அருட்பெருஞ்ஜோதி தயவு இல்லம், பொன்னகரம், திண்டுக்கல்
மாதாந்திர பூச நாள் விழா.
நாள் – 21-9..2008. ஸர்வதாரி ஆண்டு புரட்டாசித் திங்கள் பூச விழா.
திண்டுக்கல் நகரிலே அவதரித்த மகான் தயாநிதி சரவணானந்த சுவாமிகள் ஆவார். வள்ளற் பெருமானாரின் சுத்த சன்மார்க்கக் கொள்கைகளை அடியொற்றி, சுவாமி சரவணானந்தா அவர்கள் 60க்கும் மேற்பட்ட நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளார்கள்.
உபதேசப் பகுதியில் வள்ளல் பெருமான் தம்மை ஏறாத நிலை மேலேற்றி விட்டது “தயவு” எனக் குறிப்பிட்டுள்ளார். அதன் அடிப்படையில், தயவுப் பாக்கள், தயா விளக்க மாலை, தயவுப் பெரு நெறி, தயவுக் குறள் என்ற பல உரை நடை நூல்களும் பல பாக்களும் யாத்துள்ளார்கள். சுவாமி அவர்களுக்கு, மேட்டுக்குப்பத்திலே, வள்ளற் பெருமானின் காட்சி, அவர்களது இளம் வயதிலேயே கிடைத்துள்ளது.
அவர்கள் தமது 96 வயதில் சித்தி பெற்றார்கள். திண்டுக்கல் நகரில் நத்தம் சாலையில் உள்ள பொன்னகரம் என்ற இடத்தில், “சுவாமி சரவணானந்தா அருட்பெருஞ்ஜோதி தயவு இல்லம்” கடந்த 2003ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.
மாதந் தோறும் பூச நாளை ஒட்டிய ஒரு ஞாயிற்றுக் கிழமை அன்று பொன்னகரம் அருட்பெருஞ்ஜோதி தயவு இல்லத்தில் சன்மார்க்க அன்பர்கள் திரளாகக் கலந்து கொண்டு, அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை வழிபாடு செய்து வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்த தயவு இல்லத்தை திண்டுக்கல் தயவு நூல் அறக்கட்டளையினை நடத்தி வரும் அன்பர் திரு எஸ்.ஆர். ராமலிங்கம் மற்றும் அவரது குடும்பத்தினர், அன்பர்களின் உதவியோடு பராமரித்தும், ஏழைகளுக்குப் பசியாற்றுவித்தல் பணியையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில், மாதப் பூச நாளினை ஒட்டி, 21-9-2008ந் தேதி ஞாயிற்றுக் கிழமை இந்த தயவு ஆலயத்தில் மாதாந்திரக் கூட்டம் நடைபெற்றது.
காலை 10.30 மணி. கொடி வணக்கம்
திரு அருட்பாவில், சிற்சக்தி துதி (கொடி வணக்கம்) 10 பாடல்கள் அன்பர்களால் பாடப்பட்டு, தயவுக் கொடி ஏற்றப் பட்டது. தயவு நூல் அறக்கட்டளை அன்பர் திரு எஸ்.ஆர். ராமலிங்கம் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் இந் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்ச்சிக்குப் பின்னர், வந்திருந்த அன்பர்கள் அனைவரும், சத்திய ஞான தீபத்தின் முன் அமர்ந்து, திருவருட்பாவில் (1) திருவடிப் புகழ்ச்சி, (2) அருட்பெருஞ்ஜோதி அகவல் (3) அட்டகம் முதலானவற்றையும், சின்மயபுரம் என்ற சின்னாளப்பட்டி சன்மார்க்க அன்பர்கள் சுவாமி சரவணானந்தா அவர்கள் பெயரால் வழங்கிய குருநாதர் வாழ்த்துப் பாவினையும் திருமதி இந்திரா ராமலிங்கம் அவர்கள் தலைமையில் அனைவரும் பாடினர்.
