SANMARGA SANGAM ALWARTHIRUNAGAR-mupa
THOOKKATHTHAI OZHIKKA MUDIYUMAA?

தூக்கத்தை ஒழிப்பது எப்படி?

ஓர் இரவு நாம் தூங்காமல் இருந்துவிட்டால் மறுநாள் நம்மால் சரியாக எந்த வேலையும் செய்யமுடிவதில்லை. உடல் எல்லாம் வலி ஏற்படுகின்றது.தூங்கினால் இவை அனைத்தும் சரியாகிவிடுகின்றது. மருத்துவரும் குறைந்தது ஒரு நாளைக்கு ஆறு மணி நேரமாவது தூங்கவேண்டும் என்கிறார். இது நமது அனுபவம், . ஆனால் வள்ளலாரோ தூக்கத்தை ஒழித்தேன் என்று பாடுகிறார். தூக்கம் தொலைந்தது என்று ஊதூது சங்கே என்றும் பாடுகிறார்.அவருக்கு மட்டும் தூக்கம் இல்லாமல் இருக்கும் நிலை எப்படி சாத்தியமாயிற்று?நாம் தூங்கும்போது நமது மூளையிலிருந்து கதிர்கள் உண்டாகின்றனவாம். அந்தக் கதிர்கள்தான் நமக்குப் புத்துணர்ச்சி அளிக்கின்றன. ஒரு மணி நேரம் தியானம் செய்தால் பத்து மணி நேரம் தூங்கினால் எவ்வளவு கதிர்கள் உண்டாகுமோ அவ்வளவு கதிர்கள் உண்டாகின்றன.நாம் யாரும் பத்து மணி நேரம் தூங்குவதில்லை. இதைத்தான் வள்ளல் பெருமானார் ஒருவன் ஒரு மணி நேரம் தூங்கினால் அவன் ஆயிரம் ஆண்டுகள் வாழ்வான் என்று சொல்லி இருக்கின்றார். தூக்கத்தை ஒழிக்கும் சூது என்பது தியானம் செய்வதே ஆகும்.எனவே தியானம் செய்ய வாருங்கள். தூக்கத்தை ஒழியுங்கள் ஆயுளை வளர்த்துக் கொள்ளுங்கள். நன்றி.