<<
Upcoming Events
Space Directory
Web Albums
Documents Download
Audio
Radio
Search in ThiruArutpa
Print
Post your comment

வந்தாச்சு..வந்தாச்சு.. செல் போனில் ரிங் டோனாக.. திரு அருட்பா வந்தாச்சு ..

Ramanujam
posted 40 months ago
12 Sep 2008 05:01:28 GMT 5:01:28 AM

2394 views


செல் போனில் திரு அருட்பா ரிங் டோன் ஏர் செல் நெட் ஒர்க் மூலம் வள்ளலார்.ஆர்க்  ஏற்பாடு.

 

        திரு அருட்பிரகாச வள்ளற் பெருமான்,  சுத்த சன்மார்க்க நெறி அகில உலகமெல்லாம் பரவுவதற்கும், தினமும் பிறந்து பிறந்து பின் இறந்து கொண்டிருக்கும்,  இந்த மனித சமுதாயம், தாம் அடைந்த இறவாப் பெருநிலையினை (deathlessness) அடைய வேண்டும் என்ற பேரவாவின் காரணமாகவும்,  கிட்டத்தட்ட 6,000 திரு அருட்பாப் பாடல்களை பாடிவைத்துச் சென்றுள்ளார்.

 

        அவை 6 திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டு, எல்லா சன்மார்க்க சங்கங்களிலும், வந்தனை வழிபாடு செய்வதற்கும், அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை மனமுருகி வழிபடவும் பயன்பட்டு வருகின்றன. இந்தச் செய்தி எல்லாம்,  ஏற்கனவே, இந்த சன்மார்க்க உலகம் அறிந்த ஒன்றுதான்.

 

         தற்போதைய காலம், எலக்ட்ரானிக் துறையில் மிகுந்த முன்னேற்றம் அடைந்த காலமாகும். அதன் தாக்கமாக, ஒவ்வொருவரும், தம் கைகளில் செல் போன் கொண்டு செல்கின்றனர்.

 

     இன்று வெளியிடப்படும் திரைப்படங்களுக்கெல்லாம் கூட ரிங் டோன் செல் போனில் அப்போதைக்கப்போது கடைகளில் கிடைக்கப் பெறுகிறது. அதில் நாட்டம் கொண்ட மக்கட் சமுதாயம், ஆர்வமாக, அதனை அடைந்து வருகிறது.

 

        வள்ளற் பெருமான் இயற்றிய திரு அருட்பா பாடல்களையும் செல் போன்களில், ரிங் டோனாக வைத்துக் கொள்ளும் வசதி இருந்தால், எவ்வளவு நன்றாக இருக்கும்.

 

          எங்கு சென்றாலும், திரு அருட்பாவினைக் கொண்டு செல்வது ஒரு சன்மார்க்கியின் கடமை என்றிருந்தாலும் கூட, நினைத்த இடத்தில், நினைத்த நேரத்தில், திரு அருட்பாப் பாடல்களைக் கேட்பதற்கு இது போன்ற ரிங் டோன் என்ற ஒரு ஏற்பாடு இருந்தால் வரும் அழைப்புக்களெல்லாம், வள்ளற் பெருமானே நம்மை அழைப்பது போன்ற ஒரு வாய்ப்பினை ஏற்படுத்துமே, என்ற  எண்ணம், ஒவ்வொரு சன்மார்க்க அன்பரின் மனத்திலும் பல வருடங்களாக இருந்து வருகிறது.

 

       திரு அருட்பா பாடல்கள் அனைத்தையும், ஆடியோ சி.டி மூலம் மக்கள் சமுதாயம் கேட்டு இன்புற வேண்டும் என்ற விதத்தில், ஏற்கனவே, திரு அருட்பா தெய்வ இசை அமுதம் ப்ரொஜெக்ட் திரு அருட்பாக்களுக் கெல்லாம் -  இசை அமைக்கும் பணியினை - தக்க கலைஞர்களைக் கொண்டு, ஏற்பாடு செய்து வருகிறது. திரு தர்மலிங்க சுவாமி அவர்கள் இதற்குப் பொறுப்பேற்று,.செயல் பட்டு வருகிறார்.

 

 

        மேலே குறிப்பிட்ட சன்மார்க்க அன்பர்களின் மனக் குறையினைப் போக்கும் விதத்தில், வள்ளற் பெருமானின் பெருங்கருணையினால், திரு அருட்பா தெய்வ இசை அமுதம் மூலம், ஏர்செல் நெட் ஒர்க் மூலம், இனிமேல், திரு அருட்பாக்களை ரிங் டோனாக செட் செய்து கொள்ளும் நடைமுறை தற்போது அமுல் செய்யப்பட்டுள்ளது.