மதியம் 12.30 மணி
உலகில் உள்ளோர் அனைவரின் நலன்களுக்காகவும் தயவுத் தியானம் நடைபெற்றது
மதியம் 12.35 மணி.
திண்டுக்கல் சுவாமிகளின் அணுக்கத் தொண்டர் தயவு விசுவநாதன் அவர்கள் வந்திருந்த அனைவரையும் வரவேற்றார்.
பின்னர், அவர் தனது உரையில் கீழ்க்கண்டவாறு தெரிவித்தார்.
இந்த புரட்டாசி மாத பூச விழாவானது மிகவும் முக்கியம் வாய்ந்த ஒன்றாக உள்ளது. இத் திங்களில்தான் ஆண்டு தோறும் வள்ளலார் வருவிக்க உற்ற தினத்தை, சன்மார்க்க உலகம், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சன்மார்க்க சங்கங்களின் சார்பாக ஆங்காங்கே மிகச் சிறப்பாகக் கொண்டாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளன. வழக்கமான மாத பூச விழாவோடு 186வது ஆண்டு வள்ளலார் வருவிக்க உற்ற நாளாகவும் கொண்டாடப்படுகின்றது.
நாகல் நகர் தயா நேய அன்பர் சி.சண்முகம் அவர்களால், சுவாமி சரவணானந்தா அருளிய “பேருபதேசப் பிழிவு’ வாசிக்கப்பட்டு, பொருள் விளக்கம் மற்றும் அன்பர்களுக்குத் தோன்றும் சந்தேகம் தெளிவித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
வள்ளல் பெருமானிடம் மிகுந்த பற்றும், தயாநிதி சுவாமி அவர்களிடம் மிகு தயவும் கொண்டவரும்,. தயவு நூல் வெளியீட்டு அறக்கட்டளை மூலம் வெளியிடப்படும் நூல்களுக்கு நன்கொடை வழங்கி வரும் தயா நேய அன்பர் சுபம் பேப்ரிக்ஸ் தயவுத்திரு S.S. மோஹன்ராம் சொற்பொழிவாற்றினார். அவர் தெரிவித்த தகவல்.
நாம் அனைவரும் இந்த தயவு இல்லத்திற்கு தொடர்ந்து வந்து தயவு விளக்கத்தினைப் பெற்று, வாழ்ந்து வருகிறோம். இங்கே நாம் வழிபாடு செய்து. தயவுக் குருவருளைப் பெறுவதோடு மட்டுமல்லாமல், தத்தமது இல்லங்களுக்குச் சென்று, ஜீவகாருண்ய ஒழுக்கத்துடன் தயா உணர்வோடு நமது குடும்பத்தினருக்கு உணவு வழங்க வேண்டும். அவ்வாறு செய்யும்போது, அவர்கள் முற்றிலும் தயவு உணர்வோடும், தயவு சிந்தனையோடும் வளர்வார்கள். இதில் தாய்மார்களின் பங்குதான் மிகவும்க் முக்கியமானதாகும்.. ஒவ்வொருவருக்கும் (1) தன்னம்பிக்கையும், (2) தயவு ஆளுமையும் வேண்டும். இவை இரண்டையும் வாழ்வில் கடைப்பிடித்து வாழ்ந்து வந்தாலே, நாம் தயவின் ஆளுகையின் கீழ் வந்து விடுவோம். அத் தயவு ஏணியினைப் பிடித்துக் கொண்டு தயா பெருஞ்ஜோதியின் அருளினைப் பெறுவதற்கு அன்றாட வாழ்வில் முயல வேண்டும்.
எனது வாழ்வில் மறக்க முடியாத நிகழ்ச்சி ஒன்று உண்டு. தயாநிதி சுவாமிகளுடன் 5 நாட்கள், பம்பாயில் சுபம் பேப்ரிக்ஸில் கிளைக் கடை திறப்பு விழாவின் போது அவர்களின் அருள் ஆசி பெறுவதற்காக விமானம் மூலம் அவர்களை அழைத்துச் சென்றேன்.
