DAEIOU - தயவு
கோயம்புத்தூர் ஆல் இன்டியா ரேடியோவில் திருஅருட்பா விற்பனை குறித்த அறிவிப்பு

கோயம்புத்தூர்ஆல் இன்டியா ரேடியோவில் வள்ளல் பெருமான் மற்றும் திண்டுக்கல் சுவாமிகளின் புக் ஸ்டால் குறித்த அறிவிப்பு.
கோயம்புத்தூரில் கடந்த 14.8.2008 முதல் 24.8.2008 முடிய புத்தக விழா நடைபெற்றது,
பல பிரபல புத்தக நிறுவனங்கள், தங்களது படைப்புக்களை இங்கு கொண்டு வந்து குவித்து பொதுமக்கள் பயன்பெற ஏற்பாடு செய்தனர்.
அதேபோல், திருவருட்பிரகாச வள்ளல் பெருமானின் திரு அருட்பா மற்றும் திண்டுக்கல் சரவணானந்தா அவர்களின் புத்தகங்கள் விற்பனை செய்வதற்காக திரு ராம்தாஸ், அவர்கள், கோயம்புத்தூர் சன்மார்க்க அன்பர்கள் மூலம் முயற்சி மேற்கொண்டு, ஸ்டால் எண் 103ல், சுத்த சன்மார்க்க விளக்கம் குறித்த அனைத்து புத்தகங்கள், திரு அருட்பா உபதேசம், திரு அருட்பா அமுதம் ப்ரொஜெக்ட் மூலம் உருவான ஆடியோ சி.டி.கள் (Thiru Arutpa Amutham Project Audio C.Ds.) முதலானவற்றை விற்பனை செய்தனர்.
இறுதி நாளான 24.8.2008 (ஞாயிற்றுக்கிழமை) அன்று சுமார் 3.45 மணி அளவில், ஆல் இன்டியா ரேடியோவிலிருந்து ஒலிபரப்புக் கலைஞர் ஒருவர், பல ஸ்டால்களையும் பார்த்து புத்தக விழாவினைப் பற்றி விவரித்து, செய்தியை நேரடியாக ஒலிபரப்பிக் கொண்டிருந்தார். (Live Relay).
அவரது கண்களில், ஸ்டால் எண் 103 பட்டது. அவர் உடனே, ஆன்மிகம் சார்ந்த புத்தகங்கள், 103ம் எண் ஸ்டாலில் “திண்டுக்கல் தயவு சரவணானந்த சுவாமிகள் புத்தகம் விற்பனை” என்ற தலைப்பின்கீழ் விற்பனை செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்றும், அனைத்தையும் விளக்கும் வகையில், ப்ளெக்ஸ் பேனர்கள் தொங்கவிட்டிருப்பதைப் பற்றியும் (announce) ஒலிபரப்புச் செய்து கொண்டிருந்தார்.
மேற்படி ஸ்டாலில் இருந்த மதுரை தயவு குழு அன்பர், அவரை அருகில் அழைத்தார். உடனே அவர், இது குறித்த விவரங்களை விவரியுங்கள் என்று (Mic) ஒலிவாங்கியைக் கையில் கொடுத்து விட்டார்
உடனே, கோயம்புத்தூர் சரவணம்பட்டியில் “தயா ஒளி இயக்கம்” நடத்திவரும் அன்பர் திரு ராம்தாஸ் மற்றும் திரு சிவகுமார் ஆகியோரில், திரு சிவகுமாரிடம் அந்த ஒலிவாங்கியைக் கொடுத்ததும், அந்த அன்பர் 103ம் நில் புத்தக ஸ்டாலில் உள்ள வடலூர் திரு அருட்பிரகாச வள்ளல் பெருமானின் திரு அருட்பா, உபதேசம் மற்றும் திண்டுக்கல் சுவாமி சரவணானந்தா அவர்கள் திரு அருட்பாவிற்கு எழுதியுள்ள உரைநடை நூல்கள் வைத்திருக்கும் விவரத்தினை இரண்டே நிமிடத்தில் விவரித்தார்.
அந்த விவரம், ஏற்கனவே www.vallalarspace.com இணைய தளத்தின் மூலம் சன்மார்க்க அன்பர்களின் கவனத்திற்கு 15 தினங்களுக்கு முன்பே தெரிவிக்கப் பட்டிருந்தாலும், (online radio message) ரேடியோ மூலம், கிட்டத்தட்ட 500 கிலோ மீட்டர் தூரத்திற்கு 24.8.2004 அன்று ஒலிபரப்புச் செய்யப் பட்டது.
திருவருளே இதனை இவ்விதம் நடத்தியது என்று அங்கு உள்ள அன்பர்கள் வியந்தனர்.
Daeiou Team, Madurai
(camp), Coimbatore.