DAEIOU - தயவு
12.10.08-கோயம்புத்தூர் கிருஷ்ணாபுரம் ஷ்ரீ ராம் கார்த்திக் பாலிமர்ஸ்-வள்ளலாரின் திரு அவதார தின விழா.

கோயம்பத்தூரில் 12.10.2008 ஞாயிற்றுக் கிழமையன்று ஸ்ரீ ராம் கார்த்திக் பாலிமர்ஸ் நிறுவனம் நடத்தும் வள்ளற் பெருமானின் 186-வது ஆண்டு திரு அவதார விழா மற்றும் கம்பெனியின் 17வது ஆண்டு விழா.
பிரதி வருடந்தோறும் வள்ளற் பெருமானின் திரு அவதார தினத்தன்று விழா எடுத்து, சுத்த சன்மார்க்கம் மற்றும் தயவுப் பெருநெறியினை பொதுமக்களிடம் பரப்புவதை, கோயம்புத்தூர் நகரில், கிருஷ்ணாபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ராம் கார்த்திக் பாலிமர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் திரு வி.எஸ். இராம்தாஸ் அவர்கள், தனது நிறுவன ஊழியர்களுடன் தொடர்ந்து பல ஆண்டுகளாகச் செய்து வருகின்றார்.
நடப்பு ஆண்டில், வரும் 12.10.2008ஆம் நாளன்று ஞாயிற்றுக் கிழமை, அந் நிறுவனத்தினர் கீழ்க்கண்ட விதத்தில் வள்ளற் பெருமானின் 186-வது திரு அவதார தினத்தைக் கொண்டாட உள்ளனர். அத்துடன் தமது நிறுவனத்தின் 17ஆம் ஆண்டு விழாவினையும் அவர்கள் கொண்டாட உள்ளனர்.
நிகழ்ச்சி நடைபெறும் இடம் :-
ஜோதி மண்டபம், கெளமார மடாலயம், சின்ன வேடம்பட்டி,
கோயம்பத்தூர்.6.
நேரம் காலை 7.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை.
நிகழ்ச்சி நிரல்.

7.00a.m.
8.00
அகவல் பாராயணம்
8.00
8.30
சிற்றுண்டி - இடைவெளி
8.30
8.40
சன்மார்க்க கொடியேற்றம்.
8.40
8.50
உறுதி மொழி
8.50
9.00
கடவுள் வாழ்த்து
9.00
9.15
வரவேற்புரை-தயுவுத் திரு P. இராமச்சந்திரன்
9.15
9.25
ஆண்டறிக்கை தயவுத்திரு P. ஜோசப் ஸ்டாலின்
9.25
10.10
வள்ளலார் வருகையும் கடவுள் உண்மையும் SRKP உரிமையாளர் தயவுதிரு V.S. இராம்தாஸ் அவர்கள்
10.10.
10.30
விஞ்ஞானமும் மெய்ஞ்ஞானமும்-தயவுத்திரு L. ராஜாராம்.
10.30
11.15
வாழ்வே வசந்தம் தயவு திரு வேதபுரி
11.15
11.30
Everlasting Happiness தயவுத்திரு T. செந்தில்குமார் (SRKP)
11.30
11.45
“பெண்மணி அவள் கண்மணி”- உரை சித்திரம் (திருமதி லட்சுமி, வேணி, மேரி, செல்வி, பாக்யா, இந்து, செல்வராணி, சரிதா)
11.45
12.05
ஜீவகாருண்யமே ஆன்மீகம் தயவுதிரு S. ராமச்சந்திரன்
12.05p.m.
12.40
Peoples for animals-தயவு திருமதி கல்பனா வாசுதேவன்
12.40
12.55
மனமும் மனிதனும் சின்னவேடம்பட்டி குழந்தைகள்-தயவுதிரு சிவகுமார்.
12.55
1.00
சன்மார்க்க அனுபவங்கள்-தயவுதிரு பிரபாகரன்
1.00
2.00
மதிய உணவு இடைவெளி
2.00
2.15
தயவின் பார்வையில் உட்பகைவர்கள் (SRKPஊழியர்கள்)
2.15
2.35
ஜூனியர் வினா விடை நடத்துபவர் தயவு திரு முருகன்
2.35
2.50
சீனியர் வினா விடை
2.50
3.05
இன்றைய சூழ்நிலையில் சுத்த சன்மார்க்க நெறி சாத்தியமா (வழக்காடு மன்றம்)
தயவுத்திருவாளர்கள் மோகனசுந்தரம், சுரேஷ், நேரு. சங்கர், கமலபாஸ்கர், கோபாலகிருஷ்ணன்
3.05
3.15
துன்பம் நீங்க கருணையே திறவுகோல்-தயவுதிரு முனீஸ்வரன், நாகராஜ், பூபாலன், சவுந்தரராஜ், மணிகண்டன் (Sub contractors)
3.15
3.45
குழந்தைகள் வளர்ப்பில் பெற்றோரின் பங்கு-தயவுதிரு V.S.பாலகிருஷ்ணன்
3.45
4.20
இசை அமுது
4.20
4.30
மனதில் பதிந்தவை
4.30
4.50
பரிசு வழங்குதல்
4.50
5.00
நன்றியுரை
5.00
--
தேசீய கீதம்.