அவ் விழாவிற்கு, சமண மதத்தைச் சார்ந்த மராட்டியப் பெருமக்கள்தான் பெரும்பாலும் வந்திருந்தார்கள். நல்ல உள்ளம் கொண்டவர்கள். கடை திறப்பு விழா இனிதே நிறைவேறியது. பின், சுவாமி அவர்களை அருள் உரை நிகழ்த்தும்படிக் கேட்டுக் கொண்டோம். அப்பொழுதுதான் ஒரு அதிசயம் நடந்தது.
சுவாமிகள், ஆங்கிலத்தில், மடை திறந்த வெள்ளம் போல், தயவு விளக்கங்களை அள்ளை அள்ளித் தந்து, தயவு ஆசியினை எங்களுக்கும், வந்திருந்தோர் அனைவருக்கும் வழங்கினார்கள்.
சுவாமிகள், வள்ளற் பெருமானின் திரு அருட்பாவில் பல பாசுரங்களுக்கு விளக்க உரையினை தயவின் வெளிப்பாட்டோடு தீந்தமிழில் அருளித் தந்ததுதான் அன்பர்கள் அனைவருக்கும் தெரியும்.
ஆனால், அவ்ர்கள், ஆங்கிலத்தில் உரை நிகழ்த்துவார்கள் என்பது சுவாமிகளை அறிந்த அன்பர்களுக்கு தெரியாத ஒரு செய்திதான்.
அந்த எண்ணத்தை உடைத்து, முதன் முதலாக, சுவாமிகள், ஆங்கிலத்தில் அருள் உரையாற்றியது, மும்பையில்தான் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றேன். அது மட்டுமல்ல.
இவ்வளவு சிறந்த அருளாற்றல் மிக்க மகானை தரிசனம் செய்ததில் அவ் விழாவிற்கு வந்திருந்த அனைத்து சமயத்தினருக்கும் மகிழ்ச்சி பொங்கியது. சமய மத வித்தியாசம் இல்லாமல் அவர்க்ள் அனைவரும் சுவாமிகளை தம் உளப் பூர்வமாக வணங்கி, ஆசி பெற்றுச் சென்றார்கள். அந்த நிகழ்ச்சி இன்றளவும் என் மனத்தை விட்டு அகலவில்லை. அதனன நான் உங்களுடன் பகிர்ந்து கொண்டேன்.
மதியம் 1.10 மணி அளவில் தயவுத் திரு விசுவநாதன் அவர்கள் அனைவருக்கும் நன்றியுரையினைத் தெரிவித்தார். மேலும் அவர் கீழ்க்கண்டவாறு தனது உரையில் தெரிவித்தார்.
இந்த விழாவினை தயாநிதி சுவாமிகள் அவர்கள்தான் நடத்துகின்றார். “நானே சன்மமர்க்கம் நடத்துகின்றேன்” என்று வள்ளற் பெருமான் கூறிச் சென்றது, தயாநிதி சுவாமிகளுக்கும் பொருந்தும். இங்கு, தயாநிதி சுவாமிகள்தான் ஒவ்வொருவரின் சிரநடுச் சிற்றம்பலமாம் ஆன்மாவின் அகமிருந்து கொந்து உணர்த்த வேண்டியதை எல்லாம் அவ்வப் போதைக் கப்போதே உணர்த்தி, தயா செயல் புரிகின்றார். அனகமாக எங்கும் விரிந்து தயா செயல் புரிகின்றார். இந்த இடத்தில் ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டும். வல்ளலார் வேரு, சுவாமிகள் வேறு அல்ல. உபய பக்கங்களை ஒன்றெனக் காணும் உணர்வு அன்பர்களுக்கு வர வேண்டும்.
