மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் காந்தியியல் இராமலிங்க அடிகளார் தத்துவத்துறை-குறிப்பு
Ramanujam
posted 39 months ago
23 Oct 2008 07:30:19 GMT 7:30:19 AM
1704 views
மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் காந்தியியல் இராமலிங்க அடிகளார் தத்துவத்துறை பற்றிய ஒரு குறிப்பு.
மதுரை காந்தியியல் இராமலிங்க அடிகளார் தத்துவத்துறைப் பேராசிரியர் வீரா. அழகிரிசாமி அவர்களைச் சந்தித்து, அங்கு நடைபெறும் நிகழ்வுகள் குறித்து விசாரிக்கப்பட்டது.
திரு N.M.R. சுப்புராமன் என்பவர், மதுரையில் வாழ்ந்த காலத்தில், மகாத்மா காந்தி அவர்களின் கொள்கைகளால் தீவிரமாக ஈர்க்கப்பட்டவர். அவரை மதுரை காந்தி என அழைத்தனர். இந்தத் துறை தனித்து இயங்குவதற்காக, அவருக்குச் சொந்தமான, இந்தக் கட்டிடத்தை மாதம் ஒரு ரூபாய் மட்டுமே வாடகையாகப் பெற்றுக் கொண்டு மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தி
ன் ஒரு பிரிவான காந்தியியல் ராமலிங்க அடிகளார் தத்துவத்துறை செயல்பட்டு வருகிறது.
தேசிய அளவில் அரசியல் தலைவர்கள் எல்லாம், இந்தக் கட்டிடத்திற்கு வருகை தந்து சென்றுள்ளனர். எனவே சரித்திர முக்கியத்துவம் வாய்ந்ததாகும் இந்தக் கட்டிடம்.
இக் கட்டிடம் மதுரை நகரில், சின்ன சொக்கி குளம் அருகே உள்ள வல்லபாய் படேல் ரோடில் அமைந்துள்ளது. கதவிலக்கம் எண்.3 ஆகும். இந்தக் கட்டிடத்தின் உரிமையாளர் மதுரை காந்தி என்பதாகும். இயற்பெயர் திரு N.M.R. சுப்புராமன் என்பதாகும். ஆனால் காந்தியின் மேல் கொண்ட அளவிட முடியாத பற்றினால், தனது பெயரினை மதுரை காந்தி என மாற்றிக் கொண்டதாக தெரிய வந்தது.
பேராசிரியர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்,துணை வேந்தராக இருக்கும்போது, பொள்ளாச்சி மகாலிங்கம் அவர்கள், நிதி உதவி அளித்து, இந்தத் துறை துவங்கப்பட்டுள்ளது. மகரிஷி அருணாசலம் அவர்கள், கெளரவப் பேராசிரியராக இருந்துள்ளார். பேராசிரியர் ம.ப.குருசாமி இயக்குனராகப் பணிபுரிந்துள்ளார். பேராசிரியர் ச.செயப்பிரகாசம் முதல் துறைத் தலைவராக பணிபுரிந்து கடந்த 2008ஆம் ஆண்டில் ஜூலை மாதம் பணி ஓய்வு பெற்றுள்ளார்.
தற்போது டாக்டர் திரு எஸ்.ஆண்டியப்பன் இந்தத் துறையின் தலைவராக உள்ளார். 1998 முதல் டாக்டர் வீரா.அழகிரிசாமி, விரிவுரையாளராகப் பணி புரிந்து வருகின்றார்.
இத் துறையில், வள்ளலார் தத்துவம், காந்திய சிந்தனை, அமைதித் தத்துவம், யோக தியானம் குறித்து இதுவரை 30 பேருக்கு மேல் டாக்டர் பட்டம் பெற்றுள்ளனர். 32 பேர் சமர்ப்பிக்கும் நிலையில் தொடர்ந்து செய்து கொண்டும் உள்ளனர்.
1998ஆம் ஆண்டுக்குப்பின் M.A. M.Phil-படிப்பில், வள்ளலார் தத்துவத்திற்கு தனித்தாள் ஒதுக்கப்பட்டது.
2000ஆம் ஆண்டிலிருந்து Diploma in Ramalinga Philosophy and Comparative Religion என்ற பட்டய படிப்பு கொண்டு வரப்பட்டுள்ளது.
வள்ளலாரின் ஜீவகாருண்ய ஒழுக்கத்தை "Yoga of Compassion" என்னும் தலைப்பில், திருவாளர்கள் ஜெயப்பிரகாசமும் & Herald Holloway (now in Canada) இணைந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளனர்.