கட்கு அன்புடன் அறிவிப்பது; ஒருவனைப் பற்றி அனந்தம் பேர்களுக்கு நன்மை உண்டாம் என்பதை உண்மையாக நம்பி இருங்கள். என்னால் உங்களுக்கு நன்மை கிடைப்பது சத்தியம்.நான் இன்னும் கொஞ்ச என்னால் உங்களுக்கு நன்மை கிடைப்பது சத்தியம்.நான் இன்னும் கொஞ்ச தினத்தில் திருவருள் வலத்தால் வெளிப்படுகின்றேன்.அது பரியந்தம் பொறுத்திருங்கள்.நான் மிகவும் சமீபத்தில்தானே வெளிப்படுவேன்..அஞ்சவேண்டாம்.சாலையை இலகுவாக நடத்துங்கள்.
வள்ளலார் தோன்றாமல் போனார் மீண்டும் தோன்றினார்.
2.சென்னையில் உள்ள பிரம்ம ஞான சங்கத்திற்கு தொழுவூர் வேலாயுதனார் கொடுத்த வாக்கு மூலம்.
இவர் 1855ம் ஆண்டில் சென்னையைவிட்டுச் சிதம்பரத்திற்குப் போனார். அங்கிருந்து வடலூர்,கருங்குழி,என்ற இடங்களுக்குச் சென்று அங்கு நீண்ட காலம்க் இருந்தார். அங்கிருக்கும்போது இவர் அடிக்கடி தம் சீடர்கள் அறியாவண்ணம் மறைந்திருப்பது உண்டு.இவர் எங்குச் சென்றார் என்பதை அறிவோர் எவரும் இல்லை.இப்படி வெகுநாள் மறைந்திருப்பார்.”
வள்ளலாரின் தலை மாணாக்கர் வள்ளலார் தோன்றியும் தோன்றாமலும் இருந்ததை அறிவிக்கிறார்.
1873ம் ஆண்டு சித்தி வளாகத்தில் கொடி கட்டி பேருபதேசம் செய்கிறார். இறுதியில் 30-1-1874 அன்று மேட்டுக்குப்பம் சித்தி வளாகத் திருமாளிகையில் அன்பர்களிடம் கூறியது;
நான் உள்ளே பத்து பதினைந்து தினம் இருக்கப்போகிறேன் .பார்த்து அவநம்பிக்கை அடையாதீர்கள். ஒருக்கால் பார்க்க நேர்ந்து பார்த்தால் யாருக்கும் தோன்றாது வெறு வீடாகத்தானே இருக்கும்படி ஆண்டவர் செய்விப்பார்..என்னைக் காட்டிக்கொடார்.
இந்த வார்த்தைகளைக் கூறும்போது தோன்றினார்.கதவைத் திறந்து பார்த்தபோது தோன்றவில்லை..இதுதான் நடந்த உண்மை.
வள்ளலாரைப் பற்றி நம்மவர்கள் தற்சமயம் பேசிவருவது;
வள்ளலார் ஜோதி ஆகிவிட்டார்.
அவர் தேகம் அணு அணுவாக மாறி உலகமெல்லாம் பரவி விட்டது.
அவர் எல்லா உடம்புகளிலும் புகுந்து கொண்டார்.
அவர்ட் கடவுளுடன் இரண்டறக் கலந்துவிட்டார்.
தன் உடம்பைப் பஞ்ச பூதங்களுடன் சேர்த்துவிட்டார்.
ஞான தேகமானது தோன்றியும் தோன்றாமலும் இருக்கும் என்று வள்ளலார் கூறியதில் நம்பிக்கை இல்லாதவர்கள் பேசும் பேச்சு இது. ஞான தேகத்தைப் பற்றி வள்ளலார் ஜீவகாருண்ய ஒழுக்கம் இரண்டாம் பிரிவில் எழுதி உள்ளதை இங்கே படியுங்கள்.