சுவாமிகளின் 2ஆவது மகா குரு பூஜை நிகழ்ச்சிக்குப் பின், உலகளாவிய அளயில், திண்டுக்கல் பொன்னகரத்தில், தயாநிதி சுவாமிகளின் அருட்பெருஞ்ஜோதி தயவு இல்லத்தில் நடைபெறும் ஒவ்வொரு நிகழ்ச்சிகளும், இயற்கை அருள் தயவு விளக்கங்களும், செயற்பாடுகளும் வள்ளலார் வெளி (www.vallalarspace.com) மூலம் தொடர்ந்து வெளியாகும் என நாமெல்லாம் நினைத்துப் பார்த்தது கூடக் கிடையாது. இன்று இப்படி நடைபெறுவதைப் பார்க்கும்போது, “உலகெலாம் பரவ என்னுள்ளத்திருந்தே அலகிலல ஒளி செய் அருட்பெருஞ்ஜோதி” என்ற வள்ளற் பெருமானின் அருள் வாக்கின்படிதான் ஒவ்வொன்றும் நடை பெற்றுக் கொண்டிருக்கிறது என்பது வெள்ளிடை மலலயாகும்.
வள்ளற் பெருமான் அவர்கள், அருட்பெருஞ்ஜோதி அகவலில், வெளிநிலை பற்றி 67 இடங்களில் சுட்டிக் காட்டி உள்ளார்கள். இன்று இந்த 67 வெளிநிலை அனுபவங்கள் எல்லாம் ஒரு வல்ளலார் வெளியில், ஒட்டு மொத்தமாக வெளியாகிக் கொண்டிருக்கின்றன என்றால் அது மிகையாகாது. இது மட்டுமல்ல., சுவாமிகளின் தயா விளக்க மாலை, தயவுக் குறள் மற்றும் ஆங்கிலத்தில் அருட்பெருஞ்ஜோதி உரைகள், இவை எல்லாவற்றிற்கும் மேலாக, இன்று சுத்த சன்மார்க்க சத்திய ஞானி தயாநிதி சுவாமி சரவனானந்தா அவர்களால் இயற்றப்பட்ட தயவுப் பாக்களின் 10 பாடல்கள் அடங்கிய ஒரு இனிய புதிய இசை ஒலிப்பேழை (DHAYAVU PAAKKAL audio C.D) “www.vallalarspace.com “வள்ளலார் வெளி” மூலம் வெளியாகி இருக்கின்றது. இந்த நேரத்தில் முதலில், வள்ளலார் ஸ்பேஸ் இணையதளத்திற்கு, தயவு ஆசியையும், தயவு நன்றியையும், எல்லோரின் சார்பாக தெரிவித்துக் கொள்கின்றேன்.
வள்ளல் பெருமான் அவர்கள் தாம் திரிதேக சித்தி பெறும் பொழுது, அன்பர்களை எல்லாம் பார்த்து, நான் இன்று இந்த உடம்பினுள் இருக்கின்றேன். இனி எல்லா உடம்புகளிலும் புகுந்து கொள்வேன் என்று அருளுரை வழங்கிச் சென்றார்.
இறைவன் எண், எழுத்து, சொல், பொருளாக உள்ளான் என சொல்லிய தயாநிதி சுவவமி அவர்கள், தான் எழுதிய நூல்கள், ஆற்றிய தயவுச் சொற்பொழிவுகள், ஒலி நாடாக்கள், நிகழ்ச்சிகள் மற்றும் படங்கள் வாயிலாக, தயவு அன்பர்களுடனேயே தான் இருப்பதாகச் சொல்லியுள்ளார். எக்காலத்தும் அவர்களை விட்டுப் பிரிவதே இல்லை என்பதாகச் சொல்லிச் சென்றுள்ளார்கள் என்பதையும் அவர் நினைவு கூர்ந்தார்.
இந்த 10 தயவுப் பாடல்கள், முழுவதும், தேர்ந்தெடுக்கப்பட்ட, விலை மதிக்க முடியாத நவரத்தினக் கற்களாக தயவு ஒளி வீசி, www.vallalarspace.com இணைய தளத்தின் மூலம் அகில உலகம் எல்லாம் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்வதற்காக, தனது தயவுக் கதிர் வீச்சினைப் பாய்ச்சிக் கொண்டிருக்கின்றன.
