DAEIOU - தயவு
வடலூரில் தொழுவூர் வேலாயுதனார் குறித்த படம்


தொழுவூர் வேலாயுதனார் குறித்த படம்-வடலூரில் கல்பட்டு ஐயா சமாதியில் இடம்பெற்றுள்ளது.

வள்ளற் பெருமானிடம் சென்று சங்கப் பாடல் என்பதாகச் சொல்லி, தாம் எழுதிய பாடலைக் கொடுத்து, அதற்கு பொருள் கேட்ட தொழுவூர் வேலாயுதனாரை அறியாதவர் யார்தான் உளர் ? அதன் உண்மையினை அறிந்து, பெருமானார் அவரை ஆட்கொண்டு அவரைத் தமது மாணாக்கராகவும் ஏற்றுக் கொண்டார். இது பெருமானின் அருட் கருணை.
இதன் பின்னர், பெருமானாருடனேயே தம் திருத் தொண்டினைத் தொடர்ந்தவர் தொழுவூர் வேலாயுத முதலியார் அவர்கள். அவர்கள் எவ்வாறு இருப்பார்கள் என்ற விவரம் வடலூரில் புகைப்பட வடிவில் இதுவரை எழுதி வைக்கப்படவில்லை. தற்போது அந்தக் குறையினைத் தீர்க்கும் வகையில், தொழுவூர் வேலாயுதனாரின் சித்திரத்தை, கல்பட்டு ஐயாவின் சரித்திரத்தின் அருகிலேயே வரைந்து வைத்துள்ளனர். அதன் அருகிலேயே தொழுவூர் வேலாயுதனாரின் பகைப்படமும் சித்திரமாக வரையப் பட்டுள்ளது.
இதனை விட்டால் அவருக்கு, சென்னையில், திருவொற்றியூர் பகுதியில் உள்ள ஒரு மாநகராட்சி நடத்தும் தொடக்கப் பள்ளி வளாகத்தினுள் ஒரு சிறு மண்டபம் எழுப்பி, அங்கேயே அவரது புகைப்படம் வரையப்பட்டு, அமர்ந்த நிலையில் உள்ளது போல அந்தப் புகைப்படம் வரையப்பட்டுள்ளது.
வடலூரில் தொழுவூர் வேலாயுதனார் குறித்த படம்

வடலூரில் தொழுவூர் வேலாயுதனார் குறித்த படம்