HyperLink HyperLink

சுவாமி சரவணானந்தா அவர்கள் இயற்றிய தயவுப் பாக்கள் ஆடியோ சி.டி.கள்

தயவுப் பாடல்கள் பெற்ற இசை வடிவ சி.டி.கள் விற்பனைக்கு வந்தன.

வள்ளல் பெருமானுக்குஅருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் தெரிவித்த மகா மந்திரம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி என்பதாகும்

சுவாமிகள், பேருபதேசத்தில், என்னை ஏறா நிலைக்கு ஏற்றி விட்டது தயவு என்கின்றார். அந்த தயவுக்கு ஒருமை வேண்டும். ஒருமை வந்தால்தான் தயவு வரும் என்றார். 

அதே போல், திண்டுக்கல் சுவாமி சரவணானந்தா அவர்களுக்கு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் துவக்கிக் கொடுத்த வார்த்தை தயவு என்பதாகும். அதனைக் கொண்டு, சுவாமிகள் கிட்டத்தட்ட 6,000 தயவுப் பாடல்கள் பாடி வைத்துச் சென்றுள்ளார்.

வள்ளல் பெருமானின் திரு அருட்பாக்களுக்கும், சுவாமி அவர்களின் தயவுப் பாக்களுக்கும் கருத்துக்களில் சற்றேனும் வித்தியாசம் ஏதுமில்லை. இதனை அன்பர்கள் அறிவர்

அவற்றில், 10 பாடல்களை முதன் முறையாக, திரு அருட்பிரகாச வள்ளற் பெருமான் மற்றும் திண்டுக்கல் சுவாமி சரவணானந்தா ஆகியோரின் ஆசியுடன் மதுரை ப்ரியா மீடியா மூலம், இசை அமைப்புச் செய்து, கீழ்க்காணும் இசைக் கலைஞர்களைக் கொண்டு 10 பாடல்கள் இசை அமைக்கப்பட்டுள்ளன.

1. சுத்த தயா சன்மார்க்க ... ஸ்ரீ நந்தினி

2. சிற்றணுவின் உட்பொருளாய் ... எம். சாமுண்டீஸ்வரி

3. வரமளிக்க நம்முடைய ... என்.கே

4. மாயை என்று ... ஏ.பவித்ரா

5. நான் என்று எதைச் ... கீதா

6. தயவு வருகின்ற ... ஸ்ரீ நந்தினி

7. மதிபோன்று ... என்.கே

8. அரிய வழி ... ஏ. பவித்ரா

9. என் வார்த்தை என்று ... ஸ்ரீ நந்தினி

10. உலகமெலாம் ... எம். சாமுண்டீஸ்வரி

30.9.2008 சனிக்கிழமை அன்று மாலை மதுரை தயவுக் குழு உறுப்பினர், திண்டுக்கல்லில் பொன்னகரத்தில் உள்ள சுவாமி சரவணணனந்தா அவர்களின் தயவு அருட்பெருஞ்ஜோதி ஆலயத்திலும், அவர்கள் வாழ்ந்த நாகசாமி ஐயர் சந்தில் உள்ள வீட்டிலும் சென்று சுவாமிகளின் அனக ஆசியினைப் பெற்று, தயா சன்மார்க்க அன்பர்களின் பயன்பாட்டிற்காக மேற்காணும் ஆடியோ சி.டி.களை விற்பனைக்காக வெளிக் கொணர்ந்துள்ளார்.<

தேவைப்படும் அன்பர்கள், திண்டுக்கல் தயவு நூல் அறக்கட்டளை அன்பர் திரு எஸ்.ஆர்.ராமலிங்கத்திடமும், மதுரை நாராயணபுரத்தில் உள்ள டோர்.நிர்.2/244-1ல் அமைந்துள்ள தயவுக் குழு உறுப்பினர் வீட்டிலும், மேலும், தூத்துக்குடி தயவு அன்பர் திரு கலியுக வரதன் அவர்கள் நடத்தும் வள்ளலார் நந்தவனத்திலும், கோயம்புத்தூர் தயா ஒளி இயக்கத்தில் திரு சிவக்குமார் அவர்களிடமும் பெற்று பயன் பெற வேண்டப்படுகிறது.

Title:
 
Comment:
 
(* login required)

    No results found.