அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி வள்ளல் பெருமானின் மீட்பளிக்கும் எண்ண அலைகள்- ஓர் ஆய்வு- II
எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருள்வடிவான வள்ளல் பெருமானார் சத்தியத்தின் சாயலான ஜீவகருணையில் வாழும் அனைத்து ஆத்மாக்களுக்கும் தன்னுடைய மீட்பளிக்கும் எண்ண அதிர்வுகளைத் தன்னுடைய ஞானதேகத்தின் மூலம் செலுத்திக்கொண்டிருக்கிறார்.
துன்பெலாம் தீர்ந்தன சுகம் பலித்தது நினைச் சூழ்ந்தருள் ஒளி நிறைந்தே சுத்த சன்மார்க்க நிலை அனுபவம் நினக்கே சுதந்தரமானதுலகில் வன்பெலாம் நீக்கி நல்வழியெலாமாக்கி மெய் வாழ்வெலாம் பெற்று மிகவும் மன்னுயிரெலாம் களித்திட நினைத்தனை உன்றன் மனநினைப்பின் படிக்கே அன்ப நீ பெறுக உலவாது நீடுழி விளை யாடுக அருட்ஜோதியாம் ஆட்சி தந்தோம் உனைக் கைவிடோம் கைவிடோம் ஆணை நம்மாணை என்றே இன்புறத் திருவாக் களித்தென்னுள்ளே கலந்து இசைவுடன் இருந்த குருவே.........
இவ்வுலகில் இருக்கும் அனைத்து ஆத்மாக்களும் மரணமில்லாப் பெருவாழ்வு பெறுவதற்கு எல்லா வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வள்ளல் பெருமானார் மூலம் அருள்நெறியைத் தந்து அருட்ஜோதியையும் தந்து, இம்மண்ணுலகில் அவரையே ஞானகுருவாகவும் நியமித்திருக்கிறார். வள்ளல் பெருமானார் ”மனித தேகம் எடுத்த அனைத்து ஆத்மாக்களும் மரணமில்லாப் பெருவாழ்வு பெற வேண்டும் ” என்று எண்ணியவாறு உயிர்களெல்லாம் இறப்பு என்கிற துன்பம் நீங்கிக் களிப்படைந்திட அருட்ஜோதியை வள்ளல் பெருமானாருக்குத் தந்து ’உனை கைவிடோம்’, ’கைவிடோம்’ என்று வாக்களித்திருக்கிறார். நீடுழி விளையாடுக! இதனைச் செலுத்துக! என்று இறைவனே அவருடன் இருந்து உரைப்பதால் அவர் மண்ணுலகத்தில் இருக்கும் அனைத்து உயிர்களுக்கும் ஞானகுருவாகவும் அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவராகவும் இருக்கிறார் என்பது சத்தியமான உண்மையே. என்னையும் நின்னையும் ஓருருவாக்கி யான் உன்னியபடியெலாம் சீருறச் செய்துயிர்த் திறம் பெற அழியா.... மேலும் மரணமில்லாப் பெருவாழ்வு பெற்ற எல்லாம் வல்ல அருட்குருவாகிய ஸ்ரீ ராமலிங்க சுவாமிகள் இன்றைக்கு அனைத்து உயிர்களிடத்தும் தன்னுடைய மீட்பளிக்கும் எண்ண அலைகளைச் செலுத்திக்கொண்டிருக்கிறார் என்பதற்கு நிறைய திருவருட்பா பாடல்கள் உள்ளன. விரிவஞ்சி அவைகள் குறிப்பிடவில்லை.
