Vallalar Universal Mission Orphange Homes
சன்மார்க்கப் பணி செய்ய கட்டளையிடுதல்

சன்மார்க்கப் பணி செய்ய கட்டளையிடுதல்


உலகில் இதுவரை பல சமயங்கள் பல மதங்கள் எனும் பவநெறியே பரவியிருக்கிறது, இவையெல்லாம் பிள்ளை விளையாட்டு என உணராது மக்கள் அவற்றில் ஈடுபட்டுப் போர்செய்து இறந்து இறந்து வீணாகிறார்கள். உண்மை நெறியை அறிந்திலர். இனியும் மக்கள் இறந்து இறந்து வீணாகாத வண்ணம் விரைந்து சுத்த சன்மார்க்க நெறியைக் காட்டி உண்மைப் பொருளை உணர்த்தி இன்புறச் செய்வாயாக, மக்களைப் பொது நெறியில் செலுத்துவாயாக, என் பிள்ளை ஆதலால் உரிமையோடு உனக்கு இவ்வேலையை இட்டேன். மனத்தில் வேறு எண்ணாதே என்று இறைவன் இராமலிங்க அடிகட்கு கட்டளையிட்டருளினான்.


பேருற்ற உலகிலுறு சமயமத நெறிஎலாம்

பேய்ப்பிடிப் புற்றபிச்சுப்

பிள்ளைவிளை யாட்டென உணர்ந்திடா துயிர்கள் பல

பேதமுற் றங்கும் இங்கும்

போருற் றிறந்துவீண் போயினார் இன்னும் வீண்

போகாத படி விரைந்தே

புனிதமுறு சுத்த சன்மார்க்க நெறி காட்டிமெய்ப்

பொருளினை உணர்த்திஎல்லாம்

ஏருற்ற சுகநிலை அடைந்திடப் புரிதிநீ

என்பிள்ளை ஆதலாலே

இவ்வேலை புரிக என் றிட்டனம் மனத்தில்வே

றெண்ணற்க என்ற குருவே

நீருற்ற ஒள்ளிய நெருப்பே நெருப்பினுள்

நிறைந்திருள் அகற்றும் ஒளியே

நிர்க்குணா னந்தபர நாதாந்த வரை ஓங்கு

நீதி நடராஜபதியே

- 6 ( இடை ) நடராஜபதிமாலை 27.



பன்னெறிச் சமயங்கள் மதங்கள் என் றிடும் ஓர்

பவநெறி இதுவரை பரவிய திதனால்

செந்நெறி அறிந்திலர் இறந்திறந் துலகோர்

செறி இருள் அடைந்தனர் ஆதலின் இனி நீ

புன்னெறி தவிர்த்தொரு பொதுநெறி எனும் வான்

புத்தமு தருள் கின்ற சுத்த சன்மாக்கத்

தன்னெறி செலுத்துக என்ற என் அரசே

தனி நடராஜ என் சற்குரு மணியே.


6 ( இடை ) சற்குருமணிமாலை 12



இங்ஙனம் இறைவனால் சன்மார்க்கத்தைப் பரப்பக் கட்டளையிடப் பெற்ற அடிகள், சன்மார்க்க சங்கம் அமைத்தும் சன்மார்க்க தருமச்சாலையை அமைத்தும் சன்மார்க்க ஞானசபையை அமைத்தும் உலகில் சன்மார்க்கத்தை நாட்டியருளினார்.


இராமலிங்க அடிகளார் வரலாறு

சன்மார்க்க தேசிகன் என்னும் ஊரன் அடிகள்