அருட்பெருஞ்சோதி அகவல் ஞானக் களஞ்சியம். 1596 வரிகள் கொண்ட அகவலில் ஒவ்வொரு வரிக்கும் அடுத்த வரிக்கும் தொடர்பு என்பதை நாம் உணரலாம். ஞானப் பழங்கள் ஆங்காங்கே கொத்து கொத்தாக உள்ளது. உதாரணத்திற்கு ஒரு கொத்தை இங்கே காணலாம்":
சாதியும் மதமும் சமயமும் காணா ஆதி அநாதியாம் அருட்பெருஞ்சோதி வரி எண் 116
தனு கரணாதிகள் தாம் கடந்து அறியும் ஓர் அனுபவமாகிய அருட்பெருஞ்சோதி 118
உனும் உணர்வு உணர்வாய் உணர்வெலாம் கடந்த அனுபவாதீத அருட்பெருஞ்சோதி 120
பொது உணர்வு உணரும் போதலால் பிரித்தே அது எனில் தோன்றா அருட்பெருஞ்சோதி 122
உளவில் அறிந்தால் ஒழிய மற்று அளக்கின் அளவினில் அளவா அருட்பெருஞ்சோதி 124
என்னையும் பணி கொண்டு வரம் அளித்து அன்னையில் உவந்த அருட்பெருஞ்சோதி 126
இந்த வரிகளை நம் அறிவிற்கு எட்டிய வரையில் சற்று ஆய்வு செய்வோம்:
வரி 116 ஆதியும் அந்தமுமாக விளங்கும் அருட்பெருஞ்சோதி ஆண்டவரை சாதிப் பற்று, மதப் பற்று , சமயப் பற்று ஆகியவற்றை விடாதவர்களால் காணமுடியாது.
அப்படியானால் அவரை எப்படிக் காண்பது?
தனு என்றால் மெய் ,வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து இந்திரியங்கள் ஆகும். கரணாதிகள் என்றால் மனம், புத்தி, சித்தம் , அகங்காரம் ஆகிய நான்குமாம்.
இந்த இந்திரியங்களும் , காரணங்களும் கடந்து அதாவது இவைகள் செயல்படாத நிலையில் அறியக்கூடிய ஓர் அனுபவம்தான் அருட்பெருஞ்சோதி ஆகும்.
அவைகளை எப்படிக் கடப்பது?
ஓர் அச்சார்யனைக் குருவாகக் கொண்டு அவனால் நெற்றிக் கண்ணைத் திறக்கப் பெற்றுக்கொண்டால் முதலில் புருவ மத்தியில் ஓர் உணர்வு தோன்றும்.அந்த உன்னும் உணர்வாய் இருந்து மற்ற உணர்வெலாம் கடந்த அனுபவ அதீத அருட்பெருஞ்சோதி. (இங்கே வானத்தின் மீது மயில் ஆடக் கண்டேன் என்ற வரியைக் காணவும். வானம் என்பது புருவ மத்தியே. மயில் ஆடுவது என்பது அங்கே தோன்றும் அசைவே ஆகும் அந்த அசைவு ஓர் உணர்வாக இருக்கும்)
பொது என்பது புருவமத்தியே ஆகும். ஆதாரம் உண்டா?(வேதாந்த நிலை நாடி விரைந்து முயன்றறியேன் என்று தொடங்கும் பாடலில் ஞான பூரணாகாயம்( எனும் பொதுவை அறிவேனோ என்று பாடியுள்ளார். ஞானம் பூரணமாக விளங்கும் புருவமத்தியே ஆகாயம் என்பது புருவமத்தி அதுதான் பொது எனப்பட்டது.
பொதுவாகிய புருவ மத்தியில் உணர்வை உணரும்போது அல்லாமல் பிரித்தே அது எனில் அருட்பெருஞ்சோதி தோன்றாது.
அந்தப் பொதுவை எப்படி அறிவது?
ஓர் உளவினில் அறிந்தால் ஒழிய வேறு எதனைக் கொண்டு அளந்தாலும் அந்த அளவினில் அளக்கமுடியாது. உளவு என்பது ரகசியமாக அறிவது. அதாவது குருவிடம் சென்று ரகசியமாக அறிவதே ஆகும். அடுத்த வரியிலே சொல்லுகின்றார் உளவினில் அறியும் தகுதி எனக்கில்லை என்று என்னைத் தள்ளிவிடாதே. என்னையும் பணி கொண்டு இறவா வரமளித்து அன்னையினும் உவந்த arutperunjothi
Write a comment