 

வள்ளலார் ஆர்க் நிறுவனம் மூலம், சிங்கப்பூரில் திரு அருட்பா தெய்வ இசை அமுதம் ப்ரொஜெக்டினைச் (Thiru Arutpa Deiva Isai Amutham Project) செயல்படுத்தி வரும் சன்மார்க்க அன்பர் திரு சிவக்குமார், இது குறித்து, சுவாமி இமயஜோதி ஞானானந்தா அவர்களிடம், சன்மார்க்க அன்பர்களும், ஏனைய பொதுமக்களும், திரு அருட்பா பாடல்களை ரிங் டோனாக செட் செய்யும் வசதியினைப் பெறும் ஏற்பாட்டினைச் செய்து தரும்படி கோரியுள்ளார்.

 

சுவாமி இமயஜோதி ஞானானந்தா அவர்களும், இதற்கான ஏற்பாட்டினை, ஏர்செல் நிறுவனத்தின் மூலம் செயல்பாட்டிற்குக் கொண்டு வந்து, அகில உலகமெங்கும் வசிக்கும் சன்மார்க்க அன்பர்களும் மற்றையோரும், திரு அருட்பா பாடல்களை ரிங் டோன் மூலம் பெறும் வசதியினை ஏற்படுத்தித் தந்துள்ளார்.

 

ஞான சித்தர்களின் காலமான தற்போதைய காலத்தில், அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரின் கருணை எவ்வாறெல்லாம் அன்பர்களைச் சென்றடைகிறது என்பதற்கு, இதுவே ஒரு சான்றாகும்.

 

இவ்விதம் திரு அருட்பாவினை, ரிங் டோனாக செட் செய்து கொள்ளும் வசதியினை அன்பர்களுக்கு பெற்றுத் தந்ததற்கு, சுவாமி இமயஜோதி ஞானானந்தா அவர்களுக்கும், ஏர்செல் நெட் ஒர்க் நிறுவனத்திற்கும், வாய்ப்பினை ஏற்படுத்த வழி வகுத்த சிங்கப்பூர் சன்மார்க்க அன்பர் திரு சிவக்குமார் அவர்களுக்கும், சன்மார்க்க உலகம், தன் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றது.

 

 எந்தெந்த திரு அருட்பா பாடல்கள் எல்லாம் தற்போது ரிங் டோனாக கிடைக்கும் என்ற விபரத்தினை சிங்கப்பூர் அன்பர் திரு சிவக்குமார் அவர்கள்,  கீழே குறிப்பிட்டுள்ளார்.

 












































































வரிசை எண்


கோடு எண்


திரு அருட்பா பாடல்


1.


DT.13455


அடியன் ஆக்கி


2.


DT.13456


அற்புதம் அற்புதமே


3.


DT.13457


அருள் ஜோதி


4.


DT.13458


எல்லாம் செயல் கூடும்


5.


DT.13459


ஜோதி ஜோதி


6.


DT.13460


கண்ணே கண்மணியே


7.


DT.13461


கற்றதென்றும் சாகாத


8.


DT.13462


நேயா நின்னை


9.


DT.13463


தெண்டனிட்டேன் என்று சொல்லடி


10.


DT.13464


தன்னை அறிந்து


11.


DT.13465


உன்னை மறைக்கின்றேன் என்றல்


12.


DT.13466


வானத்தின் மீது


13.


DT.13467


வேதாந்த நிலை



 

செல் போனில், மேற்காணும் திரு அருட்பா பாடல்களை, ரிங் டோனை பெறும் முறை        -

 

1.                              முதலில் DT என்று டைப் செய்து 55656 எண்ணுக்கு SMS அனுப்பவும்.

2.                            அடுத்து உங்களுக்கு “உங்களது கோரிக்கை நடைமுறைப் படுத்தப்படும்” என்ற செய்தி வரும்.

3.                            அடுத்த 6 மணி நேரத்தில், நீங்கள் விரும்பி கொடுத்த D.T எண்ணில் அடங்கிய திரு அருட்பா உங்களது செல் போனில் ரிங் டோனாக கிடைக்கும்.

 

       அனைவரும் திரு அருட்பிரகாச வள்ளற் பெருமானின் திரு அருட்பாவினை செல் போனிலும் ரிங் டோனாகக் கேட்டு இன்புறுங்கள்.
Tags:
Print
Post your comment
newest
oldest
post a comment

Login
Login to post your comments
Daeiou Team தயவுக் குழு.
☎: 91-97898 72120
2/244-1, Thandal Muthu Konar Street,
Narayanapuram (East),
Reserve Lines (Post)
MADURAI.14, Tamil Nadu, India-625 014
Home
Documents
Audios
Photo Albums
Articles

All the contents including articles, documents, audio and video on this DAEIOU - தயவு website is copyrighted and owner of this content. Everything on this website is for everyone free to use, distribute, email it, educational use, view, print, present, download as many times as you want but hosting in another website or making changes to the authors content, audio or documents and video without permission is prohibited.

Powered by VallalarSpace