ஆதாரத்தில் அன்றி நிராதாரத்திலும் அவர் தேகம் உலாவும்.அவரது கண்கள் முதலிய ஞானேந்திரியங்களும்,வாக்கு முதலிய கர்மேந்திரியங்களும் ,பார்த்த முதலிய விஷயங்களையும்,பேசுதல் முதலிய விஷயங்களையும்,பற்றுவனவல்ல.தயையினால் விஷயங்களைப் பற்றவேண்டில் சுவர்,மலை முதலிய தடைகளும் அவர் கண்களை மறைப்பனவல்ல. அண்ட பிண்டங்களில் அகம் புரம் முதலிய எவ்விடத்தும் உள்ள விடயங்களை அவர் கண்கள் இருந்த இடத்தில் இருந்தே கண்டறியும்.அண்ட பிண்டங்களில் எவ்விடத்திருந்து பேசினும் அவர் செவிகள் இருந்த இடத்திருந்தே கேட்டறியும்.எவ்விடத்தில் இருக்கின்ற ர்சாங்களையும் அவர் நா இருந்த இடத்திருந்தே சுவைத்தறியும்.எவ்விடத்திருக்கின்ற பரிசங்களையும் அவர் மெய் இருந்த இடத்திருந்தே பரிசித்தறியும். எவ்விடத்திருக்கின்ற சுகந்தங்களையும் கவ்க்க்ர் நாசி இருந்த இடத்திருந்தே முகர்ந்தறியும்..எவ்விடத்திருக்கின்றவர்களுக்கும் அவரது கைகள் இருந்த இடத்திருந்தே கொடுத்தல் கூடும். எவ்விடத்திலும் அவரது கால்கள் இருந்த இடத்திருந்தே நடத்தல் கொடும்....................
ஞான தேகம் பெற்றவர்களுக்குக் கண்கள் உண்டு, காதுகள் உண்டு, நாசி உண்டு, நா உண்டு, கைகள் உண்டு கால்கள் உண்டு என்றால் அவரது உடம்பு இல்லாமல் இவைகள் எங்கே உருக்கின்றன.
அன்பர்களே நன்கு சிந்தியுங்கள்.ஞான தேகம் பெற்ற வள்ளலார் தனது தேகத்துடந்தான் இன்றும் இருக்கிறார்..அவர் நம்மைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றார்.நமக்குத் துணையாக இருந்க்கின்றார்.
துதி செயும் முத்தரும் சித்தரும் காணச் சுத்த சன்மார்கத்தில் உத்தம ஞானப்
பதி செயும் சித்திகள் பற்பலவாகப் பாரிடை வானிடைப் பற்பல காலம்
விதி செயப் பெற்றனன் இன்று தொட்டு என்றும் மெய் அருட்ஜோதியால் விளைவிப்பன் நீ அவ்
அதிசயம் பாக்கலாம் ஆடேடி பந்து அருட்பெருஞ்சோதி கண்டு ஆடேடி பந்து..........1990.
வள்ளலாரைப் புரிந்து கொள்வோம் .அவர் வழி நடந்து அவர் அருள் பெறுவோம் நன்றி மு.பா.
.

3 Comments
Muthukumaaraswamy Balasubramanian
அனைவருக்கும் வந்தனம். இந்தக் கட்டுரையை யாருமே படிக்கவில்லையா.வள்ளலாரைப் பற்றி வந்துள்ள வதந்திகளை நீக்கி உண்மையான செய்திகளை அறிவிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன்தான் நான் கட்டுரைகளை எழுதுகிறேன்.நான் சொல்லியுள்ளதில் தவறு ஏதேனும் இருந்தால் சுட்டிக்காட்டுங்களேன். வள்ளலாரைப் பற்றிய உண்மை தெரிந்தால்தானே நாம் அந்த முயற்சிக்குப் போகமுடியும்.மரணமிலாப் பெருவாழ்வு அவர் அடைந்தார் என்றால் ஊழிதோறும் ஊழிதோறும் நின்றாடுவேன் என்ற அவர் வாக்கு உண்மைதானே.நாம் அடையவேண்டய பேறு கடவுள் நிலை அறிந்து அம்மயமாதல் என்றாரே.கடவுள் தனி. அவர் நிலை அறிந்து அவர் மயமாக நாம் ஆகவேண்டும் என்பதுதானே வள்ளலார் கூறியது.என் கட்டுரையை அடியோடு ஒதுக்கி விடாமல் உங்கள் கருத்தை எழுதுங்கள் ஐயா. நன்றி வந்தனம். முபா.
Sunday, December 23, 2018 at 09:24 am by Muthukumaaraswamy Balasubramanian
madan madan
Saar, for quite a long time I was in a confusion that will Gnana deham have organs in body? But by your citation from JeevakarunyaOzhukam cleared me that doubt. Thank you.
Sunday, December 23, 2018 at 12:05 pm by madan madan
manohar kuppusamy
Dear M.Balu SWAMY,
According to the THIRARUTPA AND VALLALAR SAYS, WE HAVE TO PRACTICE IN OUR LIFE NOW ITSELF. THEN ONLY WE CAN ATTAIN THE PATH.

PLEASE SHARE YOUR PRACTICAL EXPERINCE FOR US. WE WILL FOLLOW AND ATTAIN THE GOD PATH.
THANKS & REGARDS MANOHAR
Monday, December 24, 2018 at 09:36 am by manohar kuppusamy