திரு அருட்பா (லேட்) திரு ஆ.பாலகிருஷ்ண பிள்ளை அவர்களின் பதிப்பு. (Reprint)
Ramanujam
posted 39 months ago
23 Oct 2008 05:11:43 GMT 5:11:43 AM
1507 views
திரு அருட்பா (லேட்) திரு ஆ.பாலகிருஷ்ண பிள்ளை அவர்களின் பதிப்பு. (Reprint)
கிடைக்குமிடம் விவரம்
திரு அருட்பாவினை பல கால கட்டங்களில் பல நபர்கள் பெரு முயற்சி எடுத்து பதிப்பித்து, வெளியீடு செய்து வந்தார்கள். அவர்களில், திரு ஆ.பாலகிருஷ்ண பிள்ளை அவர்கள் திரு அருட்பாவினைப் பதிப்பித்து 6-9-1961 அன்று வெளியீடு செய்தார்கள்.
அவ்விதம் வெளியிட்ட திரு அருட்பா பதிப்பு ஒரு கால கட்டத்தில் தீர்ந்து விட்டது. அந்த பதிப்பு எங்கு கிடைக்கும் என்ற இடம் தெரியாமல் அன்பர்கள் இருந்தார்கள்.
அவர்களது ஆவலைத் தீர்க்கும் விதத்தில், சாரதா பதிப்பகத்தின் மூலம், 2006ஆம் ஆண்டில் டிசம்பர்மாதம் நான்கு வால்யூம்களாக திரு அருட்பா பாடல்கள் மறு பதிப்பு செய்து வெளியிடப்பட்டன.
இந்தப் பதிப்பைப் பார்க்கும் வாய்ப்பு, கோயம்புத்தூர் புத்தகக் கண்காட்சியில் கிடைத்தது. கோயம்புத்தூர் ஸ்ரீ ராம் கார்த்திக் பாலிமர்ஸ் நிறுவனர் திரு ராம்தாஸ் ஒரு பிரதியும், கோயம்புத்தூர் அருகே உள்ள மசக்காளிபாளையத்தில் உள்ள சன்மார்க்க அன்பர் திரு பிரபாகரன் அவர்களும், மதுரையிலிருந்து அந்த புத்தக ஸ்டால்.103ல் பணிபுரிய சென்றிருந்த தயவு அன்பர் ஒரு பிரதியுமாக அதனை வாங்கினர். அங்கு வாங்கியதால் அடக்க விலையில் 10% தள்ளுபடி செய்து தந்தனர்.
திரு ஆ.பாலகிருஷ்ண பிள்ளை அவர்கள் பி.ஏ.பி.எல். அட்வகேட் ஆக இருந்தார்கள். அவர்கள் சென்னை பச்சையப்பன் கலாசாலையில் தத்துவநூல் ஆசிரியராகவும் சென்னை சட்டக் கலாசாலையில் அறநூல் ஆசிரியராகவும், சென்னை இந்து ரிலிஜியஸ் எண்டோமெண்ட்ஸ் போர்டில் செக்ரடரியாகவும் கமிஷனராகவும் இருந்தவர் ஆவார்.
இந்த புத்தகம் பதிப்பித்தவர்கள்
சாரதா பதிப்பகம்.
6/16, தோப்பு வெங்கடாசலம் தெரு,
திருவல்லிக்கேணி, சென்னை 600 005.
தொலைபேசி 044 2844 3791 – 6514 0471 – 94440 82232.
நூல் கிடைக்குமிடம்
கெளரா ஏஜென்சீஸ்.
6/16. தோப்பு வெங்கடாசலம் தெரு,
திருவல்லிக்கேணி, சென்னை 600 005.
தெய்வ நிலையங்கள் மூலம் வெளியிடப்பட்ட திரு அருட்பா திருமுறைப் புத்தகங்களில் இல்லாத பல அரிய தகவல்கள் இந்தப் புத்தகங்களில் உள்ளன.
அவற்றின் புகைப்படங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.