கடவுளாலும் முடியாத செயல்
கடவுள் சர்வ வல்லபம் படைத்தவர்.என்றும் அவரால் ஆகாத காரியம்
எதுவும் இல்லவே இல்லை என்றும் நமது முன்னோர்கள் கூறியுள்ளனர்.
ஆனால் வள்ளலாரோ இறைவனாலும் முடியாத காரியம் ஒன்று உண்டே என்று
மகிழ்ச்சி அடைகிறார்கள். அந்தப் பாடலைப் பாருங்கள்.
எல்லாம் உடையாய் நின் செயலே எல்லாம் என்றால் என்செயல்கள்
எல்லாம் நினது செயல் அன்றோ என்னே என்னைப் புறம் தள்ளல்
வல்லாய் என்னைப் புறம் விடுத்தால் புறத்தும் உன்றன் மயம் அன்றோ
நல்லார் எங்கும் சிவமயம் என்றுரைப்பார் எங்கள் நாயகனே.
இந்தப் பாடல் நமக்கும் ஒரு நல்ல ஆறுதலைத் தருகிறது. இறைவனோ அல்லது வள்ளலாரோ நாம் செய்யும் தவறுகளைக் குறித்து அவர்களின் எல்லைக்கு அப்பால் நம்மையும் அவர்களார் தள்ள முடியாது அல்லவா? நமக்கு ஆறுதல் அளித்த வள்ளலாருக்கு என்ன கைம்மாறு செய்யப் போகிறோம்.
Write a comment