உதாரணத்திற்கு அகவல் வரிகளில்
அருளமுதளித்தனை அருள்நிலை ஏற்றினை அருளறிவளித்தனை அருட்பெருஞ்ஜோதி... உலகுயிர்த் திரளெலாம் ஒளி நெறி பெற்றிட இலகும் ஐந்தொழிலையும் யான் செயத் தந்தனை....... களங்கம் நீத்து உலகம் களிப்புற மெய்நெறி விளங்க என்னுள்ளே விளங்கு மெய்ப்பொருளே..... உலகினில் உயிர்களுக்கு உறும் இடையூறெலாம் விலக நீ அடைந்து விலக்குக மகிழ்க சுத்த சன்மார்க்க சுகநிலை பெறுக.... திருவருட்பாவிலும்: சிவமே பொருளென்று அறிவால் அறிந்தேன் செத்தாரை மீட்கின்ற திண்மையைப் பெற்றேன்.... எனவே எல்லாம் வல்ல வள்ளல் பெருமானின் மீட்பளிக்கும் எண்ண அலைகள் அறநெறியியாகிய -அருள்நெறியில் வாழும் அனைத்து ஆத்மாக்களுக்கும் தொடர்ந்து நன்மை அளித்துக் கொண்டிருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மையே. மேலும் மரணமில்லாப் பெருவாழ்வில் வாழ்ந்துக்கொண்டிருக்கும் வள்ளல் பெருமானின் நிலையைக் கற்பனையாலும், வார்த்தைகளாலும் அளவிட்டுக் கூற முடியாது. எல்லையற்ற பிரபஞ்சத்தில் அவர் எங்கும் வியாபித்துக் கொண்டிருக்கிறார். அவருடைய நிலையும் இறையின் நிலையும் ஒன்றே, இறை நிலையை உணர்ந்தால் அவருடைய நிலையையும் உணர முடியும்.
அருளறியார் தமையறியார் எம்மையும் பொருளறியார் எனப் புகன்ற மெய்ச்சிவமே.. எனவே அருளுடன்( அன்பு-தயவு-கருணை) கூடிய உலகியியல் வாழ்க்கையில் வாழ்ந்தால் வள்ளல் பெருமானின் மீட்பளிக்கும் எண்ண அலைகளை நாம் நிச்சயமாக உணர முடியும். சாகாக்கல்வியையும், சுத்த சன்மார்க்கத்தின் சுகவாழ்வையும், மரணமில்லாப் பெருவாழ்வையும் பெற முடியும்.
சாகாக்கல்வியில் தியானம் மற்றும் தவத்தின் பங்கை அடுத்தத் தொடரில் வள்ளல் பெருமானின் அருளால் பார்ப்போம்.
************************************** அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி தகவல் உதவி: எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் தனிப்பெருங்கருணை

4 Comments
வாழ்வு என்றால் தேகத்தை விட்டு உயிர் பிரியாதிருப்பதே அல்லவா?அவரது உடம்பானது எங்கும் வியபிற்ற்ஹ்துவிட்டது என்றால் அந்த உடம்பினுள் இருந்த வுயிர் என்ன ஆயிற்று?வள்ளலாரால் இருந்த இடத்தில் இருந்தே பிரபஞ்சம் முழுவதும் ஆட்சி செய்ய முடியும் என்று சொல்லுங்கள். அவர் உடம்பு வியாபித்து இருக்கின்றது என்று தயவு செய்து சொல்லவேண்டாம். எனது கருத்தில் தவறு இருந்தால் என்னை மன்னிக்கவும் நன்றி வந்தனம்
வள்ளல் பெருமானார் வேறு, இறைவன் வேறு இல்லை, இருவரும் ஒன்றே, தங்களுக்கு தெரியாதது ஒன்றுமில்லை.
இறைவன் எவ்வாறு எங்கும் நிறைந்துள்ளானோ, அதுபோல் வள்ளல் பெருமானார் இப்பொழுது இருக்கிறார். சாதாரண நிலையில் உள்ளவர்களுக்கு தான் உயிர் தேவையாக இருக்கும். உடம்பு தேவையாக இருக்கும். ஞானதேகத்தில் இருப்பவர்கள் உடம்புடனும், உடம்பு இல்லாமலும் இருக்கக்கூடும்.
மேலும், வள்ளல் பெருமானார் :
என்உடலும் என்பொருளும் என்உயிரும் தான்கொண்டான்
தன்உடலும் தன்பொருளும் தன்உயிரும் - என்னிடத்தே
தந்தான் அருட்சிற் சபையப்பா என்றழைத்தேன்
வந்தான்வந் தான்உள் மகிழ்ந்து.
