24.9.2008 வடலூரில் வள்ளலார் ஸ்பேஸ் இணைய தளம் குறித்த பயிற்சி முகாம்
Ramanujam
posted 43 months ago
16 Sep 2008 16:23:28 GMT 4:23:28 PM
1723 views
வடலூரில் 24.9.2008 அன்று வள்ளலார் ஸ்பேஸ் இணைய தளம் குறித்த பயிற்சி வகுப்பு
வரும் 24.9.2008 அன்று புதன் கிழமை இந்த மாத பூச நாள் விசேடம், வடலூரில் நடை பெற உள்ளது.
ஏற்கனவே, வள்ளலார் ஸ்பேஸ் www.vallalarspace இணைய தளம் உருவான போது, இது குறித்து ஏற்படும் சந்தேகங்களுக்கு, ஒரு நிவர்த்தி செய்யும் விதத்தில் தமிழ்நாட்டில் உள்ள எல்லா மாவட்ட சன்மார்க்க சங்கங்களுக்கும் 2 மாதங்களுக்கு முன்பு கடிதம் அனுப்பப் பட்டது.
கம்ப்யூட்டர் பயிற்சி பெற்ற நபர்களை அந்த முகாமிற்கு அனுப்பி உரிய பயிற்சியினைப் பெற்றுச் செல்லும்படியும் கேட்டுக் கொள்ளப் பட்டிருந்தது.
குறிப்பாக, 6 மாவட்டங்கள் தவிர வேறு எந்த சங்கத்திடமும் இது குறித்து, பதில் ஏதும் வரப்பெறவில்லை.
வரும் 24.9.2008ந் தேதியில், ராமநாதபுரம் மாவட்டத் தங்கல் மனையில் வள்ளலார் ஸ்பேஸ் இணைய தளம் குறித்த பயிற்சி வகுப்பு நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்த இணைய தளத்தில் ஸ்பேஸ் டைரக்டரியில் இடம் பெற்றுள்ளவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கான விளக்கம் அன்றைய தேதியில் தக்க சன்மார்க்க அன்பர்களைக் கொண்டு நடத்தப்படும்.
இவ் வாய்ப்பினை, ஏற்கனவே ஸ்பேஸ் டைரக்டரியில் இடம்பெற்றுள்ள சன்மார்க்க சங்கங்கள் பயன்படுத்திக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றன.
அவை தவிர, ஏற்கனவே, இயங்கி வரும் சங்கங்களில், திரு அருட்பிரகாச வள்ளற் பெருமானின் சுத்த சன்மார்க்க கொள்கைகளைப் பரப்பி வரும் சன்மார்க்க சங்கங்கள் ஏதேனும் இணைய தளத்தில், தமது பதிவுகளை மேற்கொள்ள வேண்டுமாயின், அவை குறித்த, செயல்பாட்டிற்கான ஆதாரங்கள் பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள் முதலானவற்றுடனும், சங்கச் செயலாளரிடம் இருந்து, விண்ணப்பமும் பெற்று வரும்படியும் கேட்டுக் கொள்ளப் படுகின்றது.