Vallalar Groups
Vallalar Final Days - Vallalar Student Statement

தொழுவூர்வேலாயுதமுதலியாரின்வாக்குமூலம்:
‘Hints on Esoteric Theosophy’என்றநூலாசிரியருக்குஎழுத்துமூலம்கொடுத்தவாக்குமூலம் 1875க்குப்பிறகுகொடுக்கப்பட்டது. Vallalar First Student.Th.Velaiah Mudaliyar Statement about “Vallalar Final Days”:
தமிழ்
வள்ளற் பெருமான் (1873) ஆண்டு கார்த்திகை மாதம் திங்களில் தாம் இருந்த அறைக்குள்ளிருந்த தகர கண்ணாடி விளக்கை நோக்கி வெளிப்புறத்தில் வைத்து , அன்பர்களை நோக்கி, இத்தீப முன்னிலையில் ஆண்டவர் விளங்குவதால் இதில் தெயவ பாவனை செய்து வணங்கி வாருங்கள்.
நான் இப்பொழுது இந்த உடம்பில் இருக்கிறேன். இனி எல்லா உடம்பிலும் புகுந்து கொள்வேன். என்று அன்பர்களிடம் கூறி அருளினார்கள்.
வள்ளற் பெருமான் பிரணவ தேக சித்தியில் விளங்குகிறார் என்று முன்பே அறிந்தோம். இனி அவர் ஞான தேக சித்தியடையும் தருணம் வந்து விட்டது.
ஞான தேக சித்தியில் உடம்பும் கண்ணுக்கு தெரியாது. இந்த நிலை தான் கடவுள் நிலை அறிந்து அம்மயமாதல் என்பது.
இந்த சித்தியை அடையுமுன் செயற்பாடுகளை தொ.வேலாயுத முதலியார் வாக்கு மூலமாக அறியலாம்.
ENGLISH
“When he attained his 50th year (1873) he began to prepare his disciples for his departure from the world. He announced his intention of going into Samadhi”
தமிழ்
திரு அருட்பிரகாச வள்ளலார் அவருடைய 50அவது வயதை (1873) அடைந்த போது இந்த உலகத்திலிருந்து அவர் பிரிந்து செல்வதற்கான ஏற்பாடுகளால் அவர் தன் சீடர்களை ஆயத்தப் படுத்த தொடங்கினார். சாமாதிக்கு செல்ல வேண்டிய அவர் ஆர்வத்தை வெளிபடுத்தினார்.
ENGLISH
During the first half of 1873, he preached most forcibly his views upon Human brotherhood.
தமிழ்
1873ம் ஆண்டின் முற்பகுதியில் , மனித சகோதர அறம் பற்றிய அவருடைய நோக்கங்களை மிகவும் வலிந்து அவர் அறிவுரை ஆற்றினார்.
ENGLISH
But during the last quarter of the year (1873) he gave up lecturing entirely and maintained an almost unbroken silence.
தமிழ்
அந்த ஆண்டின்(1873) கடைசி கால் பகுதி காலத்தில் அசைக்க முடியாத மெளனத்தை அவர் அனுசரித்ததுடன் முழுவதுமாக சொற்பொழிவு ஆற்றுவதை விட்டு விட்டார்.
ENGLISH
“He resumed speech in his last days of January (1874), and re-iterated his prophecies here in after narrated”.
தமிழ்
1874ம் ஆண்டு அவருடைய இறுதி நாட்களான சனவரி திங்களில் , இங்கு பின்னால் குறித்தவாறு அவருடைய கொள்கைகளை திரும்பவும் எடுத்து கூறுவதற்காக அவர் மீண்டும் பேசத் தொடங்கினார்.
ENGLISH
“His whole occupation was the preaching of sublime moral, doctrines contained in the Hindu Sastras, and the instilling into the masses of the principles of Universal Brotherhood, benevolence and charity. But to his great disappointment he found among his large congregations but few who would appreciate his lofty ethics. During his later part of his visible earthly career, he often expressed his bitter sorrow for this sad state of things, and repeatedly explained.”
தமிழ்
இந்து சாத்திரங்களில் அடங்கியுள்ள தூய ஒழுக்கத்தையும், தத்துவங்களையும் எடுத்து போதிப்பதே அவர் முழு நேரப் பணியாக இருந்த்ததுடன், அறத்தையும் , பிற உயிர்க்கு இரங்குதலையும், உலக சகோதர அறத்தையும் மக்கள் மத்தியில் நிலை நாட்டுவதையும் பணியாக கொண்டிருந்தார். ஆனால் அவருடைய பெருத்த கூட்டத்தாரிடம் அவர் அதிர்ப்தி அடைந்தார். ஒரு சிலரே அவருடைய உன்னதமான ஒழுக்க விதி முறைகளைப் பாராட்டினர். அவர் இந்த மண்ணில் விளங்கிய பிற்காலப் பகுதியில் , இந்த வருத்தம் தரும் விசயத்தில் அவருடைய கசப்பான துயரத்தை அடிக்கடி வெளிப்படுத்தினார். அவர் மீண்டும் அறிவித்ததாவது:
ENGLISH
You are not fit to become members of this society of Universal Brotherhood. The real members of that brotherhood are living far away, towards the North of India.”
