HyperLink HyperLink

திண்டுக்கல் பொன்னகரத்தில் பூச நாள் விழா 31.8.2008

 

அருட்பெருஞ்ஜோதி தயவு இல்லம், பொன்னகரம், திண்டுக்கல்
 
மாதாந்திரக் கூட்ட நடவடிக்கைகள்
 
நாள் 31.8.2008.
 
 
        திண்டுக்கல் நகரிலே அவதரித்த மகான் தயாநிதி சரவணானந்த சுவாமிகள் ஆவார். வள்ளற் பெருமானாரின் சுத்த சன்மார்க்கக் கொள்கைகளை அடியொற்றி, சுவாமி சரவணானந்தா அவர்கள் 60க்கும் மேற்பட்ட நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளார்கள்.
 
        உபதேசப் பகுதியில் வள்ளல் பெருமான் தம்மை ஏறாத நிலை மேலேற்றி விட்டது “தயவு” எனக் குறிப்பிட்டுள்ளார். அதன் அடிப்படையில், தயவுப் பாக்கள், தயா விளக்க மாலை, தயவுப் பெரு நெறி, தயவுக் குறள் என்ற பல உரை நடை நூல்களும் பல பாக்களும் யாத்துள்ளார்கள். சுவாமி அவர்களுக்கு, மேட்டுக் குப்பத்திலே, வள்ளற் பெருமானின் காட்சி,  அவர்களது இளம் வயதிலேயே கிடைத்துள்ளது.
 
          அவர்கள் தமது 96 வயதில் சித்தி பெற்றார்கள். திண்டுக்கல் நகரில் நத்தம் சாலையில் உள்ள பொன்னகரம்   என்ற  இடத்தில்,  “சுவாமி   சரவணானந்தா  அருட்பெருஞ்ஜோதி   தயவு  இல்லம்” கடந்த 2003ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.

          மாதந் தோறும் பூச நாளை ஒட்டிய ஒரு ஞாயிற்றுக் கிழமை அன்று பொன்னகரம் அருட்பெருஞ்ஜோதி தயவு இல்லத்தில் சன்மார்க்க அன்பர்கள் திரளாகக் கலந்து கொண்டு, அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை வழிபாடு செய்து வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்த தயவு இல்லத்தை திண்டுக்கல் தயவு நூல் அறக்கட்டளையினை நடத்தி வரும் அன்பர் திரு எஸ்.ஆர். ராமலிங்கம் மற்றும் அவரது குடும்பத்தினர், அன்பர்களின் உதவியோடு பராமரித்தும், ஏழைகளுக்குப் பசியாற்றுவித்தல் பணியையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
 
          அந்த வகையில், மாதப் பூச நாளினை ஒட்டி, 31.8.2008ந் தேதி ஞாயிற்றுக் கிழமை இந்த தயவு ஆலயத்தில் மாதாந்திரக் கூட்டம் நடைபெற்றது.
 
காலை 10.30 மணி. கொடி வணக்கம்
 
       திரு அருட்பாவில், சிற்சக்தி துதி (கொடி வணக்கம்)  10 பாடல்கள் அன்பர்களால் பாடப்பட்டு, தயவுக் கொடி ஏற்றப் பட்டது. தயவு நூல் அறக்கட்டளை அன்பர் திரு எஸ்.ஆர். ராமலிங்கம் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் இந் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
 
          இந் நிகழ்ச்சிக்குப் பின்னர்,  வந்திருந்த அன்பர்கள் அனைவரும், சத்திய ஞான தீபத்தின் முன் அமர்ந்து, திருவருட்பாவில் (1) திருவடிப் புகழ்ச்சி, (2) அருட்பெருஞ்ஜோதி அகவல் (3) அட்டகம் முதலானவற்றையும், சின்மயபுரம் என்ற சின்னாளப்பட்டி சன்மார்க்க அன்பர்கள் சுவாமி சரவணானந்தா அவர்கள் பெயரால் வழங்கிய குருநாதர் வாழ்த்துப் பாவினையும் பாடினர்.
 
மதியம் 12.30 மணி
 
          உலகில் உள்ளோர் அனைவரின் நலன்களுக்காகவும் தயவுத் தியானம் நடைபெற்றது
 
மதியம் 12.35 மணி
          தயவு நூல் வெளியீட்டு அறக்கட்டளையின் பொருளாளர் தயவுத்திரு ஆர். அரவிந்தன் அவர்களால் சுவாமி சரவணானந்தா அருளிய பேருபதேசப் பிழிவு வாசித்து பொருள் விளக்கம் மற்றும் சந்தேகம் தெளிவித்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
 
பிற்பகல் 1.00 மணி
 
          வரவேற்புரை-தயவுப் பாக்களின் இசைப்பேழை (audio C.D) வெளியீடு மற்றும் நன்றியுரை.
 
