சமய சன்மார்க்கம் என்பது சத்துவ குண சம்மந்தம் உடையது. சத்துவ குணத்தின் இயல்பாவது: கொல்லாமை, பொறுமை, சாந்தம், அடக்கம், இந்திரிய நிக்கிரகம்,ஆன்ம இயற்கை குணமாகிய ஜீவகாருண்யம், ஆகிய நான்கு குணங்களே ஆகும்.
மத சன்மார்க்கம் என்பது நிர்குண;லட்சியம் உடையது. அதாவது விருப்பு, வெறுப்பு,தாங்கல், விடுதல், வேண்டுதல், வேண்டாமை, இவை எதுவும் இல்லாமல் எல்லாவற்றையும் சமமாக ஏற்றுக்கொள்ளுதல். .நாம் புரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காக ஒரு உதாரணம் வள்ளல் பெருமானாரே கூறுகிறார். ஒரு சந்நியாசி நிர்வாணமாக தெருவில் நடந்து செல்கிறார். ஒருவன் பெண்கள் இருக்கும் பகுதியில் நிர்வாணமாக வருகிறாரே என்று அவரைக் கல்லால் அடிக்கிறான். மற்றொருவன் எந்த ஆசையும் இல்லாமல்இருக்கும் இந்தத் துறவிக்கு ஒரு பழம் தருகிறான். இதைக் கண்ட ஒருவன் எது சரி என்று புரிந்துகொள்வதற்காகஇம்மூவரையும் ஒரு நீதி பதியிடம் கொண்டு சென்று அவரிடம் நடந்ததைக் கூறுகிறான். அந்த நீதிபதி சன்யாசியை நோக்கி உங்களை யார் கல்லால் அடித்தது என்று கேட்டார். அந்த சந்நியாசி பழம் கொடுத்தவன்தான் என்னைக்கல்லால்
அடித்தான் அன்றார்.யார் பழம் கொடுத்தது என்று நீதிபதி கேட்டார். கல்லால் அடித்தவன் பழம் கொடுத்தான் என்றார். இந்த சன்யாசிக்கு எல்லாம் இறைவன் செயல் என்று வாழும் இவருக்கு பழம் கொடுத்தவன் என்றோ கல்லால் அடித்தவன் என்றோபேதம் எதுவும் இல்லை என்று புரிந்துகொண்டார்..இந்த சன்யாசியின் நிலைதான் நிர்குணம்.மேலும் வள்ளலார் பெருமானார் கூறுவது.
நாம் கடவுளுக்கு அடிமையாதல்,கடவுளுக்குப் பிள்ளையாதல், கடவுளுக்குத் தோழனாதல்,தானே கடவுளாதல் இது கடவுள்நியாயம். மற்றவர்களை நம் அடிமையாகப் பார்த்தல் , நம்முடைய பிள்ளைகளாகப் பார்த்தல் , நம்முடைய நண்பர்களாகப் பார்க்தால், நம்மைப்போலவே பார்த்தல் இது ஜீவ நியாயம் என்கிறார்.இவ்வாறு பழகினால் மட்டுமே எத்துணையும் பேதமுறாது எல்லா உயிர்களையும் தம் உயிர் போலப் பார்க்கும் குணம் உண்டாகும்.
இதற்குப் பின்னர்தான் சுத்த சன்மார்க்கம். அங்கே சாதகர்கள் சாத்தியர்கள் என்று இரு பிருவுகள் உண்டு. சாதகர்கள் பயிற்சிசெய்யவேண்டும். பயிற்சியில் வெற்றி கண்டவர்களே சாத்தியர்கள்.அவர்கள் கேட்டல், சிந்தித்தல், தெளிதல், நிஷ்டைகூடல் ஆகிய நான்கையும் கடந்து அரூடராக இருப்பார்கள். அவர்கட்கு சாதனம் எதுவும் வேண்டாம். என்றார்கள். நம்மவர்கள் சமய மத அனுபவங்கள் (மேலே கூறியுள்ள குணங்கள்) எதிலும் பயிற்சி செய்யாமல் சாதனம் மட்டும் வேண்டாம் என்று பேசிவருகிறார்கள்.மேலே கூறியுள்ள சமய மத அனுப வங்கள் சுத்த சன்மார்க்க அனுபவங்கள் அல்ல. அனால் சுத்த சன்மார்கியிடம் அந்த எல்லா குணங்களும் அனுபவங்களும். இதைத் தான் வள்ளல் பெருமானார் சமய மத அனுபவங்கள் சுத்த சன்மார்கத்திற்கு அல்லாதனவே அன்றி இல்லாதன அல்ல என்று கூறினார்.
Write a comment