சென்னையில் திரு அருட்பா இசை விழா.
நாள் 17.12.2008, 18.12.2008, 19.12.2008
இடம் - பசும்பொன் கல்யாண மண்டபம்.
நிர்.100, ஹபிபுல்லா சாலை, வடக்கு உஸ்மான் ரோடு,
டி.நகர், சென்னை.17.
திரு அருட்பிரகாச வள்ளற் பெருமான் மனித குலம் சுத்த சன்மார்க்க நெறியினை பின்பற்றி இறவாப் பெரு நிலை அடைய வேண்டும் என்பதற்காக 6,000 திரு அருட்பா பாடல்களை
பாடியுள்ளார்கள்.
அவை 6 திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன.
வடலூரில் வருடந்தோறும் திரு அருட்பா இசை விழா நடைபெறுகின்றது.
ஆனால் சென்னைப் பெருநகரில் பல்வேறு கான சபாக்கள் இருந்தும், வள்ளற் பெருமானின் திரு அருட்பாவிற்கென இதுவரை இசை விழா நடத்தவில்லை.
“இன்னிசையேந்தல்”
“அருட்பா இசை மணி”
திருபுவனம் திரு ஜி. ஆத்மநாதன் அவர்கள்,
வருடந்தோறும் சித்ரா பெளர்ணமி நாளில் முக்கியமான நகரங்களில், வள்ளலார் திரு அருட்பா இசை விழா நடத்தி வருகின்றார்.
அதன்படி, இந்த ஆண்டு, திண்டுக்கல்லில், சித்ரா பெளர்ணமி
நாளில், எட்டாவது ஆண்டு இசை விழாவாக நடத்தப்பட்டது.
சென்னையில் இயங்கி வரும் வள்ளலார் பன்னாட்டு சன்மார்க்க சங்க நிகழ்ச்சிகளிலும் திரு அருட்பாவினை இவர் பாடியுள்ளார்.
அவர்கள், கடந்த 2 வருடங்களாக சென்னையில் திரு அருட்பா இசை விழாவினை நடத்தி வருகிறார்கள்.
2007ஆம் ஆண்டில் - இரண்டாம் ஆண்டு திரு அருட்பா இசை விழா சென்னை திருவல்லிக்கேணி பாரதியார் இல்லத்தில் நடைபெற்றது.
இந்த 2008ஆம் ஆண்டில் - 3வது ஆண்டு திரு அருட்பா இசை விழாவாக மேற்கண்ட நாட்களில் நடத்துகின்றார்.
இந்தியா, சிங்கப்பூர் மலேசியா, யு.எஸ்.ஏ இணைத்துச் செயல்பட்டு வரும் வள்ளலார் ஆர்க் பெளண்டேஷன் மூலம் திரைப்பட இசை அமைப்பாளர் T.R. பாப்பா அவர்களால் இசை அமைக்கப்பட்ட
திரு அருட்பா ஆடியோ சி.டி 17.12.2008 அன்று வெளியிடப்படுகிறது
வெளியிடுபவர் - சென்னை உயர்நீதி மன்ற நீதியரசர்
உயர்திரு ராஜேஷ்வரன் அவர்கள்.
மற்றும் பல
இசை மேதைகள் எல்லாம் திரு அருட்பா இசை விழாவில் பங்கேற்க உள்ளனர்.
இந்த இணைய தளத்தில் இந்த செய்தியைக் காணும் லட்சக்கணக்கான சன்மார்க்க அன்பர்கள் தாங்கள் இந்த விழா குறித்துத் தெரிந்துகொள்வதுடன் அவ் விழாவில் பங்கேற்க வேண்டும்.
அதேபோல் தமது பகுதிகளில் உள்ள சன்மார்க்க சங்கங்கள் அனைத்திற்கும் இந்த செய்தியைச் சொல்லி, அவர்களையும் இவ் விழாவில் பங்கேற்கச் செய்ய வேண்டும்.
(செய்தி கொடுத்தவர் திருபுவனம் ஜி.ஆத்மநாதன் அவர்கள்- செல் 93801 25989.)
2 Comments
A. Sahasra namam, Chennai
திரு T.R. பாப்பா அவர்களீன் இசை அமைப்பில் பாடப்பட்ட் திரு அருட்பா
பாடல்கள் கொண்ட ஆடியோ சி.டி. வெளியிடும் விழா நடைபெறுகிறது.
அன்பர்களின் எண்ணம் போல் திரு அருட்பா பாடல்கள் கொண்ட ஆடியோ
சி.டி.களும் அங்கு விற்கப்படும்.