இந்த தயவுப் பாடல்களை, மதுரையிலிருந்து ஒலிபரப்பப் பட்டு வரும், ஹலோ எப்.எம். ஒலிபரப்பின் மூலமும் ஒலிபரப்ப முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இந்த ஆடியோ சி.டி.யின் அட்டைப்படம், மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும்.
வள்ளலாரின் சுத்த சன்மார்க்கக் கொடி விளக்கத்தின்படி, 1 பங்கு மஞ்சள், 3 பங்கு வெண்மைஎன்ற முறையில், 1 பங்கு அருட்ஜோதி நடராஜபதி பொன் வண்ணத்திலும், 3 பங்கு குருநாதர்களுக்கு பொருத்தமாக 1) திரு அருட்பிரகாச வள்ளற் பெருமானின் திருவுருவம் (2) சத்திய ஞான சபாபதி குருவின் திருவுருவம் (3) சுவாமி சரவணானந்த குருவின் திருவுருவம் வெண்மமயாகவும் காட்சி அளிக்கின்ற நிலை. இதற்கு இன்னும் எவ்வளவோ விளக்கங்கள் உள்ளன. மேலும் இதனுள் இசைக்கும் பாடல் ஒவ்வொன்றிற்கும் 2 ½ மணி நேர சொற்பொழிவுகளும் செய்யலாம். இதனை விரித்தால் இன்னும் விரியும் என்பதால், இத்தோடு அமைகின்றேன் இந்த தயவுப் பாக்கள் இசை ஒலிப் பேழையினை அனைவரும் வாங்கிப் பயன் பெற வேண்டும். கருத்துக்களை, தமது வாழ்வில் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும்.
அவரது உரை முடிவடைந்ததும், தயவுத் திரு S.S. மோகன்ராம் அவர்கள் இன்றைய தினம் மிகச் சிறப்பான தினமாக இருப்பதால், இந்த தயவுப் பாக்கள் இசைப் பேழையை வாங்குவோருக்கு, தான் பாதி விலையை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்து, மிகுதி சரி பாதி விலையை சலுகை விலையாக வழங்குகின்றேன் என்றார்..
இந்த சலுகை விலை அறிவிப்பினை அவர் தெரிவித்ததும், த்யா நேய அன்பர்களில் பெரும்பாலானோர், இசைப் பேழையினை வாங்கிச் சென்றனர்.
இவ்விதம் சுவாமிகளின் தயவு நெறியின் பால் அதிக ஈர்ப்பு கொண்ட தயவுத் திரு S.S. மோகன்ராம், தான் பெற்ற பேற்றினை, வந்திருக்கும் அனைவருக்கும் பகிர்ந்தளிக்கும் விதத்தில், தயவு நெறி அன்பர்கள் மூலம் அகில உலகெலாம் தயா இயல் உண்மை பரவ வேண்டும் என்ற விதத்தில் சலுகை விலையினை அறிவித்ததற்கும், அவரது தயா நேயமிக்க தயவு உள்ளத்துக்கும் அனைவரும் நன்றி செலுத்தினர்.
மதியம் 1.30 மணி – அருட்பெருஞ்ஜோதி தயவுப் பிரார்த்தனை, திண்டுக்கல் கியாரண்டி ஜூவல்லர்ஸ் தயவுத்திரு மா. இராமலிங்கம் அவர்களால் மேற்கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஜோதி வழிபாடு நடைபெற்றது.
தயவுத் திரு வே. அருணகிரி அவர்களால் திரு அருட்பிரகாச வள்ளற் பெருமான் அருளிச் செய்த விண்ணப்பம் படிக்கப் பெற்று, விழா நிறைவுற்றது.
இக்கூட்டத்தில் முக்கியஸ்தர்களும், சுற்று வட்டாரத்தில் வசிக்கும் சன்மார்க்க அன்பர்களும், சுமார் 200 பேர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
அவர்க்ளில், முக்கியஸ்தர்கள் பெயர்கள் வருமாறு –
நாகல்நகர், சுபம் பேப்ரிக்ஸ், தயவுத் திருவாளர்கள் S.S. சிவராம் மர்ரும் S.S. மோகன்ராம்.
