வள்ளல் பெருமானுடைய அணுக்கத் தொண்டர்கள் கூடி வள்ளலார் கொள்கைக்கு மாறாக ஞானசபை வழிபாட்டு முறைகளை மாற்றத் தீர்மானிக்கின்றனர்.
19 .1.1881.விக்கிரம ஆண்டு தை மாதம் 8 ம் தேதி. தீர்மான விபரம்:
1 சுக்கிர வாரந்தோறும் திருவகண்டம் 1
2 சௌமி குத்து விளக்கு 2
3 பாவனா பீடத்தில் குத்து விளக்கு 2
4 ஷேட் 2
இந்த தீப அலங்காரத்தோடு ஞானசபைக்கு முன் இருக்கிற சித்திர படத்தை கிழ்புரம் விலக்கி உபசாரத்துடன் தூப கற்பூர ஆராதனை செய்ய வேண்டியது.
பிரதி மாத;ம் வருகிற பூச நட்சத் திரத்தில் மேற்கண்ட நித்ய நைமித் யங்களுக்கு ஏற்பட்ட தீபங்களுடன் உற்சவக்காரர்கள் அனுப்பிச் சொல்லும் கட்டளைக்குத் தக்கபடி சிலவு செய்து மிகுதியை லஸ்தர் முதலிய தீபங்கள் வைக்கலாம்.
3 வருடந்தோறும் தை மாதம் வருகிற மகா புஷ்யத்தில் விசேஷ தீப அலங்காரங்களுடன் அன்ன விநியோகங்களுடனும் ஸ்தோத்திர உருவமாக ஷட் காலங்களிலும் ஆடம்பரம் இல்லாமல் பூர்வாசாரப்படி பஞ்ச திரை நீக்கி சிற்சபாராதனை செய்யவேண்டியது.தீர்மானங்கள் மொத்தம் 17 இந்த ஏற்பாடு செய்துகொண்டவர்கள் ஏழு பேர். சி.தேசிகன்,௨.மு.அப்பாசாமி செட்டி.புருஷோத்தம ரெட்டி. ஆ.சபாபதி குருக்கள். கனகசபாபதி பிள்ளை,ச.ஆறுமுக முதலி,சு. நயினா ரெட்டியார்.(மற்ற தீர்மானங்கள் தொடரும்)
Write a comment