Vallalar Universal Mission Trust   ramnad......
ஏன் கண்டிப்பாக அசைவ உணவுகளை சாப்பிடக்கூடாது?

ஏன் கண்டிப்பாக அசைவ உணவுகளை சாப்பிடக்கூடாது?
  1. அடிப்படையில், உயிர்களிடம் உள்ள இரக்கத்தினால்
  2. உடலுக்கும், மனதிற்கும் ஆன்மாவுக்கும் தீங்கு விளைவிக்கக்கூடியது
  3. இறந்த உடல் பிணத்திற்குச் சமம். பிணத்தையா உண்பது மனித இனம்?
  4. எல்லா ஜீவராசிகளும் இறைவனின் அம்சம். ஜீவராசிகளைக் கொல்வது மற்றும் அதனை உண்பதும் தெய்வ விரோதம்.
  5. புலால் என்கிற அசைவ உணவுகளை உண்பவன் எந்த ஆன்மீக நிலைக்கும் அருகதை அற்றவன் ஆவான்.
தயவு
4 Comments
hariharan_82
வள்ளலார் சுவாமி அவர்கள் வெட்டு ஒண்ணு துண்டு ஒண்ணு என்று சொல்லீட்டுப்
போயிட்டார்.
அவர்காலத்திலே..இருந்த மாதிரித்தானே இன்றளவும் சன்மார்க்க சங்கங்களில்
நீம் பெரிசா நாம் பெரிசா என்ற நிலைப்பாடு இருக்கிறது.
கடுமையான சண்டை சச்சரவுகளும் இருக்கு..
நான் சொல்றதுதான் சரி..அதைத்தான் நீ கேட்கணும் என்று ஒவ்வொருத்தரும்
அவரவர் பாணியில் சொல்லுகின்றார்கள்.
நல்ல வேளை, திரு அருட்பாவை இன்னும் யாரும் மாற்றிச் சொல்லவில்லை.
அந்த வகையில் பிழைத்தது
Monday, December 7, 2009 at 23:27 pm by hariharan_82
drsbarathan
அசைவ உணவு ராஜச, தாமச குணங்களை மட்டுமே தரும். சாத்விகம் சுத்தமாக நம்மை விட்டு விலகும். விலங்குக்கும் நமக்கும் உள்ள வித்தியாசமும் நம்மை விட்டு விலகும். தேவையா?
வள்ளலாரின் இளமை சென்னையில் கழிந்த போது, அவர் போகும் வழியில் திண்ணையில் அமர்ந்திருந்த சாது, அவரை மட்டும் "இதோ ஒரு மனிதன் போகிறான்" என்றும் மற்றோர் செல்கையில் எதாவது ஒரு மிருகத்தின் பெயரைச் சொல்வதும் வழக்கம். எல்லோரும் படித்திருக்கிறோம். வள்ளலாரிடம் மட்டுமே மனிதாபிமானம் ஆன ஜீவகாருண்யம் இருந்ததை அவரின் இளமைப் பருவத்திலேயே கண்ட அந்த சாது ஒரு முக்காலமும் உணர்ந்த ஞானியோ.
பெருதற்கரிதான மானிடப் பிறவி பெற்ற நாம் கற்றிருந்தும், கற்ற படி நிற்க ஏன் முடிவதில்லை? "நுண்ணிய நூல் பல கற்பினும் மற்றும் தன் உண்மை அறிவே மிகும்" என்பதாலா?
Please, don't give way to fate. We do have FREE WILL.
"சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ, நன்றின் பால் உய்ப்ப தறிவு"
வள்ளுவர், வள்ளலார் நம் வாழ்க்கை வளம் பெற நல்லதையே சொல்லியிருக்கிரார்கள். அதை கொஞ்சமாவது பின் பற்ற வேண்டுவது நமது கடமை.
வள்ளலார் நினைவுடன்,
அன்பன் பரதன்.
Thursday, June 17, 2010 at 04:14 am by drsbarathan
prabhumultimedia
oouir endral ulagathil irukum sedigal, codigal, thavarangal, ellame oouir ulla jevarasigal. adhai mattum uunallam pulal mattum unnakudatha why kadavaluku pall abizayagam mattum seigerirgal adhu mattu rathathin oru paguthithane ean pengalidam suramkum pallai kadavaluku abizayagam panna vendiyathuthane
nambikai vai muda numbikai vaikathaaaaaaaa
Tuesday, July 20, 2010 at 06:32 am by prabhumultimedia
Bhuvaneswari Senthil
முதலில் சுத்த சன்மார்க்கத்தில் அபிஷேகம் என்ற பேச்சுக்கே இடமில்லை. ஜீவ இம்சை என்பது தாவரங்களுக்கு பொருந்தாது . வளரும் நகத்தை நறுக்குவது போல் இருப்பதுவே தாவரங்களின் உணர்வு.
Tuesday, July 20, 2010 at 07:27 am by Bhuvaneswari Senthil