வடலூரில் 24.9.2008 தைப்பூச நாளின்போது கண்ட காட்சிகள்
வடலூரில் உள்ள பேருந்து நிலையம் தற்போது வள்ளலார் பேருந்து நிலையம் என பெயர்ப் பலகை தாங்கி நிற்கிறது.
வள்ளற் பெருமானால் ஏற்றி வைக்கப்பட்ட அணையா அடுப்பு அளவிறந்த நெடுங்காலமாக எரிந்து, ஏழை எளிய மக்களின் பசிப் பிணியினைப் போக்கி வருகிறது. தெய்வ நிலையங்கள் பராமரிக்கும் தருமச்சாலையில் ஒரு கால கட்டம் வரை தரையில்தான் பாய் விரிக்கப்பட்டு, உணவு பரிமாறப்பட்டு வந்தது. ஆனால், கடந்த 9 மாதங்களுக்கும் மேலாக, அந் நிலை மாற்றப்பட்டு, டைனிங் டேபிள் போடப்பட்டு, அதன் மேல் உணவு பரிமாறப்படுகிறது.
உணவருந்துவதற்கு, இங்கு வரும் வயோதிகர், நலிந்தவர்கள், உடல் ஊனமுற்றோருக்கு, இது ஒரு வரப்பிரசாதமாகத் திகழ்கிறது.
Write a comment