<<
Upcoming Events
Space Directory
Web Albums
Documents Download
Audio
Radio
Search in ThiruArutpa
Print
Post your comment

Dhayavup paamalar

Ramanujam
posted 44 months ago
26 Apr 2008 04:31:21 GMT 4:31:21 AM

1555 views


தயவுப் பாமலர்

இயற்றியவர் - திண்டுக்கல் சரவணானந்த சுவாமிகள்

 

தகர ஆகாசத் தனிவெளி நடுவே

யகர ஆன்ம அவிர்வடி வோடு

உகர ஒளிதனை யுலகெலாஞ் செலுத்திப்

பகரரும் பக்குவம் படைத்த வடிவம்

மன்னும் மானிடப் பிறப்புரு வாகும்

இந்நற் பிறப்பில் இறையியல் நிறைபெற

முன்னம் புலனுணர் முடித்து மேலெழ

புன்பிறப் பவையெலாம் போந்து போந்து

ஆறாம் புலனாம் அருமனம் தோற்றி

ஏறா நிலைமிசை இறையருள் ஏற்றிட

அவனோ டதுவாய் அலைவற இருந்து

தவறா தயாவினை சதாவும் புரிந்திட

தயவே நம்மியல் தயவே நஞ்செயல்

தயவே நம்முயிர் தயவே நம்முரு

தயவே நாமெனத் தலைநடு ஒளிரும்

தயவுச் சுடரே தன்தய வாலே

தகர யகர உகரம் மூன்றுமே

பகர மேனின்று பரவுதெவ் வயினும்

இகபர உயிர்க்கெலாம் இன்பு செய்திருப்பது

அகர முதல்வன் ஆணை ஆகும்.

சுகவாழ் விதுவே தொன்னூல் குறித்தது

அகமொடுங் காது அகமிருந்து அனகம்

தயாஞான தேகமேல் தனிச் சுகவடிவம்

இயாவருங் காணும் எழில்சுத்த உருவம்

எனுமுத் தேக இயலுரு நிலைத்திட

வனைந்த தயவுப் பாமலர் இவைகள்

அனைத்துல கவர்க்கும் அன்பருள் இன்பந்

தனைப்பெறச் செய்து தழைக்கவைப் பனவே.

 

content Ref:: Dhayavup Paakkal written by Swami Saravanananda
Tags:
Print
Post your comment
newest
oldest
post a comment

Login
Login to post your comments
Daeiou Team தயவுக் குழு.
☎: 91-97898 72120
2/244-1, Thandal Muthu Konar Street,
Narayanapuram (East),
Reserve Lines (Post)
MADURAI.14, Tamil Nadu, India-625 014
Home
Documents
Audios
Photo Albums

All the contents including articles, documents, audio and video on this DAEIOU - தயவு website is copyrighted and owner of this content. Everything on this website is for everyone free to use, distribute, email it, educational use, view, print, present, download as many times as you want but hosting in another website or making changes to the authors content, audio or documents and video without permission is prohibited.

Powered by VallalarSpace