சோழவந்தான் சன்மார்க்க சங்கத் தலைவர் திரு மாரியப்பன் மற்றும் அன்பர்கள்.
தயவுத்திருவாளர்கள் S.L.V. சீத்தாராம் தம்பதிகள், L.குருமூர்த்தி, S. குமாரசிவம், தர்மராஜ், V.T. பட்டி.
தயவுத்திரு வேலாயுதம் மற்றும் ஏ. ராஜேந்திரன்
,, ஷண்முகவேல், முருக தாஸ், நாகல் நகர்.
., சமயபுரத்தான். கே.ஆர். கார்த்திக், திண்டுக்கல்.
.. ரெங்கநாத சுவாமிகள், மதுரை
,, கே.சி. இராமசாமி, நடராஜன். கலைவாணி தம்பதிகள்.
,, ஜோதி செல்வராஜ், கே. இராஜகுமாரி ஓய்வு பெற்ற ஆசிரியை, சின்னாளப்பட்டி,
,, ராம்குமார், தேனி, பழனி செட்டியபட்டி.
.. சோமசுந்தரம், தமிழாசிரியர் மற்றும் பொன். சங்கரலிங்கம்.
,, பி.ஜி. குணசேகரன், கல்கி ஸ்டோர், திண்டுக்கல்.
.,. தயவுத்திருமதி லோகாம்பாள், ரமாபிரபா, சசிகலா மற்றும் மீனாட்சி ஆகியோர்கள்
மற்றும் வெளியூர், நாகல் நகர் திண்டுக்கல் அன்பர்கள்.
தயவுத் தொண்டர்கள், தாய்மார்கள், மாணவ, மாணவிகள்.
திண்டுக்கல் நாகல் நகர், தயவுத் திருவாளர்கள் S.S.சிவராம் மற்றும் S.S. மோகன்ராம், சுபம் பேப்ரிக்ஸ் குடும்பத்தார் ஆகியோரால் அன்னமளிப்பு உபயம் செய்து, அன்பர்கள் மற்றும் ஏழை எளிய மக்களுக்கும் பசியாற்றுவித்தல் பணி நடைபெற்று முடிந்தது.
2 Comments
kadantha matham 24.9.2008 undru pusam
vanthathu .thangal 21.09.2008 yendru type seithullirkal .iya date mattrungal
சுட்டிக்காட்டுவது என்பது ஒரு வரவேற்கத்தக்க விஷயம். இவர், கோயம்புத்தூர் மாவட்டம். மசக்காளிபாளையம்
பிரபாகரனா என்பது தெரியவில்லை..
திண்டுக்கல் தயாநிதி சுவாமி சரவணானந்தா அவர்கள் இருக்கும்போது, மாதப் பூச நாட்கள், வேலை நாட்களாக
வந்தால், அதனை ஒட்டிய பின் அல்லது முன் ஞாயிற்றுக்கிழமை ஒன்றில் சுவாமிகளின் கருத்தின் படி
பொன்னகரத்தில் பூச நாள் விழா எடுப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தது சன்மார்க்க உலகம்.
காரணம், அரசு விடுமுறை நாளில் - பூச நாள் விழாவினை நடத்தினால், பல்வேறு இடங்களில் இருந்தும்
அன்பர்கள் திண்டுக்கல் வந்து விழாவில் கலந்து பயன் பெற வாய்ப்பு ஏற்படும் என்பதையே அடிப்படையாக இந்த
பூச நாள் அல்லாத மாறுபாடான நாளில் அவ் விழாவினை பொன்னகரம் அருட்பெருஞ்ஜோதி தயவு இல்லம்
கொண்டாடுவது என்பது திண்டுக்கல்லில் கூடும் அன்பர்கள் அறிந்த செய்தி.
எனவே, அங்கு விழா நடைபெற்றது 21.9.2008 அன்று - என்பதுதான் சரி.அது ஒரு ஞாயிற்றுக் கிழமை.