அருள்பாவலர் சக்திவேல் .வே
தர்மச்சாலையின் தவப் பயன்....(3 )
வடலூர் தர்மச்சாலை 151-ஆம் ஆண்டு விழா .....சிறப்புப் பதிவு (..3)

★1867 வைகாசி 11-இல் வடலூரில் வள்ளல் பெருமனார் சத்தியத் தர்மச்சாலையை தொடங்கினார்கள்.

●இதன் நோக்கம் எவ்வகையிலும் ஆதரவில்லாத - ஆகாரமில்லாத ஏழைகளின் பசியைத் தினசரி ஆற்றிவைப்பதாகும்.

◆அன்று தொடங்கிய தர்மச்சாலை இன்று வரை 150 ஆண்டுகளாய் இடைவிடாது - தடைபடாது ஏழைகளின் பசியைத் தவிர்க்கும் பணியைச் செய்து வருகின்றது....என்பது அனைவரும் அறிந்ததே.....

★■◆●>> சத்தியத் தர்மச்சாலை வள்ளல் பெருமனாரைப் பொறுத்தவரை தவச்சாலையாகவும் திகழ்ந்தது...... என்பது உங்களுக்குத் தெரியுமா....?..!

★பொதுவாக துறவிகள் - முனிவர்கள் - சித்தர்கள் தவம் செய்வதற்காக ; மக்கள் நடமாட்டமில்லாத மலை குகைக்கோ - காடுகளுக்கோ செல்வார்கள்...

★■◆●ஆனால்>>> மிகப்பெரிய ஞானத் துறவியாக வள்ளலார் இருந்த பொழுதிலும்..... தவம் செய்வதற்காக ..... மக்களை விட்டுவிட்டு எங்கும் செல்லவில்லை..

★■◆●அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் தனிப்பெருங்கருணை வள்ளல் பெருமனார்க்கு முழுவதும் கிடைத்திருந்ததால் பற்பல அதிசயங்களும் தர்மச்சாலையில் நிகழ்ந்தன....

ஆச்சரியப்படும் அவ் நிகழ்வுகளுள் ஒன்று வருமாறு....

◆தர்மச்சாலையின் நிர்வாகத்தில் வள்ளல் பெருமனார்க்கு உதவியாக இருந்தவர் சண்முகம் என்பவர்..

>>>ஒரு நாள் " தர்மச்சாலையில் சமைப்பதற்கு அரிசியில்லை" என்று சண்முகம் வள்ளலாரிடம் தெரிவித்தார்

வள்ளலார் தனித்து அமர்ந்து சிறிது நேரம் தியானம் செய்தார்கள்.

"வேண்டிய அரிசியும் மற்ற உணவு பொருள்களும் நாளைக்கு வரும் " என்று வள்ளலார் சண்முகத்திடம் கூறினார்கள்.

★அவ்வாறே மறுநாள் திருத்துறையூரிலிருந்து ஓர் அன்பர் மூன்று வண்டிகளில் அரிசியும் பிற உணவு பொருள்களையும் தர்மச்சாலைக்கு கொண்டு வந்தார்.

◆"நேற்றிரவு கனவில் உத்தரவானது " என்று வந்தவர் பெருமானிடன் பணிந்து கூறினார்கள்.

சண்முகம் உள்ளிட்ட தர்மச்சாலை அன்பர்கள் ஆச்சரியத்தில் வியந்து நின்றனர்.

>>>ஆம்>>>வள்ளல் பெருமனாரின் தவ வலிமையினாலேயே 151 ஆண்டுகளாய் தர்மச்சாலை நடைபெறுகின்றது என்பதில் எவ்வித ஐயமும் இல்லை...

(கருத்துப்பதிவு....அருள்பாவலர்)