சத்திய ஞான சபை, வடலூர்
சபையைச் சுற்றியுள்ள இரும்புச் சங்கிலி
ஒரு விளக்கம்.
(பிரணவத்தின் உகர தத்துவமாகிய வாயு சக்தியை விளக்குவதற்குநம் ஞான சபையின் சுற்றாலைக்குப் புறம்பே இரு கண்ணுள்ள இருப்புச் சங்கிலியை இரட்டையாய் மடித்து ஞான சபையை முற்றிலும் சூழ பந்தித்திருக்கின்றனர். இச் சங்கிலித் தொடரில் மொத்த வளையங்கள் இருபத்தோராயிரத்து அறுநூறு (21,600). இது மனிதனுடைய நித்திய சுவாச எண்ணிக்கையாகவுள்ளது. இது உகர தத்துவமாகிய வாயு சக்தியையும், இரண்டென்ற எண்ணையும் விளக்கிற்றென்க) – சுவாமி சரவணானந்தா, திண்டுக்கல்.
சத்திய ஞான சபையினைச் சுற்றி இரு கண்ணுள்ள இரும்புச் சங்கிலி, வள்ளற் பெருமான் காலத்தில் நிறுவப்பட்டு, இன்றளவும் அது துருப்பிடிக்காமல் உள்ளதை சன்மார்க்க அன்பர்கள் அனைவரும் அறிவர்.
சத்திய ஞான சபைக்கு வரும் சன்மார்க்கிகள் / பொது மக்கள், இந்த இரும்புச் சங்கிலியில் உள்ள இறை சக்தியை உணர்ந்தோர் ஆவர். இதனை தமது உடம்பு முற்றும் படும்படியாகத் தொட்டு வைத்துக் கொண்டாலே, தமக்கு நோய் நொடி ஏதும் வரும் அபாயம் இல்லை. மேலும், தம்முடன் இருக்கும் நோயும் பறந்து விடும் என்ற நோக்கில், வள்ளற் பெருமான் அவர்கள் வடிவமைத்த அற்புதத் திருக்கோவிலான சத்திய ஞான சபையைச் சுற்றியுள்ள இரும்புச் சங்கிலிகளைக் கருதுகின்றனர்.
இதனை, வயது வித்தியாசம் இன்றி, அங்கு வருவோர் எல்லாம் போற்றி, தொழுது, தமது உடம்பினைச் சுற்றிப் பிணைத்து, வணங்கிவிட்டுச் செல்கின்றனர்.
கடந்த 24.9.2008ந் தேதியன்று, வடலூரில் கண்ட காட்சிகள், இந்த இணைய தளத்தினைக் காணும் அன்பர்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படுகின்றது.
இணைப்பு - போட்டோக்கள்
Write a comment