அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
வள்ளல் பெருமானானின் மீட்பளிக்கும் எண்ண அலைகள்- ஓர் ஆய்வு
உலக மக்களின் துயரங்களைத் தீர்ப்பதற்காகவும், மண்ணுலகத்தில் மக்களின் அறியாமையை நீக்குவதற்காகவும், இப்புனித தேசத்திலும், பிற நாடுகளிலும் பல முனிவர்கள், யோகிகள், மகான்கள் மற்றும் சித்த புருஷர்கள் தோன்றினார்கள். மக்களின் அறியாமை என்கிற மாயையைப் போக்குவதற்காக மறைமுகமாக பல தத்துவங்களைக் கதையாக சித்தரித்து மக்களிடையே உண்மையை உணர்த்தினார்கள். கதையில் லயித்த மக்களோ அதில் உள்ள உண்மையை உணராது பேதங்கொண்டு மக்களிடையே பிரிவினையை உருவாக்கினார்கள். அதனால் இயற்கையாகவே மனிதனிடம் இருந்த இரக்கக் குணம் மாறி அரக்கக் குணம் உண்டாயிற்று. மக்களின் இயற்கையான குணாதியங்களில் ஒன்றான அன்பு- கருணை- தயவு இறந்துப் போனது, சுயநலம் அதிகமானது. இந்நிலையே எல்லாம் வல்ல சிதம்பரம் ராமலிங்க சுவாமிகள் என்கிற வள்ளல் பெருமானாரை இவ்வுலகத்திற்கு வருவிக்கக் காரணமானது.
மனிதத் தன்மையில் இல்லாதவர்களை- கருணையில்லாதவர்களை மீட்பதற்கு அவருடைய ஜீவகாருண்ய ஒழுக்க நெறி இன்று ஒரு மாபெரும் பணியைச் செய்துக்கொண்டிருக்கிறது.
அவ்வுலகில் சிறந்துநின்றார் அளவிறந்த கோடி
அத்தனைபேர் களும்அந்தோ நித்தம்வருந் திடவும்
எவ்வுலகும் உணர்வரிய திருச்சிற்றம் பலத்தே
இனிதமர்ந்த தலைவர்........... -திருவருட்பா
இவையாவும் புனைந்து உரைக்கவில்லை, சத்தியவான் வார்த்தையே! வருத்தப்பட்டு உலகியியல் பாரம் சுமப்பவர்களுக்கு எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஒரு உபாயத்தைத் தந்தருளிருக்கிறார். அந்த உபாயம் ஜீவ கருணையாகிய அன்பு-கருணை- தயவு . சத்தியத்தின் சாயலும் இதுவே, வள்ளல் பெருமானின் மீட்பு அலைகளின் சாயலும் இதுவே.
எல்லா உயிரினத்தையும், படைப்பினங்களையும் தனது சுயசக்தியால் இயங்க வைக்கும் இறைவன் சகல மக்களின் இதயங்களிலும் சத்தியத்தின் சாயலாகக் குடிக் கொண்டிருக்கிறான். உடலால், மனதால், அறிவால் அந்த சத்தியத்தின் சாயலை உணர்ந்தால் நிரந்தரமான சாந்தியும், சமாதானமும் கிடைக்கும். சத்தியத்தின் சாயலை நாம் அடையும் வரை இறைவனின் தனிப்பெருங்கருணையை நாம் உணர முடியாது. ஆகவே சத்தியத்தின் குணத்தை அருளை -தயவை-கருணையை உலகியியல் வாழ்க்கையில் கடைப்பிடித்து எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவராகிய வள்ளல் பெருமானாரின் மீட்பு அலைகள் மூலம் பிறவிப்பயனைத் தீர்ப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்வோம்.