தமிழ்
நீங்கள் யாவரும் உலக சகோதர அறம் சார்ந்த சங்த்திற்கு உறுப்பினர் ஆகத் தகுதி உடையவர்கள் அல்லர். இந்தியாவிற்கு வடக்கே நீண்ட தூரத்தில் வசிகின்றவர்களே உலக சகோதர அறத்திற்கு உரிய உண்மையான உறுப்பினர்கள் ஆவர்.
ENGLISH
“You do not listen to me. You do not follow the principles of the teachings. You seem to be determined not to be convinced by me. Yet the time is not far off when persons from Russia, America and other foreign lands will come to India and preach to you this same doctrine of Universal Brotherhood. Then only will you know and appreciate the grand truths that I am now vainly trying to make you accept. You will soon find the brothers who live in the far north will work a great many wonders in India, and thus confer incalculable benefits upon this our country.
தமிழ்
நான் சொல்வதை கேட்க மறுக்கிறீர்கள். என்னுடைய போதனைகளை நீங்கள் பின்பற்றுவதும் இல்லை. எனக்கு வயப்படக் கூடாது என்று நீங்கள் தீர்மானித்துக் கொண்டது போல் தோன்றுகிறது. ஆயினும் ரஷ்யா , அமெரிக்கா மற்றும் இதர அயல் மண்ணிலிருந்து சகோதரர்கள் இந்தியாவிற்கு வந்து இதே உலக சகோதரத்தின் கொள்கைகளை எடுத்து கூறுங் காலம் வெகு தூரத்தில் இல்லை. நான் உங்களை ஏற்றுக் கொள்ளும் படி வீணாக வற்புறுத்தும் நேர்த்தியான அந்த உண்மைகளை அவர்கள் கூறும்போது உண்ர்ந்து பாராட்டுவீர்கள் வடக்கே நீண்ட தொலைவில் உள்ள அந்த சகோதரர்கள் இந்த்தியாவில் பல அதிசயங்கள் நிகழப் பணியாற்றப் போவதை நீங்கள் விரைவில் பார்பீர்கள். இவ்வாறாக நமது நாட்டிற்கு அளவிட முடியாத நன்மைகள் ஏற்படுவதையும் காண்பீர்கள்.
மேற்கண்டவாறு தொழுவூர் வேலாயுத முதலியார் வாக்கு மூலம் குறிப்பில் கூறினார். ச.மு. கந்தசாமி பிள்ளை கூறுவதாவது : “கடையை விரித்தோம். கொள்வாரில்லை. கட்டிக் கொண்டோம்” என்று தன் மாணாக்கரிடை கூறியதாக கூறுகிறார்.
30.1.1874 முக ஆண்டு தை மாதம் 19ம் நாள் வெள்ளிக் கிழமை திரு அருட்பிரகாச வள்ளலார் இட்ட இறுதிக் கட்டளை; நான் உள்ளே பத்து , பதினைந்து இருக்கப் போகிறேன். பார்த்து அவ நம்பிக்கை அடையாதீர்கள். ஒரு கால் பார்க்க நேர்ந்து பார்த்தால் யாருக்கும் தோன்றாது வெறும் வீடாகத் தான் இருக்கும் படி செய்விப்பார். என்னைக் காட்டி கொடார்.

Muthukumaaraswamy Balasubramanian
தொ.வேலாயுத முதலியார் கூறுவதை நாம் அப்படியே ஏற்றுக் கொள்ள முடியவில்லை.வள்ளலார் இறுதி நாட்களில் தலை முடியை நீள வளரவிட்டிருந்தார் என்று எழுதி யுள்ளார்.சுத்த தேகம் பெற்றவுடனே ரோமம் வளர்ச்சி தாழ்ச்சி இருக்காது என்பது வள்ளலார் வாக்கு.முடியை நீள வளரவிட்டிருந்தார் என்றால் வள்ளலார் சுத்த தேகமே பெறவில்லை என்று தொ வே. கூறுகிறாரா?திருக்காப்பிட்டுக்கொண்ட நாளன்று வள்ளலார் தனது
அறையில்விரித்து வைத்திருந்த படுக்கையில் சாய்ந்துகொண்டார் என்று கூறியுள்ளார்.அறைக்கதவை வள்ளலார் உட்பக்கம் தாளிட்டுக்கொண்ட பிறகு உள்ளே வள்ளலார் என்ன செய்தார் என்று தோ வே எப்படி அறிவார்.வள்ளலார் பிறர் கண்களுக்குத் தோன்றாமல் இருக்கக்கூடிய ஞான தேகத்தை 1870 ம் ஆண்டே வள்ளலார் பெற்றுவிட்டார்.தான் அடைந்த அந்த நிலையை பலமுறை சோதித்தும் பார்த்திருக்கிறார். வள்ளலார் திருக்காப்பிட்டுக்கொண்ட பிறகு ஞான தேகம் அடையவில்லை, முன்பே அடைந்துவிட்டார் என்று சந்தேகம் எதுவும் இல்லாமல் அறிவோம், நன்றி.
Friday, May 27, 2011 at 02:41 am by Muthukumaaraswamy Balasubramanian