தயா விளக்க மாலை
1. தயவு வாழ்வு
சுவாமி சரவணானந்தா
(1978)
தயவே இறைவன் தனியுரு காண்மின்
தயவக நின்றே வுகரனந் தங்கதிர்
தயவாய் அனகம் தழைத்திடு கின்றதை
தயவால் உணர்ந்து தயாசெயல் புரிமின்
தயாநடு வான சதசத் தான்மா
தகரத்(து) அகரமும் சார்தனி வுகரத் (து)
உகரமும் கூடி யகரம தாயொளிர்
ஆன்மா தான்நம் அருவுரு நிலையாம்
ஊன்மா மையுறு உலையுறு காலே
காயம் இல்பர காயம் அருவாம்
உருவே மேலும் மேலும் பல்லுரு
தருவது பக்குவம் சாருதற் பொருட்டே
சார்ந்தகத் தயாநிலை தணவா திருந்து
ஆர்ந்திட வேண்டும் அன்பொடு அவனியில்
சேர்ந்திடும் திருநிறை செம்பொருட் செல்வம்
நேர்ந்திடும் நிலைத்திடும் நித்திய வாழ்வே.
Content Ref: Dhayavilakka maalai
Write a comment