SANMARGA SANGAM ALWARTHIRUNAGAR-mupa
IDHUVARAI NIRAIVERAADHA VALLALAARIN ICHCHAI


வள்ளலார் மீண்டும் வருவாரா என்ற வினாவினை மீண்டும் எழுப்புகிறேன்.இந்த வினாவை நான் முன்பு எழுப்பியபோது நான் எதிர்பார்த்த பதில் எனக்குக் கிடைக்கவில்லை.என்னுடைய கருத்தை நானே சொல்லிவிடுகிறேன்.

இந்திரிய ஒழுக்கம் ,ஜீவகாருண்ய ஒழுக்கம் முதலிய ஒழுக்கங்கள் எல்லாவற்றையும் நாம் சரியாகக் கடைப்பிடித்து அதன் படி ஒழுகி நாம் தங்கமானவர்கள் என்ற பெயர் பெறவேண்டும். நாம் சார்ந்திருக்கின்ற சங்கத்தார் அனைவரும் அவ்வாறே தங்கமாக வேண்டும். நமது சங்கத்தைச் சார்ந்து ஒரு திருக் கோவில் அமைய வேண்டும். அந்தச் சங்கம் நீடூழி துலங்கவேண்டும்.அப்படி நாம் ஓர் ஞான சமரச சன்மார்க்க சங்கத்தை உருவாக்கினால் அந்த்சச் சங்கத்தில் அங்கமே குளிர ஆடிப் பாட வள்ளர்பெருமானார் கட்டாயம் வருவார் (ஆதாரம்)

தங்கமே அனையார் கூடிய ஞான சமரச சுத்த சன்மார்கச்

சங்கமே கண்டு களிக்கவும் சங்கம் சார் திருக்கோயில் கண்டிடவும்

துங்கமே பெரும் சற்சங்கம் நீடூழி துலங்கவும் சங்கத்தில் அடியேன்

அங்கமே குளிர நின்றனைப் பாடி ஆடவும் இச்சை காண் எந்தாய் (அருட்பா)