இந் நிகழ்ச்சியினை, வழக்கமாக தமது நிறுவனத்திலேயே கொண்டாடும் இந் நிறுவனத் தலைவர், இந்த முறை, சின்ன வேடம்பட்டியில் அமைந்துள்ள கெளமார மடாலய வளாகத்தினுள் உள்ள ஜோதி மண்டபத்தில் நடத்த உத்தேசித்துள்ளார். இந்த ஜோதி மண்டபத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளை 1,000 நபர்கள் பார்க்கும் வகையில் மண்டபம் உருவாக்கப்பட்டுள்ளது.
கெளமார மடத்தின் சிறப்பு, அங்கு அமைந்துள்ள முருகன் கோவில் ஆகும். அதன் தலைவராக அப்போது இருந்த திரு சுந்தரம் சுவாமிகள், கடந்த 1988ஆம் ஆண்டில், பொள்ளாச்சி தொழில் அதிபர் தயவுத் திரு என். மகாலிங்கம் அவர்களுடன், இணைந்து, 108 யானைகளை ஒருசேரக் கொண்டு வந்து ஒவ்வொரு யானைக்கும் பூஜை செய்து, கோயம்புத்தூர் நகரினையே வலம் வர வைத்தார். அக் காட்சி, ஒரு கண்கொள்ளாக் காட்சி ஆகும். பொது மக்கள் மனத்தில் என்றென்றும் நீங்காத நினைவாக அது தங்கி விட்டது.
இவ்வளவு எண்ணிக்கையிலான யானைகளை ஒருசேரக் கொண்டு வந்து சேர்த்து, கஜ பூஜை செய்தது, ஒரு வரலாற்றுப்பெருமை வாய்ந்ததாகும். உலக நன்மைக்காக யாகம் வளர்த்தும், அப்போது “கஜ பூஜை” செய்யப்பட்டது. அந்த விசேஷத்தில், பெரிய மாகன்கள் வந்து கலந்து கொண்டு ஆசி வழங்கிச் சென்றனர்.அதனை நினைவு கூறும் வகையில், ஒரு கல் யானை அங்கே எழுப்பப்பட்டுள்ளது. சிறிது காலம் வரையில் அங்கு அணையா ஜோதி ஏற்றி வைக்கப்பட்டும் பராமரிக்கப்பட்டு வந்தது.
இந்த கெளமார மடத்தில் ஒரு மேல் நிலைப் பள்ளியும் இயங்கி வருகிறது. கூடிய விரைவில் இங்கு International Standardல் ஒரு பள்ளியைத் துவங்கும் முயற்சியும் - கைகூடும் நாள் வெகு விரைவில் ஏற்பட உள்ளது.
முன்னர், 2 நாட்கள் கோயம்புத்தூரில் சன்மார்க்க உலக மாநாடு நடைபெறுவதற்காக, இந்தக் கெளமார மடத்திற்குச் சொந்தமான இடத்தில் அதனை நடத்திக் கொள்ள இடம் அளித்தனர்.
தற்போது, அப் பெருமை வாய்ந்த இடத்தில் உள்ள ஜோதி மண்டபத்தில், கார்த்திக் பாலிமர்ஸ் நிறுவனத் தலைவர் இவ் விசேஷ நிகழ்ச்சியினை நடத்த உத்தேசித்துள்ளார்.
இந்த விழாவிற்கு அனைத்துத் தரப்பு மக்களும், இதனையே அழைப்பாக ஏற்று வருகை தந்து சிறப்பிக்கும்படி, இந் நிறுவனத்தின் தலைவர் திரு V.S. ராம்தாஸ் அவர்கள் கேட்டுக் கொள்கின்றார்.
தயவுடன் வருக தயா நலம் பெருக.
http://www.vallalarfiles.com/image/iIDEGSGgrgChDNfLKVpHLQ,$,3d,$,3d/sz-tn650/Inv01.jpg18740000.jpg
http://www.vallalarfiles.com/image/2bOSbo,$,2fVN7hSxbJQ4P6z7g,$,3d,$,3d/sz-tn650/Inv02.jpg18760000.jpg
http://www.vallalarfiles.com/image/F,$,2fXD8tuAbfF0SmroGzkM8A,$,3d,$,3d/sz-tn650/Inv03.jpg18780000.jpg
http://www.vallalarfiles.com/image/l9fWum5b37ia9E,$,2fRkzgy0A,$,3d,$,3d/sz-tn650/Inv04.jpg18800000.jpg