தொடரும்..,
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதிதனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

அகத்தே கறுத்துப் புறத்து வெளுத்திருந்த உலகரனைவரையும் சகத்தே திருத்திச் சன்மார்க்க சங்கத்து அடைவித்திட அவரும் இகத்தே பரத்தைப் பெற்று மகிழ்ந்திடுதற்கென்றே எனை இந்த யுகத்தே இறைவன் வருவிக்கவுற்றேன் அருளைப் பெற்றேனே. உலகியியல் போக வாழ்க்கையில் சிக்கித் தவிர்த்துக்கொண்டிருக்கும் மக்களை மீட்பதற்காக இறைவனால் வருவிக்கவுற்ற வள்ளல் பெருமானார் மக்களின் துயரத்தைப் போக்கும் பொருட்டு அருள்நெறியை உலகிற்கு வழங்கினார். மக்களிடம் நிலையாமையை உணர்த்தி அவர்களைத் தன்னுடைய அருள்நெறிக்கு அழைத்தார். அழைத்துக்கொண்டும் இருக்கிறார்.
வையகத்தீர் வானகத்தீர் மற்றகத்தீர் நுமது வாழ்க்கை எலாம் வாழ்க்கை என மதித்து மயங்காதீர் மையகத்தே உறுமரண வாதனையைத் தவிர்த்த வாழ்க்கையதே வாழ்க்கைஎன மதித்ததனைப் பெறவே மெய் அகத்தே விரும்பி இங்கே வந்திடுமின்!....
அருள்நெறியில் நின்று அருள் வடிவான இறையை மிக எளிதில் உணருங்கள் என்பதே வள்ளல் பெருமானின் உபதேசமாக இருந்தது.
உயிருள் யாம் எம்முள் உயிர் இவை உணர்ந்தே உயிர் நலம் பரவுக என்று உரைத்த மெய்ச்சிவமே - அகவல்
மனிதத் தன்மையில் இல்லாதவர்களை- கருணையில்லாதவர்களை மீட்பதற்கு அவருடைய ஜீவகாருண்ய ஒழுக்க நெறி இன்று ஒரு மாபெரும் பணியைச் செய்துக்கொண்டிருக்கிறது.
மாய்ந்தவர் மீட்டும் வருநெறி தந்திதை யாய்ந்திடென் றுரைத்த வருட்பெருஞ் ஜோதி”
இறந்தவ ரெல்லா மெழுந்திட வுலகில் அறந்தலை யளித்த வருட்பெருஞ் ஜோதி செத்தவ ரெல்லாஞ் சிரித்தாங் கெழுதிறல் அத்தகை காட்டிய வருட்பெருஞ் ஜோதி இறந்தவ ரெழுகவென் றெண்ணியாங் கெழுப்பிட அறந்துணை யெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி செத்தவ ரெழுகெனச் செப்பியாங் கெழுப்பிட அத்திற லெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி - அகவல்
எனவே எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவராகிய சிதம்பரம் ராமலிங்க சுவாமிகள் தன்னுடைய “மீட்பளிக்கும் எண்ண அலைகள்” மூலம் இந்த யுகத்தில் முக்தி மற்றும் மரணமில்லாப் பெருவாழ்வை அவரவர்களின் பக்குவத்திற்கு ஏற்ப வழங்கிக்கொண்டிருக்கிறார் என்பதில் எவ்வித ஐயப்பாடும் கொள்ளத் தேவையில்லை
உண்மையுரைக்கின்றேன் இங்கு வந்தடைமின் உலகீர் உரை இதனில் சந்தேகித்துளறி வழியாதீர்.....
அவருடைய “மீட்பளிக்கும் எண்ண அலைகள்” மனித எண்ணத்தின் பரிணாம வளர்ச்சியை முற்றிலுமாக மாற்றுவதற்கு ஏதுவாக ஜீவகருணையில் இருக்கும் அனைத்து ஆத்மாக்களுடன் நிரந்தரத் தொடர்புடையதாக இருக்கிறது.
