T.M.R.
"சன்மார்க்க விவேக விருத்தி" - மின்னிதழ்
அன்புடையீர்!

"சன்மார்க்க விவேக விருத்தி" என்கிற மின்னிதழ் மாதந்தோறும் உதயமாகிறது. ஆகஸ்ட் 2015 - மாதத்திற்கான மின்னிதழினை நீங்கள் கீழே காணும் இணைப்பைச் சுட்டி பெற்றுக்கொள்ளலாம். நன்றி.

Download:

5 Comments
jothi ganesh karthick ramalingam
Sanmaarga Vivega virutthi kidai intha pathivai alittha TMR avargalukju nanri
Tuesday, August 4, 2015 at 14:36 pm by jothi ganesh karthick ramalingam
venkatachalapathi baskar
வாழ்த்துக்கள். அற்புதமான முயற்சி. தங்களுடைய பணி தொடரட்டும்.
Tuesday, August 4, 2015 at 17:56 pm by venkatachalapathi baskar
Anandha Barathi
சன்மார்க்க விவேக விருத்தி என்னும் இதழ் வள்ளல் பெருமானால் துவங்கப்பட்டது, இதற்கான அறிவிப்பு உரைநடைப் பகுதியில் உள்ளது, ஆனால் நம் தவக்குறை நமக்கு அப்பிரதி ஒன்றும் கிடைத்தில, பின்னர் பல ஆண்டுகள் சென்று முனைவர் தவத்திரு ஊரன் அடிகள் சன்மார்க்க விவேக விருத்தி என்னும் பெயரிலே ஓர் இதழ் தொடங்கி நடத்தி வந்தார், பின்னர் அதுவும் பொருள் முதலிய காரணத்தால் தொடர இயலவில்லை, தற்போது மீண்டும் சன்மார்க்க விவேக விருத்தி என்னும் பெயரிலேயே ஒரு மின்னிதழைக் காண்பது நமக்கு மகிழ்வே, தொடர்க இராமலிங்கம் அய்யா அவர்களின் பணி. வாழ்த்துக்களும் வணக்கமும்.
Wednesday, August 5, 2015 at 04:55 am by Anandha Barathi
TMR RAMALINGAM
திரு.ஜோதி கணேஷ் கார்த்திக் இராமலிங்கம் ஐயா, திரு.வெங்கடாஜலபதி பாஸ்கர் ஐயா, திரு.ஆனந்த பாரதி ஐயா மற்றும் நிறுவனர் - வள்ளலார்வெளி இணையத்தாருக்கும் எமது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். திரு.ஆனந்த பாரதி ஐயா அவர்கள் கூறியவாறு சன்மார்க்க மாத இதழினை நடத்துபவர்கள் பொருளாதார பற்றாக்குறையினாலும், வாசகர்களிடமிருந்து தொடர்ந்து சந்தா பெறமுடியாததாலும் இடையிலேயே பலர் தங்களது இதழ் பணிகளை நிறுத்திக்கொள்வதை நாம் பார்க்கிறோம். ஆனால் தற்போதய காலத்தில் நாம் நினைத்தால் இம்மாதிரி மின்னிதழினை யார் வேண்டுமானாலும் பொருள் பற்றி யாதொரு கவலையுமின்றி வெளியிடலாம். சன்மார்க்க அன்பர்கள் இவ்வாறு முனைந்தால் நமது மார்க்கத்தை வெகு எளிதாக பலரிடம் சென்று சேர்க்கலாம். நன்றி.
Thursday, August 6, 2015 at 06:00 am by TMR RAMALINGAM
om prakash
Aruteperum Jothi!

Super Brother!
Thursday, August 6, 2015 at 07:17 am by om prakash