தயவு
அருட்பெருஞ்ஜோதி தயவு மலர்.
அருட்பெருஞ்ஜோதி மெய்
3. அகம் அனகம்.
சுவாமி சரவணானந்தா, திண்டுக்கல்.
நள குரு மகா தைப்பூச வெளியீடு
3.2.1977.
இரண்டு படாத பிரிவுற்றறியாத ஏக பரம்பொருள், அருள் ஞானத்தால் நம் அகவடிவில் ஆன்ம ஜோதி வடிவில் விளங்குகின்றதை உணர்கிறோம். அப்படி விளங்கிக் கொண்டிருப்பதை, உணர்த்தவே அதன் தனிப் பெருங்கருணையே அகமிருந்து விரிந்து நம் வடிவாய் நிறைந்துள்ளதை உணர்கின்றோம்.
அருட்பெரும் ஜோதிக் கடவுள் உண்மை இப்படித் தனிப் பெருங்கருணையால், நாமாய் விளங்கவில்லையானால் அனுபவம் ஏற்பட வழி இல்லையாம்.
இதனால், ஆன்மா அருட்பெரும் ஜோதியாயும், இந்தத் தேக நிலை தனிப்பெருங்கருணையாயும் உள்ளனவாய் அறிகின்றோம்.
ஆண்டவரிடத்து கருணை சக்தி சதா வெளிப்பட்டுக் கொண்டேயிருப்பதால், அதுவே ஆன்மாவிடத்து சூழ் உயிருடம்பாய் வந்து வந்து போய்க் கொண்டேயிருக்கின்றதாம். ஆன்மா அழிவில்லாத ஒன்று, அதன் கண்ணின்று வெளியாம் உயிருடம்பு, சதா தோற்றமும், மாற்றமும் மறைவும் கொண்டதாய் இருக்கின்றது.
அகவுண்மை அறியாது பொறிபுலன் வாழ்வில் உழன்று கொண்டிருக்கும் வரை உடற் பிறப்பும் வந்து போய்க் கொண்டுதானிருக்கும். நிறை, அருள் ஞானத்தால் அகநிலை பெற்று, கருணையோடு வாழ்வதால், உடலும், தனிப் பெருங்கருணை சக்தியால் நித்தியத்துவம் பெறுவதாம். அப்போதுதான், மனிதன். “அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை” இறை அனுபவ வாழ்வில் திகழ வல்லவனாவான். இது, அகமே, அருட்பெருஞ் ஜோதியே, அனகமாகத் தனிப் பெருங்கருணையோடு நிறைந்திலங்கும் இறையனுபவ நிலையாகும்.
Thankyou for Good Sanmarga Information.I can understand to KarunaiMughu Swamisaravanaananda's Sanmarga Information.Please sent to many sanmarga information of him.I will Know about sanmarga information easily.
With Vallalar Loving,
AruljothiSujatha.