களித்துலகில் அளவிகந்த காலம் உலகெல்லாம் களிப்படைய அருட்ஜோதிக் கடவுள் வரு தருணம் தெளித்திடும் எத் தருணம் அதோ என்னாதீர் இதுவே செத்தவரை எழுப்புகின்ற திகழ் தருணம் உலகீர் ஒளித்துரைக்கின்றேன் அலன் நான் வாய்ப்பறை ஆர்க்கின்றேன் ஒரு சிறிதும் அச்சமுறேன் உள்ளபடி உணர்ந்தேன்......
என்றும்,
யான்புரிதல் வேண்டுங்கொல் இவ்வுலகில் செத்தாரை ஊன் புரிந்து மீள உயிர்ப்பித்தல்- வான் புரிந்த அம்பலத்தான் நல்லருளால் அந்தோ நான் மேற்போர்த்த கம்பலத்தால் ஆகும் களித்து.
எனவே வள்ளல் பெருமானின் மீட்பலைகள் ஜீவகருணையில் இருக்கும் ஆத்மாக்களுக்கு அபயம் அளித்து அவர்களுக்கு கிடைத்தற்கரிய பேறான மரணமில்லாப் பெருவாழ்வை அளித்துக்கொண்டுவருகிறது என்றால் அது மிகையாகாது.
ஆகவே ஜீவ கருணையில் இருக்கும் ஆத்மாக்கள் துயருர வேண்டாம், நம்முடைய அப்பன் வருகின்ற நாள் எந்த நாளோ! என்று வருந்தவும் வேண்டாம். அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வருகிறத் தருணம் உருவாயிற்று.
ஆளுடையான் நம்முடைய அப்பன் வருகின்ற நாள் எதுவோ என்று நலியாதீர்- நீள நினையாதீர் சத்தியம்நான் நேர்ந்துரைத்தேன் இந்நாள் அனையான் வருகின்றான் ஆய்ந்து.
சத்தியவான் வார்த்தை இதுதான் உரைத்தேன் கண்டாய் சந்தேகம் இலை இதனில் சந்தோடம் உறுவாய் இத்தினமே அருட்ஜோதி எய்துகின்ற தினமாம் இனிவரும் அத்தினங்கள் எல்லாம் இன்பம் உறு தினங்கள் சுத்த சிவ சன்மார்க்கம் துலங்கும் எலா உலகும் தூய்மை உறும், நீ உரைத்த சொல் அனைத்தும் பலிக்கும் செத்தவர்கள் எழுந்து உலகில் திரிந்து மகிழ்ந்து இருப்பார் திருஅருட்செங்கோல் எங்கும் செல்லுகின்ற தாமே!
இப்பாடலில் மிகப்பெரிய உண்மை அடங்கியுள்ளது. மேலும் எல்லா வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வள்ளல் பெருமானாருக்கு வரமும் கீழ்கண்டவாறு அளிக்கிறார். ”நீ உரைத்த சொல் அனைத்தும் பலிக்கும், செத்தவர்கள் எழுந்து உலகில் திரிந்து மகிழ்ந்து இருப்பார்கள். சுத்த சன்மார்க்கம் எல்லா உலகிலும் துலங்கும், பரந்து விரியும்”.
சுத்த சிவ சன்மார்க்கம் துலங்கும் எலா உலகும் தூய்மை உறும், நீ உரைத்த சொல் அனைத்தும் பலிக்கும் செத்தவர்கள் எழுந்து உலகில் திரிந்து மகிழ்ந்து இருப்பார்
மேலும் இந்த உலகத்தில் உருத்திரர்கள், நாரணர்கள், பிரமர்கள், விண்ணோர்கள், கருடர்கள், காந்தருவர்கள், இயக்கர்கள், பூதர்கள், யோகியர்கள், சித்தர்கள், முனிவர்கள் மற்றும் வானவர்கள் இப்படி அனந்தக் கோடி மகாபுருஷர்கள் இருக்கிறார்கள்,
உருத்திரர் நாரணர் பிரமர் விண்ணோர் வேந்தர் உறுகருடர் காந்தருவர் இயக்கர் பூதர் மருத்துவர் யோகியர் சித்தர் முனிவர் மற்றை வானவர்கள் முதலோர்தம் மனத்தால் தேடி...... மகாதேவ மாலை அதுமட்டுமல்ல, வள்ளல் பெருமானாரைப் போல் தவம் செய்பவர்களும் கோடிக்கணக்கில் உள்ளனர்.