          தயவு நூல் வெளியீட்டு அறக்கட்டளையின் பொறுப்பில் இருக்கும் தயவுத்திரு S.R. ராமலிங்கம் அவர்கள், வந்திருந்தோரை வரவேற்று பின்னர் தயவு நூல் அறக்கட்டளை சார்பாக சுத்த சன்மார்க்க சத்திய ஞானி சுவாமி சரவணானந்தா அவர்களால் இயற்றப்பட்ட தயவுப் பாக்களின் 10 பாடல்கள் அடங்கிய ஒரு இனிய புதிய இசை ஒலிப் பேழை (audio C.D) அருட்பெருஞ்ஜோதி தயவுக் கடவுளின் முன்னிலையில் வெளியீடு செய்யப் பட்டது. இதனை அன்பர்கள் பெற்று மகிழ்ந்தனர். அடுத்து இவரே மதுரை தயவு விஜயராமன் அவர்களின் சொற்பொழிவிற்குப்பின் நன்றியுரையும் பகர்ந்தார்.
 
பிற்பகல் 1.15 மணி.
 
மதுரை தயவு விஜயராமன், தயவுத் தொண்டரின் சிறப்புச் சொற்பொழிவு
 
          இவர், மேற்படி இசை ஒலிப் பேழை (audio C.D) வெளியீட்டு தயவுப் பாக்களிலிருந்தும், தயா விளக்க மாலை மற்றும் தயவுக் குறள் ஆகியவற்றிலிருந்தும் எடுத்துக் காட்டுகளோடு எல்லோரும் எளிமையாக சுத்த சன்மார்க்க தத்துவங்களையும், தயவுக் கொள்கைகளையும் புரிந்து கொள்ளும் வண்ணம் சிறப்புச் சொற்பொழிவாற்றினார்.
 
         அடுத்த பூச நாள் விழா 21.9.2008 அன்று நடைபெற இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.
 
பிற்பகல் 2.00 மணி.
 
          அருட்பெருஞ்ஜோதி தயவுப் பிரார்த்தனை திண்டுக்கல் திரு வே. அருணகிரி அவர்கள் முன்னின்று நடத்தினார்.
 
          இக் கூட்டத்தில் கீழ்க்காணும் அன்பர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
 
  1. தயவுத்திரு எஸ்.விஸ்வநாதன் (SLVS அவர்களின் மருமகன்)
  2.       ,,       L. குருமூர்த்தி     (    ,,          ,,          ,,        )
  3.       ,,       S.L.V. சீதாராம் மகள்கள் தயா ஜோதி, ஞானம், ஆகியோர் மற்றும் அவரது வழித் தோன்றல்கள்.
  4. தயவுத்திரு V.B. ஷண்முகம், டாக்டர், சின்னாளப்பட்டி/
  5.     ,,        நடராஜன், சின்னாளப்பட்டி
  6.     ,,         பத்மனாபன். அருண் டெக்ஸ்டைல்ஸ், சின்னாளப்பட்டி.
  7.     ,,         ராம்குமார், பழனிச் செட்டிபட்டி, தேனி மாவட்டம்.
  8.     ,,         ஷண்முகவேலு, திண்டுக்கல்.
  9.     ,.,         தங்க முத்தையா, ஓவியர், திண்டுக்கல்.
  10. தயவுத்திருமதி ரமா பிரபா, நாகல் நகர்.
  11. அனைத்து திண்டுக்கல் வாழ் தயவுத் தொண்டர்கள்
  12. அருகிலுள்ள கிராமங்களிலிருந்து திரளாகக் கலந்து கொண்ட அன்பர்கள்.
 
திண்டுக்கல் நாகல் நகர், தயவுத்திரு S.L.V. சீதாராம் மருமக்கள், தயவுத்திரு எஸ்.விஸ்வநாதன் குடும்பத்தார், தயவுத் திரு எல். குருமூர்த்தி குடும்பத்தார் ஆகியோரால் அன்னமளிப்பு உபயம் செய்து அன்பர்கள் மற்றும் ஏழை எளிய மக்களுக்குப் பசியாற்றும் பணி நிறைவுற்றது.
 
     இந் நிகழ்ச்சியில் சுமார் 225 அன்பர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Title:
 
Comment:
 
(* login required)

    No results found.