என்று கூறுகிறார்.
இதற்கு மேல் ஆய்வுச் செய்ய இவன் விரும்பவில்லை, திருவருள் சம்மதமும் எமக்கு அளிக்கப்படவில்லை.
இருப்பினும் இவ்வினாவை, எம்முடைய குருவும், இறையுமாகிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர், திருவருட்பிரகாச வள்ளல் பெருமானின் பாதக்கமலத்தில் சமர்ப்பிக்கிறேன். இக்கட்டுரை எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் தனிப்பெருங்கருணையால் எழுதப்பட்டது என்பது சத்தியம் என்றால் இதற்கான பதிலையும் தேவரீர் தாங்களே தந்தருள வேண்டும்.
எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி அற்புதக் கடவுளே! இவ்வினாவிற்கு தாங்கள் தான் பதிலளிக்க வேண்டும், மரணமில்லாப் பெருவாழ்வில் வாழ்ந்துக்கொண்டிருக்கும் தங்களுக்கு தெரியாது ஒன்றுமில்லை, எல்லாவற்றையும் தாங்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறீர்கள், இந்த வினாவிற்கான பதிலை தாங்களே தெரிவித்தருளுங்கள்.
திருவருட் பெருங்கருணையை வேண்டி
குமரேசன்
kumaresan krishnamurthy
Gnana thegam pettravargal udambudanum udambu illamalum irukkalaam endreergal. Ithu Vallal Perumanin karuthukku muranpaadaai ullathu. yen enil, uyir thanithu iyangaathu udal eduthey iyangum enbathu perumanin vaaku. Melum, gnana thegam endra sollil thegam enbathu udambai kurippathu allava. Kadul engum viyaabithu irukkiraar enbathu unmai. Vallal Peruman kadavul nilai arinthu ammayam aanathum unmai. Aanal Peruman engum viyaabithu irukkirar enbathu poruntathu. Engum viaybithavar endraal avar nam ullum irukka vehndum. Ulley irukkirar endral namakku kuraigal irukka kuudathu. Melum, aanma ivvudambil irunthalum athu or uruppaga illamal thanithe irukirathu. Avvanmavai or uruppu aaka vendum engiraar. agavalil agapoo aga uruppu akka atharku avai agathey vagutha arut perum jothi endru kuruvaar. Anmavai uruppu aaga matra vendum enbathu avar karutthu. Or uruppu aana piragu, gnana tegam petravarkal udambodum udambillamalum irupparkal enbathu muranpadai ullathu. aagaiyal, peruman engum viyabithu illai aanal avarudaiya arul aatchiyaanathu avar iruntha idathil irunthey avar engum selutha koodum enbathu ennudaiya panivaa karuthu. Nandri. Sritharan, Malaysia
உங்கள் கருத்துக்கு நன்றி,
வேலை பளு காரணமாக உடனடியாக பதில் அளிக்க இயலவில்லை, மன்னிக்கவும்.
இறைவன் எங்கும் நிறைந்திருக்கிறார் என்பது புனைந்துரையாத, பொய் புகலாத சத்தியவான் வாக்கு, அதனை குறிப்பிடுவதற்கு இவ்விடம் போதாது எனவே ஒரு கட்டுரை வடிவில் வெளி வருகிறது, மேலும் இவ்வடிமையின் கட்டுரையில் எல்லாம் வல்ல எம்முடைய குருநாதரின் கருத்துக்கு மாறாக எவ்விதக் கருத்தும் இருக்காது.
மேலும் இதனை நல்லதொரு சத்விசாரமாக ஏற்றுக்கொள்கிறேன்.
நிற்க, திருவருட்பாவில் இறைவன் எங்கும் நிறைந்திருக்கவில்லை என்று குறிப்பிட்டிருந்தால் அதனையும் தெரிவியுங்கள், நன்றி
நன்றி