எல்லார்க்கும் துணையாய் இருக்கும் வள்ளலாரிடம் நாம்
என்ன வேண்டலாம்?
எல்லார்க்கும் கடையாகி இருந்தேனுக்கு அருள்புரிந்தே
எல்லார்க்கும் துணையாகி இருக்க வைத்தாய் எம்பெருமான்
எல்லார்க்கும் பொதுவில் நடம் இடுகின்றாய் இவ்வண்ணம்
எல்லார்க்கும் செய்யாமை யாது குறித்து இசை எனக்கே.
இந்தப் பாடலில் நாம் அறிவது என்ன? நமக்கெல்லாம் இறைவன்
வள்ளலாரைத் துணையாக இருக்கவைத்திருக்கின்றான் என்பதே.
நமக்குத் துணையாக இருக்கும் வள்ளலாரிடம் நாம் என்ன கேட்கவேண்டும்?
வள்ளலார் தனக்குத் துணையாய் இருந்த இறைவனிடம் என்ன கேட்டாரோ
அதையே நாம் வள்ளலாரிடம் கேட்கலாமே.
1 பற்றயர்ந்து அஞ்சிய பரிவு கண்டெனைச் சற்றும் அஞ்சேல் எனத் தாங்கிய துணையே.
2 தளர்ந்த அத்தருணம் என் தளர்வெலாம் தவிர்த்து உட்கிளர்ந்திடஎனக்குக் கிடைத்த மெய்த்துணையே
3 .துறை இது வழி இது துணிவிது நீ செயும் முறை இது எனவே மொழிந்த மெய்த் துணையே
4 எங்குறு தீமையும் எனைத் தொடரா வகை கங்குலும் பகலும் மெய்க்காவல் செய் துணையே
5 வேண்டிய வேண்டிய விருப்பெலாம் எனக்கே ஈண்டிருந்து அருள் புரி என்னுயிர்த் துணையே
6 இகத்தினும் பரத்தினும் எனக்கிடர் சாராது அகத்தினும் புறத்தினும் அமர்ந்த மெய்த்துணையே
எனைப் பற்றிய ஆசை எனும் பந்தத்தால் நாம் பயப்படும் பொழுது என்மீது பரிவுகொண்டு
சற்றும் அஞ்சாதே என எனைத் தாங்குவாயாக
நான் தளரும்போதெல்லாம் என் தளர்வு அனைத்தும் தவிர்த்து . என் உள்ளம் மகிழ்ச்சியால்
துள்ளும்படி எனக்குச் செய்வாயாக.
எந்த இடத்தில் எப்படி எதைச் செய்யவேண்டுமோ அந்த வழியை எனக்கு மொழிவாயாக.
எங்கிருந்தும் எனக்கு வரக்கூடிய தீமையும் எனைத் தொடராது இரவும் பகலும் எனக்குக்
காவல் செய்வாயாக.
நான் என்னென்ன விரும்புகிறேனோ அந்த விருப்பத்தை எல்லாம் என்னுடனேயே இருந்து
நிறைவேற்றி வைப்பாயாக.
இக லோக வாழ்விலும் அருள் வாழ்விலும் எனக்கு எந்தவிதமான துன்பமும் வாராவகை
என் உள்ளும் புறமும் துணையாக இருப்பாயாக. '
2 Comments
YOUR EXPLAIN VERY USEFULL FOR US,GOOD EFFORT .
THANKSREGARDS
KRISHNAMOORTHY
KALLAKURICHI