இவ்வுலகில் எனைப்போல்வார் ஓர்அனந்தம் கோடி என்னில்உயர்ந் திருக்கின்றார் எத்தனையோ கோடி
அவ்வுலகில் சிறந்துநின்றார் அளவிறந்த கோடி
அத்தனைபேர் களும்அந்தோ நித்தம்வருந் திடவும்
எவ்வுலகும் உணர்வரிய திருச்சிற்றம் பலத்தே
இனிதமர்ந்த தலைவர்........... -திருவருட்பா
ஆனால் அவர்களெல்லாம் வியக்கும் வண்ணம் எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அவர்களுக்கு முன்னே திருவருட்பிரகாச வள்ளல் பெருமானாருக்கு அனைத்து வித சக்திகளையும் தந்து, தன்னையே தந்து, ( உயிர், பொருள், ஆவி) ” “இவ்வுலகத்தில் உள்ள அனைத்து மக்களும் இறவாப் பெருநெறியைப் பெறுவார்கள்” அவர்களுக்கெல்லாம் மெய்ப்பொருளை நீயே விளக்குவாய் என்று ஆணையும் இடுகிறார்.
புனிதமுறு சுத்தசன் மார்க்கநெறி காட்டிமெய்ப் பொருளினை உணர்த்தி யெல்லாம் ஏறுற்ற சுகநிலை யடைந்திடப் புரிதிநீ யென்பிள்ளை யாதலாலே இவ்வேலை புரிகவென் றிட்டனம் மனத்தில் வே றெண்ணற்க வென்ற குருவே
எனவே எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் மீட்பளிக்கும் எண்ண அதிர்வுகள் இன்று துஞ்சிய மாந்தர்களை எல்லாம் எழுப்பி சுத்த சன்மார்க்க வாழ்வு அளித்துக் கொண்டிருக்கிறது என்பது சத்தியமே.
துஞ்சிய மாந்தரை எழுப்புக நலமே சூழ்ந்த சன்மார்க்கத்தில் செலுத்துக சுகமே விஞ்சுற மெய்பொருள் மேனிலை தனிலே விஞ்சைகள் பலவுள விளக்குக என்றாய்
இவையாவும் புனைந்து உரைக்கவில்லை, சத்தியவான் வார்த்தையே! வருத்தப்பட்டு உலகியியல் பாரம் சுமப்பவர்களுக்கு எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஒரு உபாயத்தைத் தந்தருளிருக்கிறார். அந்த உபாயம் ஜீவ கருணையாகிய அன்பு-கருணை- தயவு . சத்தியத்தின் சாயலும் இதுவே, வள்ளல் பெருமானின் மீட்பு அலைகளின் சாயலும் இதுவே.
எல்லா உயிரினத்தையும், படைப்பினங்களையும் தனது சுயசக்தியால் இயங்க வைக்கும் இறைவன் சகல மக்களின் இதயங்களிலும் சத்தியத்தின் சாயலாகக் குடிக் கொண்டிருக்கிறான். உடலால், மனதால், அறிவால் அந்த சத்தியத்தின் சாயலை உணர்ந்தால் நிரந்தரமான சாந்தியும், சமாதானமும் கிடைக்கும். சத்தியத்தின் சாயலை நாம் அடையும் வரை இறைவனின் தனிப்பெருங்கருணையை நாம் உணர முடியாது. ஆகவே சத்தியத்தின் குணத்தை அருளை -தயவை-கருணையை உலகியியல் வாழ்க்கையில் கடைப்பிடித்து எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவராகிய வள்ளல் பெருமானாரின் மீட்பு அலைகள் மூலம் பிறவிப்பயனைத் தீர்ப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்வோம்.
தொடரும்..,
****************
தகவல் உதவி:
எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதிதனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
Write a comment