வாடிய பயிரைக் கண்ட வாடினேன் என்றார் வள்ளலார் எந்தப் பயிர்? ஒரு
வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் பசியினால் இளைத்தே வீடுதோறு இரந்தும் பசியறாது அயர்ந்த வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்
நீடிய பிணியால் வருந்துகின்றோர் என் நேருறக் கண்டு உளம் துடித்தேன்
ஈடின் மானிகளாய் ஏழைகளாய் நெஞ்சு இளைத்தவர் தமைக் கண்டே இளைத்தேன்.
இந்தப் பாடலைச் சற்று ஊன்றிப் பார்த்தால் ஒரு உண்மை தெரியும். முதல் வரியில் பயிரைச்
சொன்னவர் இரண்டாவது வரியில் பசியில் துடித்த மனிதரைச் சொல்கிறார். மூன்றாவது வரியிலும் பிணியால் வருந்தும் மனிதரைத்தான் சொல்கிறார், நான்காவது வரியிலும் ஏழைகளாகிய மனிதரைத்தான் சொல்கிறார்.ஒரு வரியில் பயிரை சொன்னவர் மற்ற வரிகளில் பறவைகளையோ, மிருகங்களையோ சொல்லாமல் மனிதரை மட்டும் ஏன் சொல்லவேண்டும்.என்று எண்ணினேன். இதனால் வள்ளலார் வாடிய பயிரைக் கண்டு வாடிய அவர் உள்ளத்தைக் குறை சொல்வதாக எண்ணக் கூடாது.ஏன் எனில் நான் வள்ளலாரின் உண்மையான பக்தன்.வள்ளலாரின் பாடல் கருத்தை உள்ளபடியே புரிந்துகொள்ளவேண்டும் என்ற என் ஆவலை மட்டும் பாருங்கள் இது என் வேண்டுகோள். வள்ளலாரின் இன்னொரு பாடலைக் காணுங்கள்.
உயிரெலாம் ஒரு நீ திருநடம் புரியும் ஒரு திருப் பொது என அறிந்தேன்
செயிரெலாம் தவிர்ந்தேன் திருவெலாம் அடைந்தேன் சித்தெலாம் வல்லது ஒன்று அறிந்தேன்
மயிரெலாம் புளகித்து உளமெலாம் கனிந்து மலர்ந்தனன் சுத்த சன்மார்கப்
பயிரெலாம் தழைக்கப் பதியெலாம் களிக்கப் பாடுகின்றேன் பொதுப் பாட்டே.
வள்ளலாரின் கருத்துப்படி சன்மார்கத்திற்கு வருவதே சாகாமல் வாழ்வதற்குத் தான். சன்மார்கத்திற்கு வந்தும் இறந்து போகின்றவர்களைப் பார்த்துத்தான் வள்ளலார் வாடி இருக்கிறார். சுத்த சன்மார்கப் பயிர் என்று இங்கே குறிப்பிடுவதையும் முன் பாடலில் மூன்று வரிகளில் மனிதரையே சொல்லி இருப்பதும் மனதில் கொண்டு பார்த்தால் முதல் வரியிலும் சுத்த சன்மார்கப் பயிர் என்று மனிதரைத்தான் வாடிய பயிர் என்று வள்ளலார் கூறி இருக்கலாம். வள்ளலார் சொன்ன பயிருக்கு விளக்கம் இந்தப் பாடலில் அதுவும் மனிதர்களே என்று கொள்ளவேண்டும்.
Write a comment