9/16/2008 10:55:57 PM by தயவுக் குழு அன்பர்
திரு அருட்பா திரு ஆ.பாலகிருஷ்ண பிள்ளை பதிப்பு
கிடைக்குமிடம்.
திரு அருட்பா ஆறாந் திருமுறை மறு பதிப்பு
வெளியிடப்படவுள்ள தகவல்.
பிரேமா பிரசுரம், சென்னை.
திரு அருட்பா ஆறாந் திருமுறை அனைத்து சன்மார்க்க அன்பர்களாலும் வேண்டப்படும்
நூலாகும்.
]
பல நேரங்களில் வடலூரில் தெய்வ நிலைய புத்தக ஸ்டாலில் அது கிடைக்கப் பெற்றாலும், சமீபத்தில் 6ந் திருமுறை கிடைக்கவில்லை என்ற தகவல்தான் வரப் பெறுகிறது.
கோயம்புத்தூரில் 14.4.2008 முதல் 24.4.2008 வரை நடைபெற்ற புத்தகக் கண்காட்சியில், ஸ்டால் எண்.103-க்கு, திரு அருட்பிரகாச வள்ளற் பெருமானின் புத்தகங்கள் அனைத்தும் வடலூர் தெய்வ நிலையங்களால் அனுப்பி வைக்கப்பட்டு, அங்கு விற்பனை ஆகின.
இருப்பினும், 6ந் திருமுறை கேட்ட அன்பர்களுக்கு, ஸ்டாலில் இருந்த அன்பர்கள் (இல்லை என்ற பதிலைச் சொல்லாமல்) ஒருவிதமான பதிலைச் சொல்லி அனுப்ப வேண்டியதாகி விட்டது. தெய்வ நிலைய அலுவலர்கள் அதனை மறு பதிப்பு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்ற செய்தியும் கிடைக்கப் பெற்றது.
புத்தக ஸ்டால் என்று போட்டு அமர்ந்த பிறகு அங்கு வரும் அன்பர்களின் கேள்விக் கணைகளுக்கு பொறுப்பில் இருந்த அன்பர்கள், உரிய பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
முன்னர் வெளியிடப்பட்ட திரு ஆ.பாலகிருஷ்ண பிள்ளை பதிப்பு கிடைக்கவில்லை என்ற குறையை, சென்னை திருவல்லிக்கேணி 6/16 தோப்பு வெங்கடாசலம் தெருவில் இயங்கி வரும் சாரதா பதிப்பகம் தீர்த்து வைத்தது.
ஏற்கனவே இது குறித்த செய்தி இந்த இணைய தளத்தில் வெளியிடப்பட்டது.
அந் நூல். கெளரா ஏஜென்ஸீஸ் மூலம் அதே விலாசத்தில் கிடைக்கப் பெறுகிறது. (போன் 044-2844 3791 செல் 94440-82232).
4 வால்யூம்கள் அடங்கிய அதன் விலை– ரூ.1,000/- ஆகும்.
அதேபோல், தற்போது, திரு அருட்பா 6ந் திருமுறையினை, சென்னையில் உள்ள பிரேமா பிரஸ் நிறுவனத்தினர் வெளியீடு செய்யும் முயற்சியில் உள்ளனர் என்ற தகவல் வரப் பெறுகிறது.
அந்த வெளியீடு - அனேகமாக 2008 அக்டோபர் மாதம் கிடைக்கப் பெறும் என்ற தகவலும் அன்பர்களின் கவனத்துக்காக இங்கே தரப்படுகிறது.