DAEIOU - தயவு
5.10.08 காஞ்சீபுரம் வள்ளலார் தெய்வ நிலையத்தில் அவதார தின விழா நிகழ்ச்சிகள்.

5.10.2008 காஞ்சீபுரம் வள்ளலார் தெய்வ நிலையத்தில் அவதார தின விழா நிகழ்ச்சி
வள்ளற் பெருமான் அவதரித்த நாளான இன்று (5.10.2008) காஞ்சீபுரம் மாமல்லன் நகரில் அமைந்துள்ள வள்ளலார் தெய்வ நிலையத்தில், அதிகாலை சுமார் 5.00 மணி அளவில், மேற்படி நிலையத்தின் குழு உறுப்பினர்கள் ஆகிய கீழ்க்கண்டோர் வந்திருந்து அருட்பெருஞ்ஜோதி அகவலைப் பாராயணம் செய்தனர்.
வருகை தந்தவர்கள்
திரு ஜெயவேல், ட்ரஸ்ட் மெம்பர்.
திரு அஷோக் குமார், பொருளாளர்.
திரு வெங்கடேசன், செயலாளர்
திரு ராமலிங்கம், உபதலைவர்.
திரு கோதண்டராமன்,
திரு பாலாஜி,
திரு பழனி,
திரு மணி,
திரு வெற்றிவேல்
திரு அன்பழகன்
அவரது 2வது மருமகன் மற்றும்
அருகிலுள்ள சன்மார்க்க அன்பர்களும், பொதுமக்களும்..
பெருமானார் காட்டிய சுத்த சன்மார்க்க அருள் நெறி அகில உலகமெங்கும் பரவ வேண்டும் என்று அனைவரும் வேண்டியதுடன், எல்லா உயிர்களும் இன்புற்று வாழ வகை செய்ய வேண்டிய பின், காலை சுமார் 9.00 மணி அளவில் இக் கூட்டம் நிறைவு பெற்றது.
அதன்பின் வந்திருந்த அனைவருக்கும் காலை அன்னதானம் வழங்கப்பட்டது.