DAEIOU - தயவு
2010 தைப்பூசத் திருவிழா-வடலூர் காட்சிகள்.

2010 தைப்பூசத் திருவிழா, வடலூர்--காட்சிகள்.இந்தப் படத்தில் இரும்புக் கம்பிச் சுற்றாலையும், வேல்கம்பிக் கம்பிச் சுற்றாலையும். அரைவட்டச் சுவரும், அருட்பெருஞ்ஜோதி அகண்ட தீபத்தின் தாய்ச் சுவரும் காணக் கிடைக்கின்றன. வள்ளல் பெருமான் கற்பித்த நால் வகை ஒழுக்க நெறிகளைக் கடைப்பிடித்து ஒழுகுபவர்கள் உள்ளே செல்லத் தகுதி படைத்தவர்கள். எஞ்சியவர்கள் தகுதியினை ஏற்படுத்திக் கொண்டு, நான்கு எல்லைகளையும் தாண்டி, உள்ளே சென்று அருட்பெருஞ் ஜோதி அகண்ட தீப தரிசனம் செய்யலாம் என்ற விதத்தில் இந்த சத்திய ஞான சபையினை வள்ளற் பெருமான் அமைத்துள்ளார். இந்த சத்திய ஞான சபையின் தத்துவ விளக்கத்தினை ஒரு நூல் வடிவில் திண்டுக்கல் சுவாமி சரவணானந்தா அவர்கள் 1938 ஆம் ஆண்டு எழுதி வெளியிட